விஷால் தனுஷ் மாதிரி நாங்களும் இறக்குவோம்ல?

விரிந்து பறந்த ஆலமரங்கள் மட்டுமல்ல… விதை வெடித்து கிளம்பும் சின்னஞ்சிறு செடிகளும் கூட, அவரவர் கையை நம்பி முழம் போட்டாலொழிய தமிழ்சினிமாவில் தலையெடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். சூர்யா, கார்த்தி, விஷால், விஷ்ணுவிஷால், தனுஷ், ஜெயம்ரவி, என்று சுமார் ஒரு டசன் டாப் நடிகர்கள் கூட, தான் நடிக்கும் படங்களை தானே வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் பெயரிலோ, அல்லது சொந்த பேனரிலோ சொந்த பணத்தை கொட்டிதான் எடுக்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ… வீட்டோடு போச்சு!

ரமீஸ் ராஜாவும் அப்படிதான். முன்னணி நடிகர்களுக்கு இருக்கக் கூடிய ‘கட்ஸ்’ உடம்பில் மட்டுமல்ல… மனசிலும் இருக்கிறது இவருக்கு. இவரது முதல் படம் டார்லிங் 2 ல் ஆரம்பித்தது இந்த ரிஸ்க். நல்லவேளை… அவரை பரிதவிக்க விடவில்லை ரசிகர்கள். போட்ட பணத்தை சேஃப்டியாக மீண்டும் எடுத்த ரமீஸ் ராஜா அதற்கப்புறம் தானே ஹீரோவாக நடிக்கும் விதி மதி உல்டா படத்தை தயாரித்து வருகிறார். விஜய் பாலாஜி இயக்கியிருக்கும் இப்படம் இப்பவே சினிமாக்காரர்கள் மத்தியில் பேமஸ். ஏன்? இந்த விஜய் பாலாஜி, ஏ.ஆர்.முருகதாசின் சிஷ்யர் என்பதால்.

படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். கானாபாலா, சித்ஸ்ரீராம், சின்மயி ஆகயோரும் பாடியிருக்கிறார்கள். கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இப்படத்தின் விறுவிறுப்பான கதை. இதை காமெடி கலந்த திரில்லராக தயாரித்து வருகிறார்கள்.

ரமீஸ் ராஜாவுக்கு ஜோடி ஜனனி ஐயர். படம் சைவாள்களுக்கு மட்டுமல்ல…. நான்-வெஜ் பிரியர்களுக்கும் சேர்த்துதான்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Connection Problem Sivakarthikeyan Solved.
Connection Problem Sivakarthikeyan Solved.

https://youtu.be/Wppz6xRC15s

Close