அஜீத் விஜய்யை இணைக்க முயற்சி! இயக்குனர் யார்?

ஒரு காலத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்து வந்தார்கள். அதற்கு முன்பே சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படம் ஒரு சில நாட்களிலேயே தியேட்டரிலிருந்து வாபஸ் பெறப்பட்டது. ஏன்? ஒரு ரசிகர் குத்திக் கொல்லப்பட்டார். அதனால்…

ரஜினி கமல் இணைந்து நடித்த படங்களாலும் அப்படியொரு கொடூரம் நிகழக்கூடிய அளவுக்கு ஆங்காங்கே புகைச்சல்கள். ஒருகட்டத்தில் பலவாறாக சிந்தித்த கமல், நாம சேர்ந்து நடிச்சா ஒருத்தர் சம்பளத்தையே ரெண்டா பிரிச்சு கொடுக்கிறாங்க. ஆனால் தனித்தனியா நடிச்சா தனித்தனியா நிறைய சம்பளம் வாங்கலாம். அதனால் பிரிஞ்சுருவோம் என்று ஐடியா கொடுத்தார். அதற்கப்புறம் இருவரும் சேர்ந்து நடிக்கவேயில்லை. இப்போது தனித்தனியாக கட்சி ஆரம்பித்து, கூட்டு மந்திரிசபை அமைக்கலாம் என்கிற அளவுக்கு சூழ்ச்சி நடக்கிறதாம். போகட்டும்… அஜீத் விஜய் விஷயத்திற்கு வருவோம்.

இன்று தமிழ்சினிமாவின் மார்க்கெட்டையே தலையணையாக வைத்துக் கொண்டு தூங்குகிற அளவுக்கு தனிப்பெரும் சக்தியாக இருக்கிறார்கள் இருவரும். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு 100 சதவீதம் சாத்தியமே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இருவரும் ஒரு வார்த்தை ம்… என்று சொன்னால், பணத்தை அள்ளிக் கொட்டி படம் எடுக்க பெரும் நிறுவனங்கள் தயார். ஆனால் யானையின் முதுகில் ஏறி அம்பானியை போர்த்துகிற தைரியம் யாருக்கு இருக்கிறது?

ஏன் நானிருக்கேன் என்று துணிந்திருக்கிறாராம் தனி ஒருவன் பட இயக்குனர் மோகன் ராஜா. இருவருக்கும் ஏற்றது போல கதையும் தயார் என்கிறார் இவர். அஜீத் விஜய்யை சந்திக்கிற முயற்சியிலும் இறங்கிவிட்டாராம்.

காய் பழுக்குதா, கனி அழுகுதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

2 Comments

  1. Muthukumar says:

    AJITH & VIJAY ARE A UTTER FLOP HEROES IN TAMIL CINEMA..
    THEY ARE WASTE FELLOWS.

  2. Siva says:

    ரெண்டு பெரிய சில்லரை பார்ட்டி சேர்ந்தாலும் சேர்ந்துரும், ஆனா வீனா போன ரெண்டு தெரு நாய்ங்க குரூப் போடற சண்டை தாங்க முடியாதே

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
bismi-Boxoffice
Bhaagamathie, Nimir, Mannar Vagaiyara, Padmaavat – Original Collection Report

https://www.youtube.com/watch?v=e8sSsy6xLS0&t=70s

Close