என்னது? கமலை கைது செய்யணுமா? பிரச்சனையை தீர்க்க ரமேஷ் அரவிந்த் விளக்கம்!

ஒவ்வொரு முறையும் கமல் படங்கள் வரும்போதெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் சகஜம்தான். அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையில் விஸ்வரூபம் படம் வெளிவந்ததே… அந்த படத்தை பார்த்துவிட்டு எந்த பகுதியில் யார் மதக்கலவரம் செய்தார்கள் என்று கேள்வி கேட்கிற நிலைமை மீண்டும் உருவாகியிருக்கிறது ரசிகர்கள் மத்தியில். ‘எங்க வேலை இடையூறு பண்றது. உங்க வேலை அதை சமாளிக்கிறது’ என்ற கோணத்திலேயே ஒவ்வொரு நாளும் எதிர்ப்பும் சமாளிப்புமாக போகிறது கமல் விஷயத்தில்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ திரைப்படம் மே 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் பாடல் காட்சி மத உணர்வை புண்படுத்தும் வகையில் எடுக்கப் பட்டிருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எம்.நஸீர் அகமது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். ‘‘விஸ்வரூபம் படம் மூலம், முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்திய கமல்ஹாசன், தற்போது இந்து சமூக மக்களின் மனம் புண்படும் வகையில் ‘உத்தம வில்லன்’ படத்தை எடுத்துள்ளார். மதங்களை இழிவுபடுத்தி, சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என்று அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இயக்குநர் ரமேஷ் அரவிந்த் கூறும்போது, ‘‘யாரு டைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும்படியாக ‘உத்தமவில்லன்’ படத்தில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும், தற்கால கலைஞருக்கும் இடையேயான வாழ்க்கைப் பதிவு சார்ந்த படம். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும்’’ என்றார்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
puli-vijay-
ஆந்திராவில் துப்பாக்கி சூடு- விஜய்யின் புலி படத்திற்கு சிக்கல்?

ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர...

Close