தனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி?

இந்த வருடத்தின் நிஜமான ஹிட்டுகளில் ஒன்று விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரன்! (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா? என்று கேட்பவர்களை சரியான அம்மாஞ்சி விருதுக்கு பரிந்துரைக்கலாம்) தமிழில் மட்டுமல்ல, டப்பிங் செய்யப்பட்ட மொழிகளிலும் கூட பிச்சைக்காரனுக்கு கலெக்ஷன் அதிகம்.

அதற்கப்புறம் தமிழ்சினிமாவின் வியாபார சந்தையில் விஜய் ஆன்ட்டனிக்கு கட் அவுட் வைக்காத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உங்க சைத்தான் படத்தை எப்ப ரிலீஸ் பண்ணப் போறீங்க? என்று கேட்காத விநியோகஸ்தர்கள் இல்லை. இப்பவே எனக்கு உனக்கு என்று வியாபாரம் பேச கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள். பிச்சைக்காரனை விட, டபுள் மடங்கு சூப்பர் என்கிறார்கள் படத்தை முழுசாக பார்த்த சில முக்கியஸ்தர்கள்.

இந்த நிலையில்தான் படத்தை தீபாவளிக்கே வெளியிட விரும்பினாராம் விஜய் ஆன்ட்டனி. இருந்தாலும், உங்க படம் எப்ப வந்தாலும் ஹிட்டுதான். சோலோவா வந்தா 800 தியேட்டர்களுக்கு குறையாமல் வெளியிடலாம் என்றெல்லாம் சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்களாம்.

நிதானமா மலையேறுகிற மனுஷன், அதே நிதானத்துடன் ஏறட்டும்… ஏனென்றால் வழுக்கு பாறைகள் எப்போது முளைக்கும் என்பது யாருக்கு தெரியும்?

To Listen Audio Click Below:-

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vijay
தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜய் மன்றம் போன்! அம்மா பயம் போச்?

கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்... “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான்.

Close