வேஷ்டி விளம்பரத்தில் கூட நடிக்க மாட்டேன்! ராஜ்கிரண் பிடிவாதம் ஏன்?

இனிமேல் எந்த மோசடி விளம்பரத்தில் நடித்தாலும், அதில் தோன்றிய நடிகர் நடிகைகளுக்கும் ஏழரை காத்திருக்கிறது. இப்படியொரு சட்டம் வந்த பின்பு அடக்க ஒடுக்கமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். சீட்டு கம்பெனி, வேலை சம்பளத்துடன் படிப்பு என்று உதார் காட்டும் கல்வி நிறுவனங்கள் என்று சகலத்திலும் மூக்கை நுழைத்த நடிகர் நடிகைகளுக்கு இப்படி கிடுக்கிப்பிடி விழுந்தாலும், பிரச்சனையில்லாத விளம்பரங்கள் என்றும் பல இருக்கிறதல்லவா? அதில் கூட தலையை காட்ட மாட்டேன். அது என் பாலிஸி என்று வாழும் அஜீத் போன்ற மிக சிலரில், ராஜ்கிரணும் ஒருவராகியிருக்கிறார்.

எல்லா படத்திலும் வேஷ்டி கட்டிட்டு வர்ற நீங்க, அந்த விளம்பரத்துல கூட நடிக்க மாட்டேன்னா எப்படி? இந்த கேள்விக்குதான் அப்படியொரு அற்புதமான பதிலை அசர விட்டிருக்கிறார் ராஜ்கிரண்.

இப்ப நான் கட்டியிருக்கிற வேஷ்டி 140 ரூபாய். இதன் அடக்க விலை ஐம்பது ரூபாய்தான் இருக்கும். மார்க்கெட்டிங், லாபம், கமிஷன் என்று சேர்த்து சேர்த்து விற்கப்படுவதால்தான் இந்த ரேட். இதைவிட குறைந்த விலை வேஷ்டிகள் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்குது. இதை ஏழை மக்கள் வாங்கி உடுத்துகிறார்கள். இப்ப நான் போய் அது மாதிரி விளம்பரங்களில் நடிக்கிறேன்னு வைங்க. என்னோட சம்பளம், டி.வி யில் அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப ஆகும் செலவுன்னு நிறைய சேர்த்து ஐம்பது ரூபாய் வேஷ்டியை 200 ரூபாய்க்கு விற்கிற நிலைமை வரும். அதுக்கு நான் உடந்தையா இருந்திடக் கூடாதில்லையா? அதனால்தான் நடிக்கல என்றார்.

இந்த பாலிஸியை எல்லாரும் பின்பற்றினால், குறைந்த பட்சம் மன நிம்மதியாவது மிச்சமாகும். செய்வீங்களா? செய்வீங்களா?

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter