அஜீத் வழியில் விஜய்! சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்!

“இவ்ளோ பேசுறீங்களே, வருமான வரியை ஒழுங்கா கட்றீங்களா?” என்று தமிழ்சினிமாவில் யாரை பார்த்து வேண்டுமானாலும் கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் அஜீத்தை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேசவே முடியாது. எல்லாவற்றையும் வெள்ளையாய் வாங்கி, வெள்ளையாய் கட்டுகிறார் அவர். கோடம்பாக்கத்தில் இப்படி நாலு பேர் இருந்தால், வரி ஏய்ப்புக்கு வழியே இல்லை. கருப்புப் பணத்திற்கும் காலாவதி நிலைமைதான்! கடந்த பல வருடங்களாகவே அப்படிதான் இருக்கிறார் அஜீத். இப்போது அதே வழியில் கம்பீரமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பைரவா!

அப்படத்தின் ஹீரோவான விஜய்க்கு தரப்பட்ட சம்பளம் பியூர் வொயிட் என்று காதை கடிக்கிறது கோடம்பாக்கம். இந்த வெள்ளை வியாபாரத்தை அமோகமாக வரவேற்றிருக்கிறாராம் விஜய். ஏன்? அதற்கும் ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்கிறது. பொதுவாகவே கடந்த சில வருடங்களாக விஜய்யின் படங்களுக்கு சில மறைமுக குடைச்சல்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், அவரது படங்கள் வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால் இன்கம்டாக்ஸ் ரெய்டு ஆரம்பித்துவிடுகிறது. காலில் ஆரம்பிக்கிற பிரச்சனை தலை வரைக்கும் குடைவதால் கடைகோடி தியேட்டர்காரர்களுக்கும் இதனால் செம டென்ஷன்.

இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். குண்டூசி வாங்கிய கணக்காக இருந்தாலும் அது வெள்ளை பணத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ். நல்ல விஷயம்தான். கோழியை குழிப்பணியாரம் என்றும் குழிப்பணியாரத்தை கோழி என்று சொல்லியும் ஜகஜ்ஜாலம் காட்டும் ஏரியாவில் உண்மைக்கும் வெள்ளைக்கும் ஏது மரியாதை?

இந்த முறைக்கு ஆங்காங்கே எதிர்ப்பும் சலசலப்பும் ஏற்பட்டு வருகிறதாம். ‘நாங்க கருப்பு பணத்தைதான் முதலீடு செய்யுறோம். எங்ககிட்டயும் வெள்ளையா கேட்டா எப்படி?’ என்று சில ஏரியா வியாபாரிகள் முரண்டு பிடிக்கிறார்களாம்.

ஹ்ம்… அதுக்கென்ன. க்ளைமாக்ஸ்ல எல்லாம் நல்லாதான் முடியும்!

To listen Audio click below:-

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
sasikumar
சசிகுமார் மீது சாவு பழி! நட்புக்கு இதுதானா மரியாதை?

“என் நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்!” திருக்குறளை புழிஞ்சு டின் பீர்ல ஊற்றியது மாதிரி, நச் நச்சுன்னு நட்புக்கு விளக்கம் கொடுத்து அசரடிக்கிற ஆள்தான் நம்ம சசிகுமார்....

Close