அறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம்! ஸாரி மிஸ்டர் கோபி நயினார்

இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். இந்த நாளை மேலும் இனிமையாக்கி கொடுத்திருக்கிறது அறம். ஊடகங்களின் நிஜமான பாராட்டு மழையில் நனைந்த அண்மைக்கால படம் ஒன்று உண்டென்றால் அது இதுதான். திரும்பிய இடம் எல்லாம் அறம் பற்றியே கூவிய ஊடகங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. இந்தப்படம் பிளாக் பஸ்டர் இல்லை. ஆனால் தயாரிப்பு தரப்புக்கு நஷ்டமும் இல்லை.

இந்த நிலையில்தான் அறம் பார்ட் 2 சுட சுட தயாராகப் போகிறது என்கிற தகவல் கிளப்பிவிடப்பட்டது. அந்த ஆசை கோபி நயினாருக்கு இருந்திருக்கலாம். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இருக்க வேண்டும் அல்லவா? அது சுத்தமாக இல்லையாம். காரணம் அதே நயினார்தான். படம் தயாரிப்பில் இருக்கும் போதே பல்வேறு அதிருப்தியை விதைத்திருக்கிறார் கோபி.

விக்னேஷ் சிவனின் மேற்பார்வையில்தான் இப்படம் இந்தளவுக்கு ரசனை மிகு படமாக உருவானதாகவும் தகவல். ரீ ஷுட்டிங், ரீ எடிட்டிங் என்று படம் முடியாமல் இழுக்கப்பட்டதாகவும், அதனாலேயே தயாரிப்பு செலவு எதிர்பார்த்ததை விட சில லகரங்கள் அதிகமானதாகவும் சொல்லப்படுகிறது. எழுதியதை எடுக்கத் தெரியாத இயக்குனர் என்கிற முத்திரைதான் நயினார் மீதான அறம் வட்டாரத்தின் உள் பேச்சாகவும் இருக்கிறது. உண்மை அப்படியிருக்க, இவரை நம்பி பார்ட் 2 வை எப்படி ஒப்படைப்பார்கள்? எனவே இந்த நிமிஷம் வரைக்கும் அந்த எண்ணம் தயாரிப்பு தரப்புக்கு இல்லையாம்.

அறம் யார் யாரோ கை வைத்துதான் இப்படியொரு உருப்படியான நிலைக்கு வந்தது என்கிற உண்மை புரிந்தோ, புரியாமலோ பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கோபி நயினாருக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள்.

ஆழ் துளை கிணற்றுக்குள் கிடக்கும் தன் இமேஜே காப்பாற்றி மேலே கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மிஸ்டர் கோபி.

1 Comment

  1. anbu says:

    this is life of a Director, why did u publish this kind of news in public?

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
nachiyar
Why Does Jyothika Speaks The Bad Word? – Naachiyaar Teaser

https://www.youtube.com/watch?v=57NIGVvbsDg

Close