superstar rajini

Rajinikanth Enters Into Ministry | Govt Post Allotted – Twisty Politics.
rajini
lawance
Will Rajinikanth Come To Politics?Shocking Report.
rajini-politics
அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்.
rajini speaks to modi for cauvery issue actor parthiban idea.
 
rajinikanth
இன்னும் எத்தனை காலத்திற்குதான் அவரை உலுக்குவார்களோ? இவ்வளவு கலவரத்திலும், மறக்காமல் ரஜினியின் போஸ்டரில் தீ வைக்கிறான் ஒரு கன்னட வெறியன். அந்தளவுக்கு அவருக்கும் எதிர்ப்பு இருக்கிறது கர்நாடகத்தில்! இங்கோ அவரை இன்னும் இன்னும் குத்திக் கொண்டேயிருக்கிறது ஊர் உலகம்! கிட்டதட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் உப்பை தின்று, தமிழ் காற்றை சுவாசித்து, தமிழ் தண்ணீர் குடித்து, தமிழனாகவே மாறிவிட்ட அவரை இன்னும் எதை சொல்லி உரசிப் பார்க்குமோ தமிழகம்? “என்…
Writer Balakumaran
பெரும்பாலும், எழுத்தாளர்களின் பணி எழுதுவதும், எழுதியதால் வந்ததை எண்ணுவதுமாக இருக்கும்! ஆனால் பாலகுமாரன் அப்படிப்பட்டவரல்ல. அவரே சித்தராக… அவரே முனிவராக… சமயங்களில் அவரே கடவுளாகவும் மாறிப்போனவர். அவரது அபிமானிகள் பலருக்கு பாலகுமாரனின் தோற்றமே பரவசத்தை ஏற்படுத்திவிடும். கிட்டதட்ட ஆன்மீகத்தில் கரைந்தே விட்ட பாலகுமாரன், ரஜினியை பொருத்தவரை எப்போதும் ஸ்பெஷல்! பாலகுமாரனுக்கும் அவருக்கும் நடிகர் எழுத்தாளர் தாண்டிய ஒரு ஆன்மீக தொடர்பு இருக்கிறது. நேரில் சந்தித்தால் அது பற்றி பேசி பேசி…
RajiniSalary
‘அட்சதை ஒரு கையில்… அருவா இன்னொரு கையில்’ என்று அந்நியன் விக்ரம் போல உலவும் அநேகம் பேரால், ஒவ்வொரு சினிமா ரிலீசும் ஒரு நரபலி சாமியாரின் ரத்த வெறிக்கு சிக்கிய உயிருள்ள ஜீவன் போலவே துடிக்கிறது. இதில் டாப் ஹீரோ, சுமார் டாப் ஹீரோ, சும்மாச்சும் ஹீரோ என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலைமைக்கு யார் காரணம்? படம் எடுப்பவரா, படத்தில் நடிப்பவரா, அல்லது படத்தை வெளியிடுகிற குழுவா?…
shanthanu reception
i vizha
ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘ஆர்னால்டு’ வருகிறார் என்றதுமே களை கட்டிவிட்டது. இதற்காக தனி விமானத்தில் சென்னை வந்த ஆர்னால்டை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா. அதற்கப்புறம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்னால்டு. மாலை சுமார் ஆறு மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் விழா துவங்குவதாக திட்டம். சென்னை டிராபிக் காரணமா? அல்லது தமிழகத்தில் கால் வைத்ததும், அமெரிக்காவின் பஞ்சுவாலிடி…
dhanush rajini
தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய அத்தனை பேருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ். ஒரு படம் வெற்றியா, தோல்வியா? அதன் கலெக்ஷன் எவ்வளவு என்பதையெல்லாம் வைத்து மனிதர்களை தீர்மானிப்பவரல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு பிடித்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும் வரவழைத்து பேசிவிடுகிற குணம் அவருக்குண்டு. ரஜினிக்கும்…
linga
ரஜினி, விஜய், அஜீத் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ, இல்லையோ? ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று சொல்லப்படும் கிரவுட் புல்லிங் ஆசாமிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்! நிச்சயம் கிளைமாக்ஸ் காட்சியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிற மாதிரி ஒரு சீனாவது எடுப்பார்கள். அந்த ஆயிரத்தில் ஒரு ஆளாக நின்றாலும் தினந்தோறும் துட்டு என்கிற கால்குலேஷன்தான் அது. (கமல் படங்கள் அப்படியல்ல, சில நேரங்களில் அவர் ஒருவரே தனியாளாக நின்று கிளைமாக்சை…
Director-shankar-with-Vijay
டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத டாப் இயக்குனர் ஒரே ஒருவர் என்றால் அது ஷங்கர்தான். அப்படிப்பட்டவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பார்ட்டி கொடுக்கிறார் என்றால், ஆஞ்சநேயர் கோவில் சுண்டல் கடலை மாதிரி அள்ளி அள்ளியா…
koopidu-10
காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் பற்றி கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர்களை போன்ற உதவி இயக்குனர்களுக்கே தெரியாமல் கூட பல சிக்கல்கள் அரங்கேறியிருக்கும். படத்தின் தனிப்பட்ட காஸ்ட்யூமரே அந்த சிக்கல்களையெல்லாம் இவர்களுக்கு தெரிய வராமல் சமாளித்திருப்பார். ஆனால் அப்படி மறைக்கப்பட்டதை கூட அன்றாடம் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு. அப்படிப்பட்ட காஸ்ட்யூமர் மட்டும் சிக்கி உதவி இயக்குனர் தப்பிய இரண்டு சம்பவங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.…
vijay-surya-anbu
இன்று சென்னையில் நடந்த ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிக முக்கியமான விவாதம் ஒன்றை சைலன்ட்டாக அரங்கேற்றிவிட்டு போனார் பிரபல பைனான்சியரும், விநியோகஸ்தருமான மதுரை அன்பு செழியன். இன்று தமிழ்சினிமாவை ஆட்சி செய்வதே அன்புச்செழியன்தான் என்றால் அது அதிகப்படியான புகழ்ச்சியாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் மதுரை மட்டுமல்ல, ஆல் தமிழ்நாடு விநியோகஸ்தர் என்ற நிலையிலிருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் கோடி கோடியாக கடன் கொடுத்து படத்தை வளர…
thala-thalapathy
தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது. அஜீத் வீட்டிற்கு தபால் எடுத்து வரும் தபால்காரர் தனியாக போர்ட்டர் வைக்க வேண்டிய அளவுக்கு கண்ணீர் கடிதங்கள் நிரம்பி வழிகிறதாம். ‘எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டங்களின் மீதெல்லாம் விருப்பம்…
vijay-birthday
இந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று அறிவித்தது. இதை தொடர்ந்து அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குமுதம் அலுவலகத்திற்கு நேரில் போய், தங்கள் நன்றியை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான் அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி. அதன் மீது கடந்த பல்லாண்டுகளாகவே ஆசை கொண்டிருந்த…
sathyam_vishal
நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற வலிமை மகத்தானது. ஆனால் அதையும் தானாக ஒடிய வைக்கிற இடம்தான் இந்த முள்வேலி நீண்டிருக்கும் கோடம்பாக்கம். வந்தவர் வந்த நிமிடத்திலிருந்தே ஒரு மேனேஜரை சந்திக்க முயன்று வருகிறாராம். வேறெதற்கு? மேனேஜர்கள் மனசு வைத்தால்தான் ஹீரோக்களை…