யார் அண்ணன்? யார் தம்பி? வைரமுத்து நிகழ்ச்சியில் தடதடப்பு!

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு நாடெங்கிலும் இருந்து ஆதரவு கரங்கள் நீண்டு கொண்டிருக்க, நேற்று மாலை தனது கோட்டாவை நிறைவு செய்தார் கவிப்பேரரசு வைரமுத்து. பட்டத்தில்தான் பேரரசு. நிஜத்தில் ஒரு சிற்றரசு ரேஞ்சுக்குதான் இருந்தது அந்த நன்கொடை. சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இவரது புத்தகங்கள் விற்ற தொகையான நாலு லட்சத்து சம்திங்கை, நேர் செய்து முழுசாக ஐந்து லட்சமாக வழங்கினார். ‘ஏழைப் புலவனின் நன்கொடை’ என்று அவர் தன்னை தானே குறைத்துக் கொண்டது இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே! (அப்படியே என் புத்தகம் ஐந்து லட்சத்துக்கு வித்துருக்கு பார்த்தியா என்கிற அலட்டலும் அதில் இருந்ததை கவனிக்க வேண்டும்)

‘முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கப்பட்டது ஹார்வேடு பல்கலைக்கழகம். ஆனால் மூவாயிரம் வருடத்திற்கு முந்தைய மொழி தமிழ். எனவே தமிழ் இடம் பெறப்போவதற்காக அந்த பல்கலைக்கழகம்தான் பெருமைப்பட வேண்டும்’ என்ற அவரது பேச்சு ரசிக்கத்தக்கதுதான்.

பேச்சோடு பேச்சாக ஆண்டாள் விஷயத்திற்கு அப்புறம் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழ் போராளிகளுக்கும் புலவர்களுக்கும் நன்றி சொல்லும் மேடையாகவும் அதை பயன்படுத்திக் கொண்டது அவரது சாமர்த்தியம். இங்கு முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அத்தனை சிந்தனையாளர்களையும் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. கெட்டதிலேயும் ஒரு நல்லது நடக்கும் என்பது இதுதான் போல என்று கூறியவர், மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன், இமயம், முத்துலிங்கம் உள்ளிட்ட பலருக்கும் நன்றி சொன்னார்.

அந்த வரிசையில், ‘தம்பி அறிவுமதி’ என்று வைரமுத்து விளிக்க…. ‘நான் தம்பி இல்ல. அண்ணன்’ என்று ஸ்பாட்டிலேயே சிக்சர் அடித்தார் அறிவுமதி.

தன்மானத்திற்காக அவமானத்தை கூட பொறுத்துக் கொள்றவன்தான் தமிழன். என்ன நான் சொல்றது?

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments

  1. Gnanakkirukkan says:

    Indha pisinaarip panrikku voi mika mika neelam. Aanal, kaiyo mikak kuraivu. Indhap panri viraivil voi iluththu saavan. Engal thaayai avamadhiththavan naasamaakap povan

  2. Gnanakkirukkan says:

    ivan thamilai vaiththup pilaippu nadaththum oru marana viyapari. ivan naakkai iluththu vaithu arukka vendum. thaikkum thaaraththukkum vithyasam theriyadhavan. ivan uyirodu iruppathu boomikkup paaramakum. Ivan tholainthaal tamil pilaikkum.

  3. Gnanakkirukkan says:

    Ivan muttaalgalukku ellam annan. Ivan echchil kaiyaal ee ottadhavan. Thai Aandaalai avamadhththavan. Ivanai naduththeruvil niruththi vaiththu kallaal adiththuk kolla vendum.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
chandramouli
குடும்ப மானத்தை கெடுத்த கவுதம் கார்த்திக்!

Close