அஜீத் படத்தில் விவேக் ஓபராய்! ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்?

மா மரத்திலேயே பலா பழுக்குமா என்று ஆசைப்பட்டால், அதற்கு இயற்கை ‘யெஸ்’னு சொல்லணுமே? அப்படிதான் ஆகிவிட்டது அஜீத்தின் இந்திப்பட கணக்கு. இந்திக்கு போகணும் என்று அஜீத் ஆசைப்பட்டாரோ, இல்லையோ? அவரை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆசைப்பட்டார். அதற்காகதான் இந்த படத்தில் அஜீத்திற்கு இணையாக வரும் இன்னொரு கேரக்டரில் நடிக்க வைக்க அபிஷேக் பச்சன் வரைக்கும் ட்ரை பண்ணினார். ஆனால் விதி வலியதாச்சே?

ஐஸ்வர்யா ராயின் கணவர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஐஸ்சின் முன்னாள் காதலர் விவேக் ஓபராய் ஒப்புக் கொண்டு விட்டார்.

விவேக்கை பொறுத்தவரை ஆள்தான் இந்தி. தமிழ்நாடு அவருக்கு நன்றாகவே அத்துப்படி. ஒரு காலத்தில் சென்னையில் வளர்ந்த பையன்தான் அவரும். அதுமட்டுமல்ல, கடலூரில் சுனாமி வந்தபோது ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டியவர்களில் விவேக்கும் ஒருவர். தமிழில் வந்த அலைபாயுதே படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அதில் விவேக் ஓபராய்தான் நடித்தார். இப்படி தமிழ்நாட்டுக்கும் விவேக்குக்குமான உறவு, இஞ்சி மிட்டாய், பஞ்சுமிட்டாய் மாதிரி சுவையோ சுவை!

தமிழில் நடிக்க அழைத்ததும் எவ்வித நெட்டுக்குத்தலும் காட்டாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். சம்பள சேதாரங்கள், வந்து போகும் அலட்டல்கள் என்று பெரிதாக பில் வைக்காத விவேக் ஓபராயை லபக்கென்று லபக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்ப… AK57 ல் இரண்டு அழகர்கள்!

To listen Audio Click below:-

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vijay-sunnylieon
சன்னிலியோனுக்காக சம்பளத்தை குறைத்த விஜய்!

விஜய்க்கு இது புதுசு இல்லை! சச்சின் படத்தில் பிரபல இந்தி நடிகையான பிபாஷா பாசு நடிக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். ஆனால் அப்போதே ஒரு கோடி...

Close