அவ்ளோதான்! உண்மைய போட்டு உடைச்சுட்டாரு!

தமிழ்சினிமாவில் பல முன்னணி நிறுவனங்களுக்கு அட்வைசர்… பல முக்கிய சினிமாக்கள் உருவாக காரணமாக இருந்தவர்… முன்னணி ஹீரோக்கள் சிலருக்கு மேனேஜர்… திரையுலக தட்ப வெப்பங்களை அறிந்தவர் வெங்கட்!

விவேகம் சுமாரான படம். நஷ்டத்தில்தான் முடியும் என்று நம்மை போன்ற சிலர் சொன்ன போது, கெட்ட வார்த்தைகளால் நம் இன் பாக்சை நிரப்பிய அறியாத அஜீத் ரசிகர்கள் இவரைப் போன்றவர்களின் கருத்துக்களை என்னவாக எடுத்துக் கொள்வார்கள் என்பது அறிந்ததுதான். இருந்தாலும், சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் போனால் தவறு அல்லவா?]

மனசை கல்லாக்கிக் கொண்டு விவேகத்தின் ஒரிஜனல் நிலவரத்தை புட்டு வைத்திருக்கிறார் வெங்கட். இதோ-

விவேகம் .. விஷால் சட்டப்படி ஐந்து நாட்களுக்கு பின் என் கருத்து.

எத்தனையோ படங்களுக்கு எழுதவில்லை. அந்த வரிசையில் இந்த படத்தையும் விட்டு விடலாம் என நினைத்தேன் … ஆனால் … மனசு பொறுக்கலையே..

உழைத்தவர்கள் ஊதியம் பெற்று அடுத்த வேலைக்கு போயாச்சு…

தயாரித்தவர் வியாபாரம் முடிச்சாச்சு…

வாங்கிய வியாபாரிகள் சிலருக்கு பாகுபலி. பலர் நிலை மகாபலி.

ரசிகர்களுக்கு சற்று தர்ம சங்கடம்.

வெறியர்களால் பலருக்கு செம்ம சங்கடம்

உலக வியாபாரம் குறித்த பல உண்மைகள் மறைக்கப்படுகிறது என்கிற நிலையில் தமிழ்நாட்டில் fulla கல்லா கட்ட முடியாதபோது உலகத்தரம் என்கிற பெயரில் அயல் நாட்டில் அதிக செலவு செய்யலாமா தயாரிப்பாளரே?

அதே போல, உங்களை நம்பி வினியோகஸ்தர்கள் கொட்டிய முதலீட்டையும் ரசிகர்கள் செய்த செலவையும் சம்மந்தப்பட்டவர்கள் மதிக்க வேண்டும்.

வித்தியாசமாக என்ற பெயரில் விபரீத செலவு செய்வது விவேகமல்ல..

காரணம் நஷ்டப்படுவது ஆசைப்பட்டு காசை இழப்பது முட்டாள் முதலீட்டாளர்களே தவிர, நடிகர்களும் தொழில் நுட்பக்கலைஞர்களும் தொழிலாளர்களும் நிதியாளர்களும் அல்ல.

எத்தனை பூச்சு பூசினாலும் எகிறி எகிறி குதித்தாலும் சரி..

உண்மையை உரக்க சொல்கிறேன்….

விவேகம் படம் வணிக ரீதியாக பலருக்கு நஷ்டமே..

2 Comments

  1. raj says:

    வாங்கிய பெட்டி நல்லா வேலை செய்கிறது. One thing for sure, every one trying to bring down the movie. I have seen the movie. its better than Theri or Bairava. Something fishy.

  2. Rajesh says:

    True. Till now, utter flop movies are Vivegam & Bairava

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Mansooraligan
தம்பி அஜீத்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள்…!

Close