34… 42… 54…! புயல்வேக பாய்ச்சலில் அஜீத் பட வியாபாரம்!

அஜீத்தின் நாடு தழுவிய இமேஜுக்கு மேலும் ஒரு குடம் தேன் அபிஷேகம் நடந்துவிட்டது. அது? ‘விவேகம்’ படத்தின் வியாபாரம்.

‘நாலாப்புறமும் நண்டுக் கடி… நடு மண்டையில் வண்டுக் கடி’ என்கிற அளவுக்கு தனது தயாரிப்பில் வெளிவந்த முந்தைய படங்களால் இம்சிக்கப்பட்டுள்ளது சத்யஜோதி நிறுவனம். தலைக்கு மேலே வெள்ளம் போன நிலையில், ஆக்சிஜன் குழாயை நேரடியாக மூக்கில் பிக்ஸ் பண்ணிய மாதிரி இந்நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது ‘விவேகம்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமைக்கான பிசினஸ்.

இதற்கு முன் அஜீத் படத்திற்கே இல்லாதளவுக்கு இந்தப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருப்பதை சற்று கலவரக் கண்ணோடுதான் நோக்குகிறது கோடம்பாக்கம். ‘வீரம்’ படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் 34 கோடிக்கு போனது. அதற்கப்புறம் வந்த ‘வேதாளம்’ படத்தின் தியேட்டரிக்கல் உரிமை 42 கோடியாக இருந்தது. தற்போது ‘விவேகம்’ படத்தை 54.5 கோடிக்கு வியாபாரம் செய்திருக்கிறார் சத்யஜோதி தியாகராஜன்.

இதன்மூலம் ‘தொடரி’, ‘சத்ரியன்’ படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டி நிமிர முடியும் என்பதுதான் நல்ல செய்தி. இதற்கப்புறமும் தனது பேனரிலேயே ஒரு படத்திற்கு கால்ஷீட் கேட்டிருக்கிறாராம் அஜீத்திடம். நல்ல சிக்னல் வரும் என்கிறார்கள். ஏன்?

அஜீத்தை பூப்போல தாங்கிய நிறுவனமல்லவா இது?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
actor soori
நிறைய பொறுப்புகள் இருக்குண்ணே! காமெடி சூரியின் சென்ட்டிமென்ட் டச்!

Close