விவசாயிகளை காப்பாற்ற விஷால் புதிய திட்டம்!

தரிசாகிக் கொண்டிருக்கிறது தஞ்சை மாவட்டம். தமிழகம் முழுக்க விவசாயம் என்பது சொட்டு தண்ணீருக்காக அலைந்து சொந்த மண்ணில் உயிர் விடும் சூழ்நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. தீர்வு காண வேண்டிய மத்திய அரசு, மவுன சாமியராகவே இருக்க… விஷால் மாதிரியான சிலர் தரும் ஆறுதலும் சின்னஞ்சிறு உதவிகளும் ஒரு தீர்வே அல்ல. அரசே சும்மாயிருக்கும் போது, ஐயோ பாவம். நடிகர்கள் என்ன செய்ய முடியும்?

இருந்தாலும் கடனுக்காக டிராக்டரை பறிகொடுத்த விவசாயி தற்கொலை செய்து கொண்டதும், அந்த குடும்பத்திற்கு முதல் உதவிக்கரம் நீட்டிய விஷாலையும் மறந்துவிட முடியாது. அதற்கப்புறம் தன்னால் இயன்றதை செய்து வரும் அவர், இப்போது புதிய முடிவை எடுத்திருக்கிறார்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி இம்மூன்று அமைப்பும் சேர்ந்து விவசாயிகளின் துயர் துடைக்க சில விஷயங்களை செய்யப் போகிறார்களாம். அது பற்றிய விபரங்களை பிறகு அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார் அவர். ‘ஒரு கனவு போல’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த விஷாலுக்கு, வழக்கம் போல ஆதரவும் எதிர்ப்பும் பின்னி பின்னி வருகிறது.

ஏன்? சினிமாக்கார்கள் பேச்சை நம்புவதா, வேண்டாமா? என்பதால்தான். அந்த அவ நம்பிக்கைக்கு ஒரு ஆயுள் வலி குத்துவிடுங்க விஷால்!

2 Comments

  1. Sathyaraj says:

    All the Best Vishal

  2. அவந்தான் says:

    நீயும் கோடி ரூவா கொடுக்கப்போறியா விசாலு?

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter