விஜய் படத்தை விட பத்து கோடி எக்ஸ்ட்ரா! வேண்டுமென்றே ஃபிகர் காட்டுகிறதா கம்பெனி?

“இரண்டுமே ஓவர் லோடு என்ஜின்தான். அப்படியிருந்தும் வித்தியாசம் ஏன் இந்தளவுக்கு?” என்று மூக்கில் விரல் வைத்து நாக்கில் நரம்பு சுளுக்குகிறது சினிமா பிசினஸ் ஏரியா! அந்த இரண்டு ஓவர் லோடு என்ஜின்கள் அஜீத்தும் விஜய்யும் என்பதை அறிந்து கொண்டால், மிச்சசொச்ச மேட்டரை எக்கச்சக்க இன்ட்ரஸ்ட்டோடு படித்துவிடுவீர்கள் அல்லவா?

யெஸ்… விஜய்யின் பைரவா பிசினசுக்கும், அஜீத்தின் விவேகம் பிசினசுக்குமான ஏற்ற இறக்கங்கள் பற்றிதான் இன்டஸ்ட்ரியில் ஒரே பேச்சு. முதலில் விவேகம் படத்தை மொத்த கொள்முதலாக ஒரே ஒரு கம்பெனிக்கு தள்ளிவிட்டுவிடலாம் என்றுதான் முடிவெடுத்திருந்ததாம் சத்யஜோதி பிலிம்ஸ். அப்போது கம்பெனியை அணுகிய ஒரு சில படா படா பார்ட்டிகள், ஐம்பது கோடி வரைக்கும் ஏறி வந்தார்களாம். சரி… ஓகே என்று நினைத்த நேரத்தில்தான் ஒரு பல்லி சப்தம் கேட்டது விவேகம் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு. பேசாம நம்மளே ஏரியா வாரியா பிரிச்சு விற்றாலென்ன? என்பதுதான் அந்த க்ரீன் சிக்னல்.

மளமளவென பிரித்து பிரித்து விற்க ஆரம்பித்தார். என்ன ஆச்சர்யம்? தமிழ்நாடு தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிற உரிமையாக மட்டும் சுமார் 55 கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்டது விவேகம். அதுமட்டுமல்ல… சில ஏரியாவில் ரஜினியின் கபாலியை தாண்டிவிட்டார் அஜீத். ஏகப்பட்ட குஷியில் இருக்கும் சத்யஜோதி பிலிம்சுக்கு இன்னொரு பெருமை.

இதற்கு முன் வெளிவந்த பைரவா படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் பிசினஸ் 45 கோடிதானாம்!

ஆனால் இதை ஒப்புக் கொள்ளாத ஒரு சிலர், விஜய்யை விட அஜீத் முந்திவிட்டார் என்று ஒரு மாயை காட்ட நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது என்கிறார்கள்.

மின்னலோ… இடியோ… ஜன்னலை திறந்துகிட்டு வந்தா தாக்கப் போவுது? கூல் பேன்ஸ்… கூல்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
munnodi movie
ஒரு பாடலுக்கு ஆறு மாதம் உழைச்சாங்களாம்! இதுக்கு பேருதான் கொழுப்பா?

Close