நான் மிஷ்கினை விலைக்கு வாங்கி விட்டேன்! விஷால் பேட்டி

“துப்பறிவாளன்” இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாக இருக்கும். விஷால் நடக்கும் போது இப்படி தான் இருக்க வேண்டும் , சிரிக்கும் போது , ரொமான்ஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில் தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது… இதுபற்றி விஷால் கூறுவதென்ன?

“வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை , கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் Sherlock Holmes மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் நடித்த துப்பறியும் படங்கள் , தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாக இது இருக்கும்”.

என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் படம் துப்பறிவாளன் தான். இந்த படத்துக்கு பாடல்கள் தேவை இல்லை. இப்போது மக்கள் பாடல்களே இல்லாமல் வெளிவரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் விருந்தாக இருக்கும். என்னுடைய சினிமா கேரியரில் நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம் துப்பறிவாளன் தான். இதில் பிரசன்னா , வினய் , பாக்கியராஜ் , ஆண்ட்ரியா உள்ளிட்ட ஐந்து பேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆக்சன் காட்சிகள் தான் துப்பறிவாளன் திரைப்படத்தின் U.S.P…

இப்படத்துக்காக மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடி மாட்டி நடித்துள்ளேன். மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை. துப்பறிவாளனில் வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இந்த சண்டை காட்சியில் நடிக்க வியட்நமிலிருந்து சண்டை கலைஞர்கள் வந்தார்கள். ஸ்டன்ட் கலைஞர்கள் ஏழு பேரோடு ஒரேடியாக அடுத்தடுத்து சண்டை போட்டது புதுமையாக இருந்தது. சண்டை காட்சிக்கு கோரியோ தினேஷ் மாஸ்டர்… ஆனால் சண்டை காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து அதை வடிவமைத்தவர் இயக்குநர் மிஷ்கின் தான். இப்படிபட்ட ஒரு படத்தில் செகண்ட் ஹாப்பில் பாடல் ஒன்றை வைத்திருந்தால் ரசிகர்கள் என்னை தான் திட்டியிருப்பார்கள்…

B & C சென்டர் ரசிகர்களை மனதில் வைத்து விஷால் இப்படி செய்துவிட்டார் என்று. படத்தில் ஒரே ஒரு தீம் சாங் மட்டும் உள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் பிக்-பாகெட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாக்யராஜ் சாரை நீங்கள் மூன்றாவது ஷாட்டில் தான் கண்டுபிடிப்பீர்கள். அவர் இதுவரை பண்ணாத புதுமையான ஒரு நெகடிவ் ரோலை செய்துள்ளார். வினய் தான் படத்தில் மெயின் வில்லன்… படத்தில் 6.2 ஹீரோ – 6.2 வில்லன்… அவன் இவன் வந்ததால் தான் எனக்கு பாண்டிய நாடு என்ற ஒரு படம் வந்தது. பாண்டிய நாடு படம் வந்ததால் தான் இயக்குநர் திரு எனக்கு நான் சிகப்பு மனிதன் என்ற கதையை எடுத்துக்கொண்டு வந்தார். துப்பறிவாளன் வந்தால் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து இரும்புத்திரை , சண்டைகோழி -2 , டெம்பர் ரீமேக் என்று வித்யாசமான படங்கள் வரவுள்ளது. நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன்… அவர் அடுத்து இயக்கும் படம் VFF க்கு தான். அவர் தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார். துப்பறிவாளனில் கடைசி 20 நிமிடம் மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். நம்ம ஊரிலேயே நல்ல லொகேஷன்கள் உள்ளது. கடைசி இருபது நிமிடங்கள் அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல் இருக்கும்.

இனிமேல் ஏழைகளுக்கு உதவி செய்வது போல் , பாட்டியை தூக்கிக்கொண்டு போவது போல் காட்சிகளில் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது… நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாத்தித்து இருப்பேன். இப்போது நான் கோடிகளை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள். இரண்டு படம் தள்ளிப்போனது எனக்கு லாஸ் தான். நான் நடிகர் சங்கம் , தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாத்திருப்பேன். ஆனால் திரையுலகம் தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம்” என்றார் விஷால்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kamal Vishal
கமல் விஷால்! கெமிஸ்ட்ரிக்கு காரணம் இதுதான்!

Close