thala

ajith-MSV
ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத் தெரியாது. டி.வி சேனல் மாற்றத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஆர்மோனியமும் அதில் வழியும் இசையும்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத அப்படிப்பட்ட ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்னையிலிருந்தும் வராத அஜீத்தை என்னவென்று சொல்வது?…
ajith-simbu whats app
கடந்த இரண்டு நாட்களாகவே மாவட்ட தலைநகரங்களில் இயங்கி வரும் (சைலன்ட்டாக) அஜீத் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வருகிறது. அதையும் அவர்கள் கண்ணும் கருத்துமாக ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வேகம் நீடித்தால், வாலு படம் திரைக்கு வரும்போது அநேகமாக அஜீத் ரசிகர்கள் அத்தனை பேர் பார்வைக்கும் அது சென்று சேர்த்திருக்கும். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் என்ன? தல ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. நடிகர் சிம்பு…
appu
யாரையும் அவர்களே நினைத்துப்பார்க்க முடியாத விதத்தில் ஆச்சர்யமூட்டி பார்ப்பதில் அஜீத்தை விட்டால் ஆளேயில்லை. தினந்தோறும் படப்பிடிப்பில் யாரையாவது கவராமல் போவதேயில்லை அவர். அஜீத் பட ஷுட்டிங்கில் பணியாற்றிய எவரை கேட்டாலும், அஜீத் குறித்த ஒரு நல்ல சம்பவம் வைத்திருப்பார். அப்படியொரு அனுபவமும் சம்பவமும் இப்போது அப்புக்குட்டி வாயால் வருவதில் ஆச்சர்யமில்லைதான். அப்படியென்ன செய்துவிட்டார் அஜீத்? அதை அப்புக்குட்டி என்கிற சிவபாலன் வாயால் கேட்டால்தான் தெரியும். ‘ வீரம் படப்பிடிப்பின் போது…
EA-ajith
பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தேதியிலும் சிக்கல் என்று குறுகுறுக்கிறது கோடம்பாக்கம். இந்த 29 ந் தேதிக்கு வராவிட்டால் பிறகு எப்போ? அநேகமாக பிப்ரவரி 13 ந் தேதி வெளியாகலாம் என்கிறார்கள். ஏன் இந்த தடை தாமதம்? ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.…
climax-EA-ajith
முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி… அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும், பொறுத்துக் கொண்டு ஷுட்டிங் கிளம்பிவிடுவது கூட சமயங்களில் அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது? கதை விவாதத்திலும் பங்கேற்கிற அளவுக்கு தன் படத்திற்காக மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படிதான் கவுதம் மேனனுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை விவாதத்தில் பல நாட்கள்…
EA posponed
சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர் மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தன் படத்தின் ரிலீசை தள்ளிப் போட்டாராம். அந்த பிரமுகர் ஐ படத்தை வெளியிடுவதால் இந்த மிரட்டலாம். அடக்கடவுளே… இப்படியுமா கதையளப்பது? சரி போகட்டும்… நிஜ காரணம் என்ன? ‘என்னை அறிந்தால்’ வட்டாரத்தில் விசாரித்தால், ‘தினம் ஒரு…
EA postponed
‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான் என்றும் தெரிவித்திருந்தோம். http://www.newtamilcinema.com/goutham-ajith-clash/ எப்படியோ… அவர்கள் இருவருக்குமான மனக்கசப்பை பேசி பேசி தீர்த்தவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்தான். அதற்கப்புறம் வேலைகள் ஜரூராக நடந்தாலும், படத்தை பொங்கலுக்கு கொண்டு வர முடியாதபடி சிக்கல். பின் தயாரிப்பு வேலைகள்…
goutham-ajith-clash
எப்படியாவது படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தின் தயாரிப்பு வட்டாரம். இயக்குனர் கவுதம் மேனனும், ஹீரோ அஜீத்தும் ஒத்துழைப்பு கொடுத்தாலொழிய அது நடக்கப் போவதில்லை. ஆனால் இந்த பொன்னான நேரத்தில், யார் கண் பட்டதோ? கடந்த வாரத்தில் ஐந்து நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை அஜீத். ஒவ்வொரு நாளும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு யூனிட்டோடு கிளம்பிப் போகும் கவுதம், அஜீத் வராததால்…
‘என் கதையை திருடிட்டாங்க… ’ அஜீத்தின் என்னை அறிந்தால்  படத்திற்கும் சிக்கல்? ‘இனிமே யாராவது இப்படி கௌம்பி வந்தீங்க? அவ்ளோதான்…’ என்று விஜயகாந்தின் நாக்கை இரவல் வாங்கிக் கொண்டு துருத்த ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘கதை திருட்டு குற்றம் சாட்டுகிறவர்களுக்கு எதிராக எங்க நடிகர் சங்கம் மொத்தமும் ஒரே குரல் கொடுப்போம்’ என்று சமீபத்தில்தான் சங்க தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். அதற்குள் ‘என்னை அறிந்தால்’ கதை என்னோடது என்று கூறிக் கொண்டு சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார் ஒரு உதவி இயக்குனர். ஆனால் அர்த்த ராத்திரியில…
இதுதான்  அஜீத்தின்  ‘என்னை அறிந்தால் ’  கதை! ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டு வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங்கிலிருந்து பர்மிஷன் போட்டுவிட்டு ஐதராபாத்திற்கு ஓடிச் சென்றார் அனுஷ்கா. விழா முடிந்த அடுத்த நொடியே சென்னைக்கு ரிட்டர்ன் ஆனார். ஏன் இந்த அவசரம்? எப்படியாவது பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ படத்தை வெளிக் கொண்டு வர வேண்டுமே? அந்த வேகத்தில் போய் கொண்டிருக்கிறது ஷுட்டிங். இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்? இதில் அருண்விஜயை…
ARM-ajith
‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே போகிறது. ஏதாவது பெரிய சர்ச்சைகள் கிளம்பும்போது, ‘அது என் அக்கவுண்ட்டே இல்ல. அது போலி சார் போலி…’ என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இந்த எமர்ஜென்ஸி இக்கக்கட்டான…
EA
‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா… ?’ இப்படியொரு புதுக்குரலாக கோடம்பாக்கத்தில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் ‘அமுக்குரா அவர…’ என்று கானா பாலாவை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இந்த வியாதி இல்லாத சினிமாக்காரர்களே இல்லை என்கிற அளவுக்கு ஜெயிச்சவங்க பின்னால ஓடுற வழக்கம் தொடர்கிறது. பவர்ஸ்டார் சீனிவாசனை எப்படியோ கூட்டி பெருக்கி ஒரு காமெடி நடிகராக்கினார் சந்தானம். அதற்கப்புறம் என் படத்திலும் அவரை நடிக்க வைக்கிறேன் என்று கிளம்பிய கூட்டம்…
ennai arindhal
எல்லாம் இந்த ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் பஞ்சாயத்துதான்! படத்துக்கு ‘வசூல்’ என்று பேர் வச்சுருக்கோம். நீங்க உருப்படியா ஒரு தலைப்பு சொல்லலேன்னா நாங்க அதை அறிவிக்கிறதை தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு தகவல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தரப்பிலிருந்து வந்ததும்தான் அதிரிபுதிரியாக ஒரு முடிவுக்கு வந்தார் கவுதம் மேனன். உடனடியாக ‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. படத்தில் ஆறு பாடல்கள். இன்னும் மூன்று பாடல்களை இனிமேல்தான் கம்போஸ் செய்ய…
ajith-vijay-reporters
முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் எழுத தகுதியானதை மட்டும் எழுதி வந்தார்கள் நிருபர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த இயல்பு கெட்டுப்போயிருக்கிறது. நடிகர்கள் மீடியாவை சந்திக்கவே அஞ்சுகிறார்கள். முன்பெல்லாம் அஜீத்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும்…
ajith-hansika
பெரிய ஹீரோக்களை வளைப்பதற்காக ஹீரோயின்கள் முட்டி மோதுகிற விஷயம் இருக்கிறதே… அது காளை ஃபைட், சேவல் ஃபைட்டுகளையும் விஞ்சியது! அநேகமாக தென்னக மொழி ஹீரோயின்கள் அத்தனை பேரும் இந்த கோழி ஃபைட்டில் மூக்கை நுழைத்து கொத்துப்பட்டு கிடப்பதெல்லாம் சர்வ சாதாரணம். ஒரே ஹீரோவை ஆளாளுக்கு ரவுண்டு கட்டினால் அவர்தான் என்ன செய்வார்? இருந்தாலும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. தமிழ்சினிமாவில் டாப் லெவலில் இருக்கிற ஐந்து ஹீரோக்களை வளைப்பதில் இவர்கள் காட்டுகிற வேகம்…
Ajith family
சொல்லெல்லாம் இனிப்பு, சுவையெல்லாம் இனிப்பு என்றாகிக் கிடக்கிறது அஜீத் வட்டாரம். அவர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி அப்படி. அஜீத் மீண்டும் அப்பாவாக போகிறாராம். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது இந்த தகவல்! காரணம், மீடியாவில் இப்படியெல்லாம் செய்திகள் வருவதை அஜீத் விரும்ப மாட்டார் என்பதால்தான். ஆனால் சில முக்கியமான செய்திகளை எப்படி பாதுகாத்தாலும் வெளிவராமல் தடுக்க முடியாதே? அப்படி கசிந்ததுதான் இந்த தகவல். மகள் அனோஷ்கா பிறந்ததிலிருந்து அந்த குழந்தையை…
ajith-new-film
சென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி? மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே ஓரிடத்தில் உள் வாங்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். நல்லவேளையாக அந்த நேரத்தில் ஒரு டூ விலர் கூட அந்த இடத்தை கிராஸ் செய்யாதது ‘அம்மா’ செஞ்ச புண்ணியம். இல்லையென்றால் சட்டசபையில் அதற்கும்…
thala-thalapathy
தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது. அஜீத் வீட்டிற்கு தபால் எடுத்து வரும் தபால்காரர் தனியாக போர்ட்டர் வைக்க வேண்டிய அளவுக்கு கண்ணீர் கடிதங்கள் நிரம்பி வழிகிறதாம். ‘எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டங்களின் மீதெல்லாம் விருப்பம்…
soori-ajith-vijay
தலைப்பை நல்லா படிச்சிட்டீங்களா? இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை உலுக்கோ உலுக்கென உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது போதாதா? பிரஸ்சிடமிருந்து வர்ற போன் அதுக்காக இருக்குமோ என்று அஞ்சிக் கொண்டே அட்டர்ன் பண்ணுகிறார் சூரி. பத்த வச்ச படுபாவி எவனோ தெரியல, ஆனா, நம்மளை நிக்க வச்சு சுளுக்கெடுக்கிறாங்களே என்று நினைத்திருக்கலாம். இப்போதெல்லாம் போனை கூட எடுப்பதில்லையாம் சூரி. அஜீத் நடிக்கும் ஏதோவொரு படத்தில் நடிக்க சூரியை அழைத்ததாகவும், அவர் ‘அஜீத் சார்…
Page 9 of 9« First...56789

all news