விஷால் வெற்றி! தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அதிரடி!

‘குறுக்கே யாரு வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போயிட்டேயிருப்போம்…’ சில தினங்களுக்கு முன் விஷால் சொன்ன பஞ்ச் டயலாக் இது. பல பஞ்ச் டயலாக்குகள் படத்திற்கு மட்டுமே பிரயோஜனப்படும். ஆனால் விஷால் சொன்ன இந்த பஞ்ச் டயலாக்குக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டார்கள் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள்.

ஏப்ரல் 2 ந் தேதி சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற ராதாகிருஷ்ணன் 335 வாக்குகளும், கேயார் 224 வாக்குகளும் பெற்றுள்ளார்கள்.

இரவு எட்டு மணி நிலவரப்படி விஷால் அணியை சேர்ந்த ஞானவேல்ராஜா, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள்.

நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பான செயலாளர் பதவியும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியும் பெற்று இரட்டை குதிரை சவாரி செய்யக் காத்திருக்கும் விஷால், அடுத்தடுத்து செய்யப் போவதென்ன? ஆவல் மேலிட காத்திருக்கிறார்கள் இரண்டு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும்.

4 Comments

 1. Kumar says:

  விஷால் அணிக்கு வாழ்த்துகள். இது நடிகர் சங்கம் அல்ல. செங்கல் வைத்து ஏமாத்த. தயாரிப்பாளர் சங்கம். தாணு கண்ணுல விளக்கெண்ணெய் வுத்திகிட்டு எப்ப விஷால் விழுவான்னு பாத்திட்டுருப்பார். தமிழ் ராக்கர்ஸ் இனி தான் சூப்பரா புது படம் போட்டு விஷால் ஒரு வெட்டி வாயீனு நிரூபிக்க போறானுங்க. விஷல்னால தமிழ் ராக்கர்ஸ் மயிரை கூட புடுங்க முடியாது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் இந்த விஷாலு.

 2. barani says:

  தமிழ் ராக்கர்ஸ் ஒன்னும் ஓடுற பஸ்சுல புது படம் போடும் ஆட்கள் இல்ல, விஷால் தொரத்தி புடிக்க. விஷால் பேசுறத பாத்தா சிப்பு தான் வருது. ஹாஹா

 3. barani says:

  வெற்றி பெற்ற விஷால் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இனியாவது நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யவும்.

 4. Rajii says:

  Valthukkal vishal. Mudiyathu enpathai mudiththu kattungal. Mudikkum varai anaivarum apadi than pesuvanga. 3 mathangalukku mun neekkam , ippa athe idathil thalaivar👏👏.
  Anthanan sir dir cheranta oru pertti eduththu podungo please.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Lens – Official Trailer
Lens – Official Trailer

https://www.youtube.com/watch?v=exmQsRfx3TA

Close