கவிதையே தெரியுமா, விஜயலட்சுமிக்கு கவிதையும் தெரியுமா?

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.

கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை ‘ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார் . இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார் . இப்படத்தை விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக் ‘ தயாரித்து ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் செய்யவுள்ளது. பண்டிகைக்காக RH விக்ரம் இசையமைத்துள்ளார்.

”கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி . அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .’பண்டிகை ‘ படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில் , விஜயலக்ஷ்மி தான் எழுதலாமா என கேட்டார் . நானும் தடுக்கவில்லை. ஒரு சில நாட்களில் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள் !!!! ‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் RH விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது . பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது . ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘பண்டிகை ‘ க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன் .

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Mgr-Images-Wallpapers-010
எம்.ஜி.ஆர் கிடைச்சுட்டாரா? இன்டஸ்ட்ரியில் பரபரப்பு

Close