ஜி.வி.பிரகாஷ் வாங்கிய ஒரு கோடி அட்வான்ஸ் விஜய் சேதுபதி பணமா?

யார் கழுவிக் கழுவி ஊற்றினாலும் சரி. ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சியை பின்னாலிருந்து இழுக்கவே முடியாது! ஏனென்றால் மனிதர் அப்படியொரு லைன் அப்பில் இருக்கிறார். இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜி.வி. நடிகராக வெற்றி பெற்றாரா என்றால், முகம் கொள்ளாத டவுட்டுடன் லேசாக தலையாட்டி வைக்கும் உலகம். அவர் நடித்த த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பெரும் வெற்றி அடைந்திருந்தாலும், நடிப்பில் அவர் இன்னும் எல்கேஜி பையன்தான்.

ஆனால் இனிவரும் படங்கள் அவரை நடிப்பிலும் அசுரானாக்காமல் விடாது என்றே நம்புவோம். ஏன்?

ரீசன்ட்டாக பிச்சைக்காரன் வெற்றியை அளித்த டைரக்டர் சசி, மின்சார கனவே படம் எடுத்த ராஜீவ் மேனன், (இதற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்) ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு, பசங்க பாண்டிராஜ் என்று அத்தனை இயக்குனர்களும் பலே கெட்டிக் காரர்கள்!

அதிருக்கட்டும்… தலைப்புக்கு வருவோம். ரவி அரசு இயக்குகிற படத்தை விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சுமிட்டாய் மற்றும் றெக்க படத்தை தயாரித்த கணேஷ்தான் தயாரிக்கிறார். இவரும் விஜய்சேதுபதியும் பள்ளித்தோழர்கள். அதுமட்டுமல்ல, விஜய் சேதுபதியின் பார்ட்னரும் கூட. ஜி.வி.பிரகாஷுக்கு இவர் கொடுத்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடி கூட, விஜய் சேதுபதியின் பாக்கெட்டிலிருந்துதான் என்றொரு தகவல் உலவுகிறது.

எப்படியிருந்தாலும், வளரும் ஹீரோவை வசதியாக மடக்கிய விஷயத்தில் கணேஷுக்கு ஒரு கைதட்டல்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
img_0194
Actress Meghali Stills Gallery

Close