இன்றிலிருந்து திரிஷாவுக்கு குழந்தை மனசு!

நாடெங்கிலும் நல்லது பண்ணுகிற அமைப்புகள், அதை நாலு பேருக்கு தெரிகிற விதத்தில் நடத்துவதும் நல்லது என்று நினைக்கிறார்கள். அதுதான் நடிகர் நடிகைகளுக்கும் நல்லதாக போய்விடுகிறது. ‘சோறு போடுறது நான்… போஸ் கொடுக்கிறது நீயா?’ என்கிற மனநிலை அறவே இல்லாத இத்தகைய அமைப்புகளால் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கு செம கவுரவம் ப்ளஸ் கொண்டாட்டம்.

ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதராக சில வருடங்கள் நடிகர் விக்ரமும் இருந்தார். அதனால் என்ன பிரயோஜனம்? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இருந்தாலும் விக்ரமுக்கு சில சலுகைகளை அளித்தது அந்த அமைப்பு. கிட்டதட்ட அப்படியேதான் இதுவுமா? அல்லது வாங்கிய மரியாதைக்கும் பதவிக்கும் சேர்த்து விக்ரம் போல சும்மா இல்லாமல் த்ரிஷா ஏதாவது செய்வாரா?

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப்பின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார் அவர்.

முழு நேரமாக இதை அவர் மேற்கொண்டால், குழந்தை மனசு கொண்ட த்ரிஷா என்று பாராட்டலாம்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
shanmugapandiyan
சமுத்திரக்கனிக்கு வழிவிட்ட சண்முகபாண்டியன்! இனி ஜெயிச்சுருவீக தம்பி

கேப்டன் விஜயகாந்த்தின் வாரிசு சண்முக பாண்டியனுக்கு தமிழ்சினிமா கொடுத்த முதல் மார்க்கிலேயே சிலேட்டு உடைச்சு, பலப்பமும் பீஸ் பீஸ்! சகாப்தம் என்கிற அந்தப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே...

Close