vijay

vijay-adlee
விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார் என்று நேற்றிலிருந்தே அரசல் புரசலாக தகவல்கள். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை. படத்தின் நாயகிகளான எமிஜாக்சனும், சமந்தாவும் கூட வரவில்லை. எவர் வந்தாலென்ன, வராவிட்டாலென்ன? லண்டனில் தனது பிறந்த நாளை முடித்துவிட்டு சென்னை வந்த கையோடு விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சி…
puli
தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் வெகுவாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய்சேதுபதி, சாந்தனு, சிபிராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, விவேக்,…
jilla
அதென்னவோ தெரியவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் பாரீர்’ என்கிற விஷயத்தில் கன்னட, தெலுங்கு ரசிகர்களை விட, தமிழ் ரசிகர்கள் ரொம்ப மோசம். நம்ம ஊர் ஹீரோக்களை அங்கு சர்வ சாதரணமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அசலூர் ஹீரோக்களை நாம்தான் அவ்வளவு சீக்கிரம் மனசுக்குள் வர அனுமதிப்பதில்லை. நம்ம ஊர் விஜய், விஷால், சூர்யா, கார்த்தி, அவ்வளவு ஏன்? ஆர்யா வரைக்கும் கூட ஆந்திராவில் பெரிய நடிகர்கள்தான். ஆனால் அந்த ஊர்…
vijay-puli
வந்தமா? நடிச்சமா? போனமா? என்றில்லாமல் தன்னை சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கிற ஒருவர்தான் நல்ல ஹீரோவாக வர முடியும். விஜய்யும் அஜீத்தும் இந்தளவுக்கு முதலிடத்தில் இருக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. கவனிக்காத மற்ற மற்ற ஹீரோக்களுக்குதான் சனி சங்கட திசையில்! தற்போது விஜய் நடித்து வரும் புலி பட ஷுட்டிங்கில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான விஷயம் இது. இந்த படத்திற்கு நட்டி என்கிற நட்ராஜ்தான்…
vijay
ஏண்டா டேய்…. உலகத்துல இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா? என்று விஜய்யின் சுத்தமான சுய சிந்தனையுள்ள ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து கல்லெறிந்தால் கூட, தலைகுனிந்து அந்த காயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஏன்னா நிலைமை அப்படி! நிஜமும் அப்படி! வேறொன்றுமில்லை. விஜய் பிறக்கும் போது அவரை பெரிய்ய்ய அப்போலோ மருத்துவமனையிலோ, விஜயா ஹாஸ்பிடலிலோ சேர்க்க வசதியேயில்லை அவரது அப்பா எஸ்.ஏ.சிக்கு. சாதாரண கவுருமென்டு ஆஸ்பத்திரியில்தான் பிறந்தார் விஜய். காலம்…
vijay
ஒரு காம்பினேஷன் ஹிட்டாகிவிட்டால், அந்த காம்பினேஷனை அவ்வளவு சீக்கிரம் பிரிக்க மாட்டார்கள் சினிமாவில். ரசிகர்கள் விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், வியாபார ஏரியாவில் இந்த ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தைக்கு தனி அந்தஸ்தே இருக்கிறது. அதனால்தான் இப்படி. அப்படி பார்த்தால் பிரகாஷ்ராஜும், விஜய்யும் இணைந்த படங்கள் எல்லாமே செம ஹிட் ஆகியிருக்கின்றன. இந்த நல்ல விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு அட்லீ சொன்ன ஒரு ஐடியா, ‘அட்லீஸ்ட்’ லெவலில் கூட அக்சப்ட்…
Actor Vijay Family
சற்று தாமதமானாலும் இவிய்ங்க அட்டகாசம் பொறுக்க முடியாமல்தான் இந்த நியூஸ். (மொதல்ல இதெல்லாம் ஒரு நியூசா? என்று மற்றவர்கள் குமுறினாலும்…) சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறர்கள் விஜய் ரசிகர்கள். எதற்காக? விஜய்யின் மகன் சஞ்சய் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 496 மார்க் வாங்கியிருக்கிறாராம். அதற்காக, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்றும், அதாண்டா எங்க தளபதி… என்றும் அப்பா படிக்கலேன்னா என்ன? அவரு…
larance-vijay
கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ஓ கே கண்மணியும் சரி, காஞ்சனா 2 ம் சரி. கலெக்ஷனை வாரிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள். மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று மணிரத்னத்துக்கு பாராட்டுகள். அதே வேளையில், லாரன்ஸ் வீட்டிலும் செம கூட்டம். அடுத்த படம் எங்களுக்கு பண்ணிக் கொடுங்க. டேர்ம்ஸ் எதுவா இருந்தாலும் ஓ.கே என்கிறதாம் அந்த கூட்டம். இந்த படத்தையே சுமார் பத்து கோடிக்கு தயாரித்த…
brammanandham-vijay
‘அய்யர் -முக்கியமா, அமாவாசை முக்கியமா’ என்பதற்கு நிகரான கேள்வி இது. இருந்தாலும் காம்பினேஷன்னு ஒண்ணு இருக்குல்ல? விரைவில் ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் வெளியிடப் போகிறார்கள். ‘டப்பிங்’தான் என்றாலும், அதற்கான தடபுடல் ஏற்பாடுகள் ஆந்திரா இண்டஸ்ட்ரியை அதிரிபுதிரியாக்கிவிடும் போல தெரிகிறது. ஆர்.டி.நேசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஜில்லா என்ற பெயரிலேயே தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். முதலில் படத்தை தமது நிறுவனத்தின் மூலமே வெளியிட திட்டமிட்டிருந்த அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, வெயிட்டாக…
vishal-vijay
எதையும் வெட்டிப் பேச்சு என்று ஒதுக்கினால் எல்லாம் போச்சு- முதலில் மெல்ல ஆரம்பிக்கிற முணுமுணுப்பு நாளடைவில் பெரும் கலவரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இப்போது கிளம்பியிருப்பது வெறும் முணுமுணுப்புதான். ஆனால் லென்ஸ் வைத்து பார்க்காவிட்டாலும், முணுமுணுப்பின் பின்னாலிருக்கிற உண்மை, விஷாலுக்கும் விஜய்க்கும் நிஜமாகவே வரப்பு தகராறு ஸ்டார்ட் ஆகிருச்சோ என்றே எண்ண வைக்கிறது. கத்தி வெளிவந்த அதே நாளில் பூஜையும் வெளிவந்ததல்லவா? அப்பவே இந்த முணுமுணுப்பு லேசாக ஆரம்பித்தது. அதற்கப்புறம்…
puli-vijay-
ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி…
jeeva-vijay
அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பகலவன் கதையை விஜய்யிடம் சொல்லி, அவரும் நடிப்பதாக ஒப்புதல் கொடுத்து… அதையும் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்து… அதற்கப்புறம் நடந்த கதைதான் உங்களுக்கு தெரியுமே? இருந்தாலும் விஜய்க்கு கத்தி பிரச்சனை…
wallpaper-ajith-vijay
அதிமுக- திமுக வினரின் அன்றாட குடுமிப்பிடி உலகறிந்த விஷயம். அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அஜீத் விஜய் ரசிகர்களின் யுத்தம். உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று அஜீத். இன்னொன்று விஜய். படத்திலும் சரி, நிஜத்திலும் சரி, யாரோ யாரையோ திட்டினால்தான் பிழைப்பு என்றால், அதை சந்தோஷமாக செய்வதற்கு ஒரு பெரும் கூட்டம் கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த பெரும் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் ‘கங்காரு’ பட இயக்குனர்…
vijay-rajendran
இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு நான் கடவுள் ராஜேந்திரன் நினைச்சிருந்தா அவர் நடிகராகியிருக்கவே முடியாது. தான் இயக்கும் படங்களில் வேறொரு டிபார்ட்மென்ட் பணியாளராக இருந்தவரை, நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்து வேறொரு ரூட் போட்டுக் கொடுத்துவிட்டார் டைரக்டர் பாலா. அதற்கப்புறமும் முகத்துல டெரர் காண்பித்தே பிழைத்து வந்த ராஜேந்திரனுக்கு இப்போது ‘இன்னும் மேலே…’ அந்தஸ்து. அதுவும் விஜய்யின் திருவாயால்! தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘புலி’…
devi sri prasad
விஜய் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் போடுவது ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் இந்த முறை ‘புலி’ படத்தில் கமிட் ஆகியிருக்கும் பிரசாத்துக்கு தொண்டைக் குழியில் வறட் வறட்! ஏன்? நெர்வஸ்தான். பொதுவா விஜய் சார் படத்துக்கு மியூசிக் போடுறதுன்னாலே ஒரு மகிழ்ச்சி தன்னால வந்துரும். துள்ளலும் துடிப்புமா மியூசிக் போடுவேன். அவரும் டான்ஸ்ல பிச்சு உதறிடுவாரு. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா மியூசிக் போடணும்னு முடிவு பண்ணிட்டேன்.…
puli-vijay
ஆமாங்க… தலைப்பு புலிதான் என்று சிம்புதேவன் அறிவித்து சில தினங்கள் கூட முழுசாக முடியவில்லை. அதற்குள் ‘இந்த தலைப்பு உங்களுக்கு செட் ஆகுமான்னு யோசிச்சுக்குங்க’ என்று விஜய்யின் மனசில் வில்லங்கத்தை விதைத்துவிட்டார்களாம் சிலர். பொதுவாகவே விஜய் எந்த படத்தில் நடித்தாலும், ரிலீஸ் நேரத்தில் கொம்பு தூக்கிக் கொண்டு நிற்கிறது ஒரு கோஷ்டி. ‘எந்த பக்கத்திலிருந்து எவன் கேஸ் போடுவான்னே தெரியல. இருந்தாலும் சமாளிப்போம்’ என்று ரிலீசுக்கு ரெண்டு மாசத்திற்கு முன்பிருந்தே…
vijay with son
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். இதற்காக ஒரு டெக்னிகல் குழுவை வைத்துக் கொண்டு அவர் செயல்பட்டாலும், அவ்வப்போது நேரடியாக அதை கண்காணித்து தனது ரசிகர்களிடம் உரையாடுகிற அளவுக்கு நேரம் ஒதுக்கிக் கொள்கிறார். ஏனிந்த திடீர் மாற்றம்? அவரது மகன் சஞ்சய்க்கே இப்போது ட்விட்டர் பேஸ்புக்கெல்லாம் தெரிய ஆரம்பித்திருப்பதுதான். அவ்வப்போது மகனின் சமூக வலைதள ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் கவனித்த விஜய் தானாக அதற்குள் ஐக்கியமானாராம். இன்னொன்று……
blade
சமீபத்தில் ‘சத்யம்’ திரையரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார் சதுரங்க வேட்டை நட்ராஜ். இவர் பெயரை சொல்லும் போதெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்தது. இவர் பேச எழுந்தால் பயங்கர கைத்தட்டல்! ஒரு கேமிராமேன் ஹீரோவாக நடிப்பதையே பொறுத்துக் கொள்ள முடியாத தொழில் முறை ஹீரோக்களால். இவர் சதுரங்க வேட்டை மூலம் வெற்றிப்பட ஹீரோவானதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதுவும், இப்படி பொது நிகழ்ச்சிகளில் மொத்த கைத்தட்டல்களையும் அள்ளிக்…
ajith-vijay-bike
Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் பைக்கிலும், சைக்கிளிலும் படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்கிற அச்சம் வருமே? மண்ணாங்கட்டி! முகத்திற்கு ஒரு ஹெல்மெட் போட்டுக் கொண்டால் போச்சு. இப்படிதான் ஆர்யா தினந்தோறும் படப்பிடிப்புக்கு சைக்கிளில் வருகிறார். உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆச்சு…
kappal-movie-audio-launch
ஒரு காகித கப்பலை டைரக்டர் ஷங்கர் கொடுக்க, அதை தன் கையால் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மிதக்கவிட்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில வருடங்களில் சொந்தப்படம் எடுத்து, தான் சேர்த்து வைத்த கட்டுக் கட்டான பணத்தையெல்லாம் இப்படி காகித கப்பலாக தொலைத்தவர் ஷங்கர். இந்த முறை, ‘கப்பல்’ என்ற பெயரில் வேறொருவர் தயாரித்த படத்தை வாங்கி வெளியிடுகிறார். போன பணமெல்லாம் கப்பலில் ஏற்றுகிற அளவுக்கு வந்து சேரட்டும் என்று வாழ்த்துவோம்.…
Page 20 of 25« First...10...1819202122...Last »

all news