சிம்பு பிடிவாதம்! நன்றாக பயன்படுத்திக் கொண்ட தமன்னா?

வாங்குறது முதியோர் தொகைதான் என்பதை உணராத ஹீரோயின்களும், கொடுக்கறது பென்ஷன்தான் என்பதை அறியாத தயாரிப்பாளர்களும் இருக்கும் வரை, தமன்னா மாதிரியான பேரிளம் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்! தமன்னாவின் முடிந்து போன மார்க்கெட்டை, மறுபடியும் புதுப்பித்த பெருமை பாகுபலிக்கே உண்டு. அந்தப்படத்தின் கேமிரா வொர்க்கும், இறைக்கப்பட்ட கோடிகளும், தமன்னாவை தேவைக்கு அதிகமாகவே தேவதை ஆக்கிவிட்டது. அதுவரைக்கும் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருந்த தன் சம்பளத்தை கோடிக்கும் தாண்டி உயர்த்தினார் அவர்.

அதற்கப்புறமும் அவர் படங்கள் பாகுபலி மாதிரி ஓட வேண்டும் அல்லவா? ம்ஹும். இருந்தாலும், வெள்ளை தாஜ்மஹாலில் மேலும் கொஞ்சம் எனாமல் பெயிண்ட் அடித்ததை போல வெளிச்சமாக இருக்கும் அவரிடம் மயங்கிக் கொண்டேயிருக்கிறது ஊர். அதற்கு நம்ம சிம்புவும் விதிவிலக்கல்ல. தன்னைவிட வயதில் முதிர்ந்த பெண்கள் என்றால், ஹவாலா பணம் போல கமுக்கமாக சிரிக்கும் குணமுள்ளவராச்சே? அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்திற்காக தமன்னாவை புக் பண்ணிய போது சந்தோஷத்தின் எல்லைக்கே போனார் சிம்பு.

தமன்னாவிடம் பேசிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், ஒரு கோடி சம்பளம் பேசி முடித்தாராம். அட்வான்சை இரண்டு நாட்களில் வந்து தருவதாக சொன்னவர், ஏதோதோ காரணங்களால் நான்கு நாட்கள் கழித்துதான் போனாராம். கொதிநிலையில் இருந்த தமன்னா, ஏன் ரெண்டு நாள் தாமதமா வந்தீங்க? இப்போ என்னோட சம்பளம் ஒண்ணேகால் கோடி. இஷ்டம்னா பேசலாம். இல்லேன்னா போகலாம் என்று சொல்ல, பதறிப்போன மைக்கேல் ராயப்பன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று டைரக்டரிடமும், சிம்புவிடமும் கேட்க… ஆமா ஆமா என்றார்களாம் இருவரும்.

வேறு வழி? கால் கோடியை எக்ஸ்ட்ராவாக அழுதுவிட்டு வந்திருக்கிறார் மைக்கேல்! அம்மா கட்சியில நெஞ்சை நிமித்திகிட்டு நடை போட்டு என்ன பிரயோஜனம்? ஒண்ணுமேயில்ல….

To listen audio click below :-

 

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter