தமிழ் திரைப்பட வர்த்தக சபை… மீண்டும் செயல்பட ஆரம்பித்தது!

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட தமிழ் திரைப்பட வர்த்தக சபை (Tamil Film Chamber of Commerce) இன்று மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த சபை ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், இத்தனை காலமும் அமைதியாக இருந்தது. இன்று முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய திரு அபிராமி ராமநாதன் அவர்கள் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மற்ற நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். தயாரிப்பாளர்கள் திரு கலைப்புலி எஸ் தாணு, திரு அன்பு செழியன், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திரு திருப்பூர் சுப்பிரமணியம், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திரு பன்னீர் செல்வம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர்  திரு செல்வின் ராஜ், செயலாளர் திரு ராஜமன்னார், அம்மா கிரியேஷன்ஸ் திரு டி சிவா மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த சங்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
“இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்,” என தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

1 Comment

  1. Vagai says:

    Ha ha thayarippalar sangathukku potti. Ivanga arasiyal vathikalai Vida mosamanavanga pola.
    Selfishya irunthunthathaan nallathu pola. Vishal to resign.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Rajinikanth shooting
ஸ்டிரைக்காம் ஸ்டிரைக்! ரஜினி மட்டும் மீறலாமாம்? என்னங்க நடக்குது இங்கே?

Close