vijay

ilayaraaja
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ…
vazhakku
நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து இதுவரை கோபிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அத்தனை நடுநிலையாளர்களும் ‘ஐயகோ’ ஆனார்கள். சிலர் ஆத்திரப்பட்டு ‘இனிமே எவனாச்சும் இப்படி வந்தீங்க, தொலைச்சுப்புடுவோம்’ என்கிற அளவுக்கு குமுறினார்கள்.…
kaththi-dubbing
‘கத்தி டூப்ளிகேட்டா, ஒரிஜனலா?’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை இந்தி வரைக்கும் கொண்டு போன ருசி இன்னும் அவரது நாக்கில் இருக்குமல்லவா? கத்திக்கும் அப்படியொரு ஃபார்முலாவை கையாள திட்டமிட்டிருக்கிறாராம் அவர். இந்த நேரத்தில்தான் தனது ரீமேக் லட்சியத்திற்காக விஜய்யின் ஆசையை விட்டொழிக்க துணிந்துவிட்டார் மிஸ்டர் களவாணி. தெலுங்கில் விஜய்க்கு ஒரு மார்க்கெட்…
nadigarhalin
கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா. நடந்தது நல்லவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்குமா? அதுதான் இப்போது நாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். வீடியோவை காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=0hMLIcvLX_E
kaththi-ARM-Vijay
‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு? கடந்த நான்கு நாட்களாவே பல இடங்களில் கலெக்ஷன் ‘டிராப்’ என்கிறார்கள். மக்களின் பொதுவான மனநிலை இதுதான். கெட்டவன் இமேஜ் வெகு சீக்கிரத்தில் வந்துவிடும். நல்லவன் என்று நிருபிப்பதற்குள் அது வேகமாய் பரவி முன்னேற்றம் என்கிற நுரையீரலையே…
ARMURUGADOSS-MINJUR GOPI
கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று பேசுவதற்காகவாவது என்னோடு விவாதிக்க தயாரா?’ என்கிறார் கத்தி கதை என்னுடையது என்று கூறிவரும் கோபி. எதிர் தரப்பு கள்ள மவுனம் சாதிக்கிறது. மீடியா முன் தோன்றி விளக்கம் கொடுக்கக் கூட முடியாத அளவுக்கு திணறுகிறார் முருகதாஸ்.…
Actor Vijay in Jilla Movie New Stills
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற பிடிவாதமெல்லாம் காட்டாமல் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதையெல்லாம் செய்து, படத்தை ஹிட்டாக்கி விட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால், இந்த கதையின் போக்கை மாற்றி, முழுக்க முழுக்க மசாலா தடவியிருக்க முடியும். அப்படி செய்யாத ஒரு காரணத்தினாலேயே இந்த படம் அதிரி புதிரி ஹிட் என்கிறார்கள் ஏரியாவில். இந்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டாமா? குடும்பத்தோடு லண்டனுக்கு கிளம்பிவிட்டார். அங்கிருக்கும் மாமனார்…
jeeva-nayanthara-vijay
நயன்தாராவுக்கு அறுபது வயசாகி மணிவிழா கொண்டாடுகிற நேரத்தில் கூட, அவரை பற்றி எழுதினால் ஆஹாவாகிக் கிடக்கும் போலிருக்கிறது ஊர். அந்தளவுக்கு தமிழ்சினிமா ஹீரோயின்களில் மோஸ்ட் அட்ராக்ஷன் அவர் மீது உண்டு திரையுலகத்திற்கு. முக்கியமாக தமிழ்சினிமா ஹீரோக்களில் பலருக்கு! 2006 ல் ஈ படத்தில் நயன்தாராவுடன் கூட்டு சேர்ந்த ஜீவாவுக்கு அதற்கப்புறம் அந்த அதிர்ஷ்டம் அமையவே இல்லை. கிட்டத்தட்ட நயன்தாராவும் ஜீவாவும் ஒரே சம்பள லெவலில் இருக்கிற இந்த நேரத்தில்தான் மீண்டும்…
ajith-vijay-reporters
முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் எழுத தகுதியானதை மட்டும் எழுதி வந்தார்கள் நிருபர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த இயல்பு கெட்டுப்போயிருக்கிறது. நடிகர்கள் மீடியாவை சந்திக்கவே அஞ்சுகிறார்கள். முன்பெல்லாம் அஜீத்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும்…
vijay-car
வாய் சும்மாயிருந்தாலும், வழிமுறை சும்மா விட்டால்தானே? கத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கோவைக்கு சென்றிருந்தார் விஜய். அங்குள்ள இந்துஸ்தான் கல்லுரியில் மீட்டிங். அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய விஜய் கூறிய கருத்துக்கள் சும்மா போற போக்கில் சொன்னவையா? அல்லது திரும்புகிற இடமெல்லாம் இலவசம் கொடுத்து மக்களை ‘இன்புற’ வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசை லேசாக குத்திக் காட்டியதாக எடுத்துக் கொள்ளலாமா? அவர் அங்கு பேசியதன் முழு விபரம்…
vijay-vishal
பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன் குதிரைக்கு ஒரு ரேட்! அதன்படிதான் அள்ளுகிறது வசூலும். இருந்தாலும் இந்த மேம்பட்ட நிலையை தங்களுக்கு வாரி வழங்கிய ரசிகர்களை சந்திக்கவில்லை என்றால் எப்படி? சொல்லி வைத்தாற் போல கிளம்பிவிட்டார்கள் இருவரும். விஜய் கோவை…
alexpaul menon
அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளில் கடத்தப்பட்டு 12 நாட்கள் கழித்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர். இப்போது அதே சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார் அலெக்ஸ் பால். சினிமாக்கள் முதற்கொண்டு அனைத்து விஷயங்களை பற்றியும் இணையத்தளங்களில்…
video-kaththi
 
kalaingnar
அரசியல் வேறு, சினிமா வேறு, என்கிற சித்தாந்தமெல்லாம் வெறும் பேச்சுதான். டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம் சைலன்ட்டாக மூக்கை நுழைத்துக் கொள்ளும் அரசியல்! சினிமாக்காரர்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா? வசனங்களில் அரசியலை சீண்டுவார்கள். இப்படி ‘மதியான குழம்புக்கு மலைப்பாம்பு துண்டம்தான்’ என்று வேடிக்கை காட்டுகிற இவர்களை யாராலும் லேசில் புரிந்து கொள்ள முடியாது. கத்தி படத்தில் எல்லா பிரச்சனைகளையும் இழுத்து தீப்பொறி பறக்க வசனம் பேசிய விஜய், அப்படியே 2ஜி…
vijay-new
சிம்புதேவன் இயக்கத்திற்கு அப்புறம் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது யார்? இந்த கேள்விக்கு அதிகாரபூர்வமாக விடை வராவிட்டாலும், அரசல் புரசலாக விடை தெரிந்துவிட்டது. ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லீதான் அந்த அதிர்ஷ்டசாலி. ஒரு படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தின் கதை மற்றும் இயக்குனரை தேர்வு செய்துவிடுவது விஜய்யின் ஸ்டைல். (ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு. ஃபினிஷிங்லதான் யாராவது கட்டைய போட்டுர்றாங்க) அப்படிதான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அட்லீ.…
kaththi-review
சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை வச்சு உயிர் வாழ்வே? என்று கேள்வி கேட்கிறார். டீப் வில்லேஜ் தொடங்கி டாப் சிட்டி வரைக்கும் விஜய்க்கென இருக்கும் மாஸ், இந்த படத்தின் கருத்தை எங்கேயோ கொண்டு போய் சேர்க்கும். அந்த ஒரு…
asin
தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர் தனது ட்விட்டரில் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கத்தி படத்திற்கு இடையூறு செய்கிறவர்களுக்கு முன் அந்த படத்தை வெற்றியடைய வைத்து மக்கள் தங்கள் பவரை காட்டணும் என்று கூறியிருக்கிறார். சும்மாவா பின்னே? நடுவில் இலங்கைக்கு டூர் போய் இங்குள்ள உணர்வாளர்களிடம் சிக்கியவராச்சே…
Thuppakki New Stills
நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்துள்ள ஐங்கரன் கருணா, கத்தி ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறார். தியேட்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் படத்தை எப்படி திரையிடுவது என்று குழம்பி போயிருக்கும் தியேட்டர்காரர்கள் சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்த…
Vijay-Kaththi
கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதில் சுமூக முடிவையும் எட்டியது கத்தி தயாரிப்பாளர் வட்டாரம். கத்தி விளம்பரங்களில் லைக்கா பெயரை பயன்படுத்துவதில்லை, படத்தின் டைட்டிலில் லைக்கா…
Vijay-Kaththi
தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று முன்னர் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவுகிறது. தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழர் சார்ந்த இயக்கங்கள் ‘லைக்கா’ என்ற பெயரை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று…
Page 21 of 25« First...10...1920212223...Last »

all news