வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்தது! ரசிகர்கள் மகிழ்ச்சி!

‘கண் பார்வை இல்லையென்றால் என்ன? என் காந்தக் குரலால் உங்களை உணர்வேன். என்னையும் உணர வைப்பேன்’ என்று இசைப் பிரியர்களை கட்டிப் போட்ட வைக்கம் விஜயலட்சுமிக்கு சொந்த ஊர் கேரளா. தமிழில் அவரை அறிமுகப்படுத்தியவர் இசைமைப்பாளர் டி.இமான். என்னமோ ஏதோ படத்தில் ‘புதிய உலகை’ என்ற பாடல் மூலம் தமிழுக்கு வந்த வைக்கம் விஜயலட்சுமிக்கு, அதன்பின் வந்த பல பாடல்கள் பெரிய அளவில் புகழை தேடித் தந்தன.

சமீபத்தில் வீர சிவாஜி படத்தில் அவர் பாடிய ‘சொப்பன சுந்தரி நீதானே’ பாடலால்தான் அப்படம் சுமாரான அளவிலாவது வசூல் செய்தது.

அப்படிப்பட்ட சிறந்த குரல் வளம் கொண்ட வைக்கம் விஜயலட்சுமி இயற்கையிலேயே கண் பார்வையற்றவர். பல வருடங்களாக சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது. மணமகன் சந்தோஷ் ஒரு இசையமைப்பாளரும் கூட. வருகிற மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன் அவருக்கு கடவுள் கொடுத்த பரிசாக கண் பார்வை கிடைத்திருக்கிறது. இந்த தகவலை அறிந்த கேரள ரசிகர்கள் விஜயலட்சுமிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். நாமும் மனசார வாழ்த்துவோம்.

புதிய உலகம், அவருக்கு இன்பத்தையே காண்பிக்கட்டும்…

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter