தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா விஷால்? அம்பலமாகும் ரகசியம்!

இரும்புல செஞ்ச ஆணி வேராயிருந்தாலும், துருவாக மாறி துளைத்தெடுப்பதில் கில்லாடிதான் விஷால்! ஆனால் சரத், ராதாரவி விஷயத்தில் செல்லுபடியான இந்த டெக்னிக் தாணு மற்றும் தயாரிப்பாளர் சங்க விஷயத்தில் எடுபட்டதா? அதுதான் டவுட்!

தயாரிப்பாளர் சங்கம் விஷால் அளித்த ஒரு பேட்டியை முன் வைத்து அவருக்கு ரெட் கார்டு போட்டது யாவருக்கும் நினைவிருக்கலாம். அறிவிக்கப்படாத ரெட் என்பதால், ‘கடிதம் வரட்டும். பார்க்கலாம்’ என்று இது தொடர்பான கேள்விகளுக்கு விரிவான விடை கூறாமல் இருந்தார் விஷால். ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை விஷாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவுமே பேசினார்களாம்.

கடைசியில் அப்பா ஜி.கே.ரெட்டியின் அட்வைஸ்படி ஒரு மன்னிப்பு கடிதத்தை ரகசியமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் அனுப்பிவிட்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். உண்மையா, இல்லையா என்பது பற்றி விஷால்தான் இனிமே வாய் திறக்கணும்!

To listen audio click below :-

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vikram-presmeet
ஜருகண்டி ஜருகண்டி… வெட்கமில்லா பிரஸ்? விரட்டித் தள்ளிய விக்ரம்!

“...ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ? ஒரு வணக்கத்தை போட்ருவோம்!” பெரும்பாலான ஹீரோக்களின் மனநிலை அதுவாகதான் இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு வரை. இப்போது...

Close