thala

ajith-mangatha-part-2
தானா வர்ற ஸ்ரீதேவியை தள்ளிக்கோ தள்ளிக்கோ என்றால் இதுதான் கதி போலும்! மங்காத்தா வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த சில வாரங்களிலேயே வெங்கட் பிரபுவை அழைத்த அஜீத், “மீண்டும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம். ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்று கூற, “கையில உங்களுக்கு ஏற்ற கதையே இல்லையே சார்” என்று கூறிவிட்டார் வெங்கட் பிரபு. அதற்கப்புறம் அவர் தமிழ்சினிமாவில் வேறு வேறு படங்களால் சிக்கி சீரழிந்தது தனிக்கதை.…
irumugan is the story for ajith.
 
ajith-ar-murugadoss
வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா? அந்த படத்திற்கு தலைப்பு கூட ‘ரெட்டத்தல’ என்று வைத்திருந்தார் முருகதாஸ். அஜீத்திற்கு ‘தல’ பட்டம் கொடுத்தவரே முருகதாஸ் என்பதாலும், மீண்டும் அவர் ‘ரெட்டத்தல’ என்ற…
Vignesh shivan convinced surya…
 
Surya Vignesivan
சூர்யாவிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல! பா.ரஞ்சித்திடம் ஸ்கிரிப்ட் புக் வாங்கிப் படித்த சூர்யா, அதில் பல டயலாக்குகளை அடித்து விட்டு, இந்தந்த இடங்களில் எல்லாம் திருத்திக் கொண்டு வாங்க என்று கூற, கண்ணீர் விடாத குறையாக கவலைப்பட்டார் பா.ரஞ்சித். அதற்கப்புறம் அவருக்கு ரஜினியே கிடைத்ததெல்லாம் காலம் தந்த கிரெட் கார்டு! முதலில் “இது ஹீரோயின் சப்ஜெக்டாக இருக்கே?” என்று விக்னேஷ் சிவனையும் பதம் பார்த்து அனுப்பினார்…
Vignesh shivan turns into hero because of surya and ajith.
 
vignesh sivan turns a hero because of ajith and surya.  
Vigneshsivan-Nayanthara
சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே? அஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம்…
Vignesh Sivan Ajith
அஜீத் விஜய் மாதிரியான பெரிய நடிகர்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தால் போதும்! கையில் பரம் பைசா இல்லாவிட்டாலும், அந்த பரமாத்வுக்கே சவால் விடலாம்! “படத்தை நம்ம பேனர்ல எடுக்கலாம்… அதுக்கு இஷ்டமில்லயா? மொத்த படத்துக்கும் நானே பைனான்ஸ் தர்றேன்” என்று வரிசையில் நின்று வாழை இலை விருந்து வைக்கும் ஒரு கூட்டம். நார் இல்லாமலே இப்படி பூ கட்டலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பலர், “அண்ணே… தலைவா… கடவுளே… தெய்வமே…”…
Death House Ajith
பார்க்காதே… பேசாதே… கேட்காதே…. என்று காந்தி பொம்மை ஆகிவிட்டார் அஜீத்! (அவர் மட்டுமா, அவரைப்போல பல ஹீரோக்கள்) ஒருவகையில் அதுதான் நிம்மதி. நல்லது. அப்படியே பேஸ்புக் பார்க்காதே, ட்விட்டர் பக்கம் போகாதே, வாட்ஸ் ஆப்பில் மேயாதே என்றும் கூறியிருப்பார் காந்தி. நல்லவேளை… இந்த கண்றாவிகளுக்கு முன்பே அவர் போய் சேர்ந்துவிட்டார். தமிழ் சினிமா பிரபலங்கள் யாராவது இறந்துவிட்டால், இறந்தவரை அடக்கம் செய்வதற்குள் செல்ஃபி எடுத்துவிட வேண்டும் என்று கூடுகிற ஒரு…
Amitab Twit
ஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத்! ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு வைக்கிற ஆள். வீட்டு ஜன்னலை சார்த்த திறக்க கூட ஜாதகத்தை ஆராய்கிற அளவுக்கு அவரே முழுமையாக அதை நம்புவதால் எடுத்து வைக்கிற எல்லா ஸ்டெப்பும் அந்த 12…
ajith news
பத்திரிகையாளர்களைதான் மறந்துவிட்டாரே ஒழிய, பழசையெல்லாம் ஞாபகத்தில்தான் வைத்திருக்கிறார் அஜீத். அதற்கு மிக சரியான உதாரணம், நாம் இப்போது சொல்லப் போகும் சம்பவம்தான். சில வாரங்களுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அப்படி பேசிக் கொண்டவர்கள் அஜீத்தும், அமிதாப்பச்சனும்தான். ஒரு காலத்தில் ஏகப்பட்ட கனவுகளோடு சென்னையில் தன் சினிமா கம்பெனியை துவங்கிய இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் அமிதாப், ‘உல்லாசம்’ என்ற படத்தை தயாரித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.…
Adlee with Ajith
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்… இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது. அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா! தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார் விஜய். “என் பிறந்த நாள் கிஃப்ட் இதுதான். சீக்கிரம் ஒரு கதையை சொல்லுங்க. உங்களுக்கு என் கால்ஷீட் எப்பவும் உண்டு!” கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஒரு படைப்பாளிக்கு இதுதானே பேரின்பம்?…
தளபதி விஜய்யும் தல அஜீத்தும் வந்தாங்க – இது அம்மா கணக்கு
Ajith-AIADMK
தேர்தல் திருவிழா முடிந்தாலும் செண்டை மேள கச்சேரி முடிய இன்னும் சில காலம் ஆகும் போலிருக்கிறது. 6 வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும் ஜெ.வை வாழ்த்த திரையுலகம் க்யூ கட்டி நிற்கிறது. அம்மா… தேவை ஒரே ஒரு அப்பாயினிட்மென்ட் என்று சினிமா சங்கங்கள் அத்தனையும் கடிதம் கொடுத்துவிட்டு காத்துக் கிடக்கின்றன. அது ஒருபுறமிருக்க, முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்ளும் அந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு…
AIADMK Ajith
கடிகாரத்தை தின்று விட்டு காலண்டரை விரித்துதான் தூங்கும் கொக்கு! ஏன்? உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கணுமா வேணாமா? அதனால்தான்.. அப்படியொரு கொக்காக காத்திருந்தார் அஜீத் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அஜீத் நடித்து விரைவில் துவங்குவதாக சொல்லப்பட்டிருக்கும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1 ந் தேதி துவங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் இன்னும் என்று நாட்களை கடத்தி வந்தார் அவர். இன்னொரு பக்கம் கதையில்…
ajith shooting news
கோடம்பாக்கத்தில் உலவிய தகவல்களின் படி பார்த்தால் கூட இந்நேரம் பாதி கிணறை தாண்டியிருக்க வேண்டும் சிவாவும் அஜீத்தும். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு இவ்விருவரும் இணையும் படத்தின் ஷுட்டிங் இப்போது மே தாண்டி, ஜுன் தாண்டி, ஜுலைக்கு போயிருக்கிறது. அதுவும் தாண்டுமா என்பதை இப்போதைக்கு உறுதிபடுத்த முடியாது என்றாலும், அவ்வளவு தயக்கத்திற்கும் காரணம் சென்டிமென்ட்தான் என்கிறது அஜீத்தின் புதுப்பட வட்டாரம். மே 1 ந் தேதி அஜீத்தின் பிறந்த நாளில்…
Thala story
அஜீத்தின் அடுத்தப்பட அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சோல்ஜர்களும் எக்கச்சக்க வெயிட்டிங்! இந்த நிலையில் வேதாளம் பட இயக்குனர் சிவா அடுத்த கதையை இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம். நடுவில் அவருக்கு ஒரு திட்டம் அல்லது யோசனை. அதை அஜீத்திடம் கேட்டு உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு டெவலப் செய்யலாம் என்று நினைத்தாராம். அதற்கு அஜீத் சொன்ன பதில்தான், பின்னாலேயே வெயிட்டிங்கில் இருக்கும் விஷ்ணுவர்த்தனை செமத்தியாக போட்டு…
sivalinga Rajini
“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல முடியும். புதுமை பண்றேன்னு அம்மாவை படம் முழுக்க சும்மான்னு சொல்ல முடியாதுல்ல?” பி.வாசுவின் இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது அறிவுஜீவி இயக்குனர்கள்தான். போகட்டும்… விஷயம் அதுவல்ல. சினிமாதான் தன் மூச்சு என்று…
Uthayanith Ajith
ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது. நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியால், உள்ளுக்குள் இன்னொரு போட்டி உருவாகி தலை ஒருபக்கமும் வால் இன்னொரு பக்கமுமாக இரண்டு தரப்பினரின் கைகளில் சிக்கி அல்லோலப்படுகிறது. இதில் யார் யாரை கவிழ்ப்பார்கள் என்ற போட்டி முடிவு ஒருபக்கம் இருக்கட்டும். அவ்வளவு பரபரப்பிலும் ஒருவர் வர்லீயே… அது ஏன்ப்பா? என்று கேட்டு வந்தார்கள்…
Page 4 of 6« First...23456