ஜோதிகா திடீர் முடிவு! ஷாக்கான விஜய்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக படப்பிடிப்புக்கு கிளம்பும் முன், முக்கிய நடிகர் நடிகைகளை முடிவு செய்துவிட்டு கிளம்புவதுதான் பெரிய படங்களின் வழக்கம். இந்த முறையும் அப்படியே நடந்தது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் நடிப்பதாக முதலில் ஒப்புக் கொண்டார்கள். இதில் ஜோதிகா மட்டும்தான் கடைசியில் யெஸ் சொன்னவர். மற்ற இருவரும் அவரவர் தேதிகளை மிக துல்லியமாக ஒதுக்கியும் கொடுத்துவிட்டார்கள். அப்புறம் சம்பளம், இன்னபிற கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்ட தயாரிப்பு தரப்பு, ஒரு வழியாக ஜோதிகாவையும் ஒப்பந்தம் செய்தது.

சந்தோஷமாக சர்பத் கலக்குகிற நேரத்தில்தான் கண்ணாடி டம்ளரில் கல்லெறிந்திருக்கிறார் ஜோதிகா. “இந்த படத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டாராம். ஏனிந்த இன்சல்ட்? விசாரித்தால், அவர் விஜய்யுடன் இணைந்து நடிக்க சிலர் முணுமுணுத்தார்களாம். இனிமேல் எப்போது நடித்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டும் நடிங்க. கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்களாம்.

இதனால் குழப்பமான ஜோதிகா, திடீரென படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டார். அட்லீயே நேரில் பேசியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள். ஒருவேளை விஜய் பேசினால், ஜோதிகா சம்மதிக்கக்கூடும். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ, தன் ஈகோவை விட்டுவிட்டு இறங்கி வருவாரா என்கிற சந்தேகமும் இருப்பதால் யாரும் விஜய்க்கு பிரஷர் கொடுக்கவில்லை என்கிறார்கள்.

ஜோதிகாவின் நடிப்பை ஈடு செய்கிற அளவுக்கு இன்னொருவர் வரப் போவதில்லை என்றாலும், பொன் இருந்த இடத்தில் ஒரு பூ வைக்க இடம் கிடைக்காமலா போய்விடும்? தேடுங்க…

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
lawrance salay
ஏழுகோடி சம்பளம்! விட்டுக் கொடுத்த லாரன்ஸ்!

Close