‘அவள் ’ படம் பார்க்க ஆன்ட்ரியா தயக்கம்! வெட்கப்பட வேண்டிய நிஜக்காரணம்!

தரமணி படத்திற்கு பிறகு ஆன்ட்ரியாவின் குட்டை பாவாடையை கட்சிக் கொடி போல நேசிக்க தொடங்கிவிட்டான் அடல்ட் ரசிகன். பாவாடைக்கே இந்த பரவசம் என்றால் ஆன்ட்ரியாவே திரும்ப வந்தால்? அப்படியொரு கிளுகிளு குளுகுளு நிலைக்கு ரசிகனை கொண்டு செல்ல வருகிறது அவள். மிலிந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சித்தார்த் ஹீரோ. வெறும் ஹீரோ மட்டுமல்ல… இப்படத்தின் திரைக்கதையில் சித்தார்த்தின் பங்கும் நிறைய நிறைய. யெஸ்… இவரும் மிலிந்தும் மணிரத்னத்திடம் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்தவர்கள். அப்போதிலிருந்தே குளோஸ் பிரண்ட்ஸ். இந்த அவள் படத்தின் திரைக்கதையை இருவரும் சேர்ந்து சுமார் நாலரை வருடங்களாக எழுதித்தள்ளியிருக்கிறார்கள்.

ஆவிப்பட வரிசையில் அமைந்த படமாக இது இருந்தாலும், படத்தில் ஆன்ட்ரியாவும் சித்தார்த்தும் அடிக்கும் லிப் கிஸ்களுக்கு அளவே இல்லை என்கிறது அவள் வட்டாரம். இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய ஆன்ட்ரியா, இந்தப்படத்தை நான் பார்க்க மாட்டேன் என்று கூறியது ஏன் தெரியுமா? அவருக்கு பேய் படங்கள் என்றால் அலர்ஜியாம். இது மேடையில் சொல்லப்பட்ட காரணம். சொல்லப்படாத காரணம்? இதுதான்…

சித்தார்த்துடன் லிப் கிஸ் அடிக்கும் காட்சியை பார்க்கும் போது எப்படியிருக்கும்? அதுவும் ஒரு முறை அடித்தால் பரவாயில்லை. படத்தில் பல முறை வருவது போல இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு சின்ன வெட்கம் ப்ளஸ் அடக்கத்தின் காரணமாகதான் இப்படத்தை காண தயங்குகிறாராம் அவர்.

உதட்டுல உப்பு கரிப்பு படாம கடல்ல குளிக்கறது கஷ்டமாச்சே ஆன்ட்ரியா!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Director Bala
சிக்கினார் விக்ரம்! சீரழிக்க தயாராகும் பாலா! மகனே… மனோகரா, தாங்குவீயா?

அல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம்...

Close