அஜீத் சூர்யா கைவிரிப்பு! வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்!

சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே?

அஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம் அவர்களை நெருங்கக் கூட முடியவில்லை. (படம் எடுக்கும் போது என்னென்ன பஞ்சாயத்தோ?) அந்த கோபத்தில் ஹீரோவானவர்தான் அவர். கட்… விஷயத்துக்கு வருவோம்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் பேசிய விக்னேஷ் சிவனுக்கு இன்று வரை பதிலே சொல்லவில்லை அஜீத். சூர்யாதான் மூக்கை நறுக்கி அனுப்பிவிட்டாரே? இந்த கோபத்தில் தனது சுண்டு விரல் நகத்தை துளித்துளியாய் கடித்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா என்கிற அட்சய பார்த்திரம் ஒரு ஐடியா கொடுத்ததாம்.

“அஜீத், சூர்யா, ஆர்யா, ஜீவா, விடவெல்லாம் நீ அழகுய்யா. நீயே ஹீரோவா நடி. நான் உனக்கு ஜோடியா நடிக்கிறேன். தமிழ்சினிமாவிலிருக்கிற டாப் மோஸ்ட் இசையமைப்பாளர், எடிட்டர், கேமிராமேன் என்று எல்லாரையும் புக் பண்ணு. இரண்டுல ஒண்ணு பார்த்துடலாம்” என்றாராம். பக்கா சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்றால் முதலில் ஜிம்முக்கு போய் உடம்பை சைஸ் பண்ண வேண்டும் அல்லவா?

கடந்த சில நாட்களாக ஜிம்மே கதி என்று கிடக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஆக, சோழர் பரம்பரையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.?

To listen audio click below :-

 

2 Comments

  1. Roja says:

    Thavarana news.

  2. Movie Buff says:

    This news is wrong, yesterday they made a official annoucement for Suriya’s NExt movie with Vignesh Shivan

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Ganesh Chathurthi-NTC
வெற்றிகரமான 4 வது ஆண்டில் உங்கள் newtamilcinema.com வாழ வைத்த உங்களுக்கு ஜே!

நேற்று துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தோள் கொடுக்க, 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். செய்திகளை முந்தித்தர வேண்டும் என்கிற வேகம், அதை...

Close