பெஸ்ட் வில்லனுக்கு ரெஸ்ட் கொடுக்காதீங்க டைரக்டர்ஸ்?

பேரீச்சம்பழ கலரும் பிஸ்டலின் வேகமுமாக இருக்கிறார் விடியல் ராஜு. ‘ஆள்’ என்ற படத்தை பார்த்தவர்களுக்கு ‘அப்படியா?’ என்கிற ஆச்சர்யத்திற்கு வேலையில்லை. படம் பார்க்காதவர்களுக்குதான் இந்த முதல் வரி. ஒரு முக்கிய தகவல். அந்தப்படத்தில் இவர்தான் வில்லன். விதார்த்தை சுற்றோ சுற்றென்று சுற்றவிடும் கொடூரன். ஆ…ஊ… என்று அலறி தொண்டை காய்வதுதான் வில்லனின் ஸ்டைல் என்பதை அப்படியே ஓரம் கட்டிவிட்டு ஸ்மார்ட்டாக வில்லத்தனம் பண்ணிய விடியல் ராஜுவுக்கு தமிழக அரசின் விருது பட்டியலில் முக்கிய இடம்.

‘ஆள்’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் விடியல் ராஜு. அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அங்குதான் இவரது கலைவாழ்வுக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டுவிட்டது கோடம்பாக்கம்.

சினிமாவின் மீது தீராக் காதலுடன் உள்ளே வந்து, கோடி கோடியாக செலவு செய்து ஆள் படத்தை தயாரித்தார் விடியல் ராஜு. அதற்கப்புறம் மீரா கதிரவன் இயக்கத்திலும், தயாரிப்பிலும் உருவான ‘விழித்திரு’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கி ரிலீசுக்காக காத்திருக்கிறார். ஆள் படத்தில் சிறப்பாக நடித்திருப்பதை பாராட்டும் இயக்குனர்கள், தங்கள் படங்களில் இவருக்கு ஒரு கேரக்டர் கொடுக்கலாமே என்று நினைக்கும் போதுதான் அந்த ஸ்பீட் பிரேக்கர் இடறிவிடுகிறது அந்த எண்ணத்தை. எப்படி?

“இவரே ஒரு தயாரிப்பாளரா இருக்கார். அதுமட்டுமல்ல, அதிமுக வில் தென் சென்னை மாவட்டத்தின் முக்கிய பதவியிலேயும் இருக்கார். ஒழுங்கா ஷுட்டிங் வருவாரா? வந்தாலும் டென்ஷன் கொடுக்காம நடிப்பாரா?” இந்த சந்தேகத்தின் காரணமாகவே வாய்ப்பு கொடுப்பதை தவிர்க்கிறார்களாம்.

தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் கோடிகளை கொட்டிக் கொண்டிருக்கும் விடியல் ராஜு வெள்ளை திரை மீதுதான் கொள்ளை காதலாகிக் கிடக்கிறார். நம்புங்க சார் நம்புங்க!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Pattukottai Prabahar
திருட்டுக் கதைக்கு விருதா? பட்டுக்கோட்டை பிரபாகர் கொதிப்பு!

Close