கீர்த்தி சுரேஷை பார்த்து ஏன் அப்படி சொன்னார் விக்னேஷ் சிவன்?

முயற்சி இருந்தால் எந்த பூவையும் பறித்துவிடலாம் என்பதற்கு விக்னேஷ் சிவனை விட்டால் சிறந்த உதாரணம் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒரு காலத்தில் நடிகை சோனாவின் வீட்டில் கைப்பிள்ளையாக இருந்த விக்கிக்கு, காலம் கொடுத்த சர்ப்பிரைஸ்தான் நயன்தாரா! (என்னது… சோனா வீட்டில் கைப்பிள்ளையா? அது வேற கதை பாஸ்)

சூரியகாந்தியிடம் ‘சுகமா?’ என்று கேட்டுவிட்டு, சம்பந்திப்பூவிடம் ‘சவுக்கியமா?’ என்று கேட்கிற தைரியம் எல்லா நேரத்திலும் வொர்க்கவுட் ஆகுமா தெரியாது. ஆனால் அந்த விளையாட்டை மெய்ப்பிப்பது போல இருந்தது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பிரஸ்மீட்.

பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை விக்னேஷ் சிவனை ‘அண்ணா அண்ணா’ என்று அழைத்தார் கீர்த்தி. இதை வெகுவாக ரசித்த விக்னேஷ், ‘என்னை அண்ணா அண்ணான்னு அழைச்சீங்க. பயப்படாதீங்க. பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கீங்க’ என்றார் பொடி வைத்தது போல!

படப்பிடிப்பு நடக்கும் போதே ஸ்பைகளை அனுப்பி விக்கியை கண்காணித்து வந்த நயனுக்கு, இந்த அண்ணா… தங்கச்சி…. பாஷைக்கு அர்த்தம் புரியாமலா இருக்கும்?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
TSK
ராஜ மாதாவை இப்படி ஆக்கிட்டாங்க! ரம்யா கிருஷ்ணன் குறித்து சூர்யா சிரிப்பு!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவை விட, கீர்த்தி சுரேஷைவிட விக்னேஷ்சிவனால் அதிகம் பாராட்டப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன்தான். இவர் மட்டுமா பாராட்டினார்? மைக்கை பிடித்த...

Close