விஜய் ஆன்ட்டனியின் டபுள் ஆக்ட்!

விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.

ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் “அண்ணாதுரை” படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது. இப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்த குடும்பபாங்கான ஜனரஞ்சக படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்தியேக முதல் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’ வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.

‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ” ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து திருமதி. பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vishal Piracy
ஆன்லைன் திருடன் அகப்பட்டான்! விஷால் உள்ளிட்ட திரையுலகத்தினர் குஷி!

Close