படம் பின்னே… நிஜம் முன்னே…! கதறி அழும் பெண் போலீஸ்!

காக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது! உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல்! உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான்.

ஒரு லேடி கான்ஸ்டபுளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் போலீஸ் அதிகாரியின் ஆடியோ பதிவு, இன்றளவும் பிரசித்தம். இதை மையமாக வைத்துதான் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. பாரதிராஜா உள்ளிட்ட தமிழ்சினிமாவின் பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். அறம், அருவி வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய படம் ‘மிக மிக அவசரம்’ என்ற வாழ்த்துக் குரல்கள் மெல்ல கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்க வீதிகளில்.

இந்தப்படம் சொல்லும் கருத்தோடு, மேலும் ஒரு நிஜம் நடமாட ஆரம்பித்திருக்கிறது இன்று. பெண் ஆய்வாளர் ஒருவர் பணி சுமை காரணமாக தற்கொலை முடிவெடுத்து அதை வாட்ஸ் ஆப்பில் பதிவிட, அவசரம் அவசரமாக தலையிட்டு அப்பெண் ஆய்வாளரை காப்பாற்றியிருக்கிறது போலீஸ். அதுமட்டுமல்ல… மேற்படி அதிகாரிக்கு இப்போது கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

மிகமிக அவசரம் படம் திரைக்கு வந்து சேர்வதற்குள் அப்படத்தின் கருத்துக்கு வலு சேர்க்கும் சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனை நிகழுமோ? அச்சமாக இருக்கிறதே….!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Bouncers-with-Rajinikanth
இந்த பவுன்சர்களோட தொல்லை தாங்க முடியலைப்பா! மன்னிக்கப்பட வேண்டிய மலேசிய கலைவிழா!

‘கொசு அடிக்க கொம்பேறி மூக்கனை வளர்க்க வேண்டியதாப் போச்சு...’ என்று பில் கொடுக்கும் நேரத்தில் புலம்பினாலும் புலம்புவார்கள். நாம் சொல்கிற இந்த கொம்பேறி மூக்கர்கள் ‘பாடி ஷேப்’...

Close