அதெல்லாம் உல்ட்டாங்க…. ரஜினி பற்றிய தகவலை மறுக்கும் சோர்ஸ்!

தமிழ்சினிமாவில் ரஜினி என்ற லெஜன்ட்டின் வரலாறு அவ்வளவு சாதாரணமானதல்ல! எப்படி சிவாஜியின் சாயல் இல்லாமல் ஒருவரால் நடிக்க முடியாதோ, அதே போல ரஜினியின் சாயல் இல்லாமலும் எந்த ஹீரோவாலும் நடிக்க முடியாது. அப்படியொரு அஸ்திவாரத்தை இன்னும் ஏழேழு தலைமுறைக்கு போட்டிருப்பவர் அவர். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏதோ இத்தனை வருட அனுபவத்தில் நடந்திராத ஒரு விஷயத்தை இப்போது செய்து பார்த்தாராம். இப்படியொரு செய்தி வெளியான நாளில் இருந்தே ரஜினி ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்து வருகிறார்கள்.

என்னவாம் அது?

வேறொன்றுமில்லை. அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் அல்லவா? அந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு அவர் நடிப்பு பயிற்சி கொடுத்து வந்தாராம். அப்போது ரஜினியும் சென்று நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டாராம். இதுதான் அந்த தகவல்.

சம்பந்தப்பட்ட படக்குழுவிடம் விசாரித்தால், விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அப்படியொரு விஷயமே நடக்கவில்லையாம். ‘அவர் அண்ணாமலை மட்டுமில்ல…. இமயமலை. பாலசந்தர் மாதிரி மகேந்திரன் மாதிரி, பாரதிராஜா மாதிரி, ஷங்கர் மாதிரி எத்தனையோ சீனியர்களை பார்த்துவிட்டு வந்தவர். அவ்வளவு பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிக்கும் போதே அவர் அப்படியொரு வேலையை செய்யவில்லை. இந்த படத்திற்காகவா செய்யப் போகிறார்?’ என்றார்கள்.

ஆமாம்ல?

1 Comment

  1. சுரேஷ் says:

    100% Rumour News.
    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு பிறவி கலைஞன்

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
papanasam-review
பாபநாசம் – விமர்சனம்

‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்... நம்ம ஊரு ஆச்சி,...

Close