thala

Ajith-Lakshmimenon
அஜீத் பற்றி பேசினால் ஆளுக்கொரு சம்பவம் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அது அவரது எளிமை பற்றியும், ‘‘எடுத்துக்கோ” என்று கொடுத்தது பற்றியுமாகதான் இருக்கும்! நாலு பேருக்கு செய்யறது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் என்று இருப்பவர் அவர். அப்படியிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிற தகவல்கள் பல, அவரது கிரீடத்தில் மேலும் மேலும் சிறகுகளை சொருகிக் கொண்டேயிருக்கும். ஆனால் முதன் முறையாக ஒரு விஷயத்தை லட்சுமிமேனன் மறுத்திருக்கிறார். ஆனாலும் தலைபோகிற சறுக்கல் இல்லை…
ajith-Rest
எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம் கலெக்ஷன். உலகம் கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டது அந்த ஹிட்டை பார்த்துக் கூட அல்ல. தமிழ்நாடே மிதக்குற அளவுக்கு மழை. இவ்வளவு மழையிலும் வேதாளம் தியேட்டர்கள் புல் ஆனதே… அதை நினைத்துதான்!…
Ajith-with-siva
அஜீத் ஹேப்பி. அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் ஹேப்பி. தயாரிப்பாளர் ஹேப்பி. விநியோகஸ்தர்கள் ஹேப்பி, தியேட்டர்காரர்கள் ஹேப்பி, டைரக்டரும் ஹேப்ப்ப்ப்ப்ப்பிதான்… ஆனால்? என்று கேள்விக்குறி வைக்கிறது வேதாளத்தை நன்கு அறிந்த உள் வட்டாரம்! அந்த ஆனாலுக்கு பின்னாலிருக்கும் ஐயோவை கேட்டால், “அடப்பாவமே” என்பீர்கள். ஒரு மாஸ் ஹீரோவுக்கு என்ன மாதிரியான சீன்கள் வைத்தால் ரசிப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப ஒரு படத்தை கொடுத்த டைரக்டர் சிவாவை ரிலீசுக்கு பின் நேரில்…
thala thalapthi
vedalam-review
அஜீத் ரசிர்களுக்காகவே ‘ஆர்டர் கொடுத்து’ செய்யப்பட்ட படம்! வர வர ‘சால்ட்’ தூக்கலாகவும், ‘பெப்பர்’ குறைச்சலாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார் அஜீத். ஆனால் கட்டைய தூக்குனாலும் கை தட்டுவாங்க. கட்டை விரலை தூக்குனாலும் கை தட்டுவாங்க என்றாகிவிட்ட பின், சால்ட்டாவது பெப்பராவது? எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது அஜீத்தின் அதிமந்திர புன்னகையும், அமர்க்களமான கம்பீரமும்! அவரது அறிமுகக் காட்சிக்காகவே ஆறு மாசம் ரூம் போட்டு யோசித்திருப்பார் போலிருக்கிறது டைரக்டர் சிவா. “அண்ணே… கத்திய…
vedalam-14lakhs
இந்த அட்வான்ஸ் புக்கிங் வந்தாலும் வந்தது! நாளைய பசிக்கு இன்றைக்கே பொட்டலம் ரெடி! அதுவும் நாளைக்கும் சூடாக இருப்பதைப் போல!! அப்படிதான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ஒரே ஒரு ஸாரி. அதையும் தாண்டிய விசேஷம் இது. தமிழ்சினிமா வரலாற்றில் சாதனை என்கிறது சினிமாவுலகம். வெளிப்படையாக எந்த தியேட்டர் என்று சொன்னால், கலெக்டரோ, வணிக வரி ஆணையரோ உள்ளே புகுந்து சம்பந்தப்பட்டவர்களின் சொக்காயை கழற்றக் கூடும்…
vedalam5
பொதுவாகவே அஜீத் படத்தில் டெக்னிக்கல் சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற இயக்குனர்கள் வரிசையில் ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி மாதிரி நமக்கும் ஒரு இடம் வேண்டும் என்று நினைக்காத இயக்குனர்களும் இருக்க முடியாது. ஆனால் அவரவர்களுக்கான ஆர்வத்தையும் பட்ஜெட்டையும் அதைதாண்டிய அறிவையும் பொருத்துதான் அமைகிறது அவையெல்லாம். தான் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவையெல்லாம் வெற்றிக் கணக்கில் இருப்பதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற இயக்குனராக இருக்கிறார் சிறுத்தை சிவா.…
shruthihaasan
கமல்ஹாசன் மகள் என்பதாலேயே படப்பிடிப்பில் சற்று அதிகப்படியாக விலகி நின்ற அஜீத், படத்தில் மட்டும் வழிய வழிய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்திருக்கிறாராம். ஸ்ருதிஹாசனுக்கு லாயர் வேஷம். ஆனால் ஒரு வழக்கில் கூட வெற்றி பெறாத லாயர். அந்த நேரத்தில்தான் ஒரு புது வழக்கோடு அஜீத் வர, “சிக்குச்சுடா பார்ட்டி” என்று சந்தோஷமாகிறார் ஸ்ருதி. இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள். இந்த முறை வழக்கில் மட்டும் தோல்வியல்ல, அஜீத்தால் வேறு பல சிக்கல்களும்…
vedalamajith
அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து அநேக வருஷமாச்சு. அவர் மீண்டும் அப்படியொரு ரோலில் நடிக்க வேண்டும்! இதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. வேதாளம் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், இதில் அஜீத்துக்கு இரட்டை வேடம் இல்லை. இரண்டு கெட்டப்! அவ்வளவுதான். கொல்கத்தாவில் டாக்ஸி டிரைவராக இருக்கும் அஜீத், செகன்ட் ஆஃபில் சென்னையிலிருப்பார். இது பிளாஷ்பேக். அதுமட்டுமல்ல, இந்த கேரக்டரில் அவரது ஜிப்பாவும், மொட்டைத்தலையும்…
veadalam-lakshimenon
ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்? பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த தங்கை கேரக்டர் மனசுக்குள் புகுந்து புத்தியை தடுமாற வைக்குது இல்லையா? கிட்டதட்ட அப்படியொரு பதில்தான் வேதாளம் படத்தில் நடித்த லட்சுமிமேனன் விஷயத்திலும் வரப்போகிறது என்கிறார்கள் படத்தை பார்த்தவர்கள். ஹீரோயின் ஸ்ருதியாக இருந்தாலும்,…
ajith-histarical
பாகுபலி ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியாது. ஆனால் அந்த டைப் படங்களில் கவனம் செலுத்தும் இயக்குனர்களுக்கு கைநிறைய கல்கண்டு கொடுத்தேயாக வேண்டும். ஏனென்றால் இதில் நடிக்கப் போகிற அத்தனை ஹீரோக்களும் முன்னணி இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே! கொட்டுகிற பணத்தை அறுவடை செய்ய வேண்டும் என்றால், ஜெய்யோ, சிபியோ…. நடக்குமா அதெல்லாம்? இல்லை… அதையெல்லாம் சகிக்கதான் முடியுமா? சரி, விஷயத்துக்கு வருவோம். அறிந்தும் அறியாமலும் துவங்கி சமீபத்தில் வந்த…
Vedalam-deepavali
‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம் எப்போது முடித்து எப்போது படத்தை ரிலீஸ் செய்ய? அதனால் இந்த தீபாவளிக்கு அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் இப்படி வரும் செய்திகளை படித்தும் கேட்டும் பகீர் சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறதாம் வேதாளம் டீம்!…
Vedalam – Veera Vinayaka Lyric Video Song
ajith-vedalam
அஜீத்துக்கு ஏதுப்பா தங்கச்சி? என்று அதிர்ச்சியாவார்கள் ரசிகர்கள். அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மனைவியை தவிர மற்றவங்க எல்லாரும் அக்கா தங்கச்சிங்கதான்! ஆனால் நாம் சொல்ல வந்த விஷயமே வேற… வேதாளம் படத்தின் டீசர் பார்த்தவர்கள் ஓரளவுக்கு யூகித்திருப்பார்கள். அஜீத் உடம்புக்குள் ஆவி புகுந்திருப்பதை! ஆவி படக்கதை சீசன் இது. இந்த ஆவி அல்டிமேட் அஜீத்தை மட்டும் விட்டுவிடுமா என்ன? கண்ணாமூச்சி ரே ரே… என்று அச்சுறுத்த வைத்திருக்கிறது. செம…
thala
அஜீத் எந்த டைரக்டரையும் தேடிப் போனதில்லை. அவரிடம் கதை சொல்வதற்காகதான் காத்திருக்கிறார்கள் பலரும். பில்லா, மங்காத்தா வெற்றிகளுக்கு பின்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. கடந்த பல வருடங்களாகவே இதுதான் நிலைமை. கவுதம் மேனன் ஆகட்டும், வெங்கட் பிரபு ஆகட்டும், வீரம் சிவா ஆகட்டும்… அஜீத் வீட்டு கேட் திறந்தால்தான் எல்லாம் நடக்கும். ஆனால் அவரே  ஐதராபாத் சென்று டைரக்டர் விக்ரம் குமாரை சந்தித்து விட்டு வந்தார்…
ajith-MSV
ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத் தெரியாது. டி.வி சேனல் மாற்றத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஆர்மோனியமும் அதில் வழியும் இசையும்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத அப்படிப்பட்ட ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்னையிலிருந்தும் வராத அஜீத்தை என்னவென்று சொல்வது?…
ajith-simbu whats app
கடந்த இரண்டு நாட்களாகவே மாவட்ட தலைநகரங்களில் இயங்கி வரும் (சைலன்ட்டாக) அஜீத் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வருகிறது. அதையும் அவர்கள் கண்ணும் கருத்துமாக ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வேகம் நீடித்தால், வாலு படம் திரைக்கு வரும்போது அநேகமாக அஜீத் ரசிகர்கள் அத்தனை பேர் பார்வைக்கும் அது சென்று சேர்த்திருக்கும். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் என்ன? தல ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. நடிகர் சிம்பு…
appu
யாரையும் அவர்களே நினைத்துப்பார்க்க முடியாத விதத்தில் ஆச்சர்யமூட்டி பார்ப்பதில் அஜீத்தை விட்டால் ஆளேயில்லை. தினந்தோறும் படப்பிடிப்பில் யாரையாவது கவராமல் போவதேயில்லை அவர். அஜீத் பட ஷுட்டிங்கில் பணியாற்றிய எவரை கேட்டாலும், அஜீத் குறித்த ஒரு நல்ல சம்பவம் வைத்திருப்பார். அப்படியொரு அனுபவமும் சம்பவமும் இப்போது அப்புக்குட்டி வாயால் வருவதில் ஆச்சர்யமில்லைதான். அப்படியென்ன செய்துவிட்டார் அஜீத்? அதை அப்புக்குட்டி என்கிற சிவபாலன் வாயால் கேட்டால்தான் தெரியும். ‘ வீரம் படப்பிடிப்பின் போது…
EA-ajith
பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தேதியிலும் சிக்கல் என்று குறுகுறுக்கிறது கோடம்பாக்கம். இந்த 29 ந் தேதிக்கு வராவிட்டால் பிறகு எப்போ? அநேகமாக பிப்ரவரி 13 ந் தேதி வெளியாகலாம் என்கிறார்கள். ஏன் இந்த தடை தாமதம்? ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.…
climax-EA-ajith
முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி… அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும், பொறுத்துக் கொண்டு ஷுட்டிங் கிளம்பிவிடுவது கூட சமயங்களில் அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது? கதை விவாதத்திலும் பங்கேற்கிற அளவுக்கு தன் படத்திற்காக மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படிதான் கவுதம் மேனனுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை விவாதத்தில் பல நாட்கள்…
Page 6 of 7« First...34567

all news