இந்த கிண்டலுக்கு பின்னால் இருப்பது விஜய் ரசிகர்களா, அல்லது?…

யாரையும் குத்த வேண்டாம். குத்த வர்றவனை தடுக்கவாவது கத்தி வேணுமில்லையா? அப்படியொரு தற்காப்பு சிந்தனைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். கடந்த பல வருடங்களாகவே அஜீத் விஜய் ரசிகர்களின் வாய்க்கால் வரப்பு தகராறு எல்லை மீறி போய் கொண்டிருப்பதை இன்டஸ்ட்ரி நன்கு அறியும். ஆனால் ட்விட்டர் பேஸ்புக் வந்தபின், அந்த சண்டை தெரு சண்டையை விடவும் சீப் ஆகிக் கொண்டிருப்பதுதான் வருத்தமே!

ரசிர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வது வேறு யாருமல்ல, சமூக வலை தளங்கள் பரபரப்பாக இயங்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கும்பல்தான் என்றும், அந்த கும்பலுக்கு ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களே சன்மானம் வழங்குவதாகவும் கோடம்பாக்கம் குற்றம் சாட்டி வருகிறது. அண்மையில் வெளிவந்த அஜீத்தின் ஸ்டில் ஒன்றை கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு, விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் டச் பண்ணப்பட்டிருக்கும் அதே ஸ்டில் எவ்வளவு கோபத்தை வரவழைத்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

ஒருவேளை விஜய் ரசிகர்கள் அப்படி செய்யாமலிருந்து, தூண்டி விடும் இடைத்தரகர்கள் அந்த வேலையை செய்திருந்தால்? கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய பெரும் கடமை அஜீத் தரப்புக்கு மட்டுமல்ல, விஜய் தரப்புக்கும் இருக்கிறது. இத்தகைய போட்டோஷாப் அசிங்கங்கள் இன்னும் அதிகரிப்பதற்குள் ஒரு முடிவெடுங்கள், ப்ளீஸ்!

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter