அவ ஒவியத்தைதானே ரசிச்சா, உன்னையா ரசிச்சா? இது தாய் மாமன் தொல்லை

பார்க்கலாம் பழகலாம் படக் கதையின் கதாநாயகன் ஒரு ஓவியன். இவர் ஓவியக் கூடம் வைத்திருக்கும் இடம் பஸ் ஸ்டாப் அருகில். அந்த வழியாக வரும் கல்லூரி பேருந்தில் கதாநாயகி தினமும் வரும் போது ஹீரோ வரையும் படங்களை தினமும் பார்ப்பது உண்டு. இதை அதே பேருந்தில் பயணிக்கும் ஹீரோவின் நண்பர்கள் கவனித்து ஹீரோவிடம் ஹீரோயின் உன்னை லவ் பண்ணுவதாக கதைவிடுகின்றனர். இதை நம்பி ஹீரோ, ஹீரோயினை, பாலோ பண்ண, ஒரு கட்டத்தில் ஹீரோயின் மீது ஹீரோ காதல் கொள்ள, பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.

ஹீரோயின் தாய் மாமன் ஜெயிலில் இருந்து விடுதலை ஆக, அவருக்கும் ஹீரோயினுக்கும் திருமணம் ஏற்பாடு நடக்கிறது. ஹீரோ ஹீரோயினிடம் தன் காதலைச் சொல்ல ஹீரோயின் நான் உன்னைக் காதலிக்கவில்லை உன் பெயிண்டிங்கை தான் விரும்பினேன் என்று சொல்ல ஹீரோ அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு நண்பர்களும் உண்மையைச் சொல்ல கதையில் திருப்பம் ஏற்படுகின்றது. இறுதியில் ஹீரோவின் காதல் வெற்றி பெற்றதா என்பதே இதன் திரைக்கதை.

இதன் படப்பிடிப்பு டைரக்டர் அ.ஆ. பாஸ்கர் அவர்களின் சொந்த ஊரான நாகை மாவட்டம், சீர்காழி, திருக்காவூர், சிதம்பரம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் கவிதை வரிகளாக்கி பாடல் எழுதியவர்கள் இளைய கம்பன் பா. நிகரன்.

காதல் நடனம் ஆட வைத்தவர்கள் ரவிதேவ்- சந்திரிகா. கதையின் நாயகன் தணீஷ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல முன்னனி ஹீரோக்களுக்கு ஜுனியர் ஹீரோவாக நடித்த பிறகு, 20 படங்கள் ஹீரோவாக நடித்து தற்போது முண்ணனி ஹீரோக்கள் பட்டியலில் உள்ளார்.

இவரை வந்தாரை வாழவைக்கும் நம் தமிழ் சினிமா முதன் முறையாக இவரையும் அறிமுகம் செய்கிறது. கதாநாயகி அனிஷா தேவ்யர் பல விளம்பரப் படங்களில் மாடலாக நடித்தவர். இவர் பெங்களூர் அழகி. கதையின் வில்லனாக சக்தி நடிக்கிறார். அ.ஆ. பாஸ்கர் இயக்கத்தில் அறிமுகமான இன்னும் ஒரு ஆக்ஷன் கிங் இவர். காமெடிக்கு ஒரு பட்டாளமே இருக்கிறது. முக்கியமாக காமெடியன் மாறன் அடுத்த வடிவேலுவாக வருவார் என்கிறார்கள் இப்படக்குழுவினர்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
azhiyadha kolangal
ரேவதி கேட்டார், பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார்! மீண்டும் ஒரு ‘அழியாத கோலங்கள்’!

திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குனர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… “பாலுமகேந்திராவிடம் ஒரு...

Close