Slide

SooriVishal
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கதையும் இல்லை. சதையும் இல்லை. ஆனால் நீதான் புஸ்ப்பா புருஷனா என்கிற ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு படத்தை ரணகள காமெடியாக எடுத்து, வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார் எழில். அதற்கப்புறம் சில படங்கள் பிரஷ்ஷாக ரிலீஸ் ஆனாலும், வெள்ளைக்காரன் இன்னமும் தியேட்டரை விட்டு நகர்வதாக இல்லை. ஜனங்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குப் போய், கூட்டம் கூட்டமாக சிரித்தபடி திரும்புகிறார்கள். நிற்க! இப்படி ஊரையே சிரிக்க வைத்த…
LakshmiMenon-BF
பிரபலமான பலான வெப்சைட் ஒன்றில் நுழைந்து லட்சுமி மேனன் என்று தேடினால், அவரைப்போலவா… அல்லது அவரேதானா என்று குழம்பி வெதும்பிப் போகிற அளவுக்கு ஒரு பிகர் வருவதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி. லட்சுமிமேனனிடம் குளோஸ் அப்பில் வந்து பேசும் சிலர், இந்த விஷயத்தை அவருக்கு சொல்ல அவரும் அதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்ததாக கேள்வி. சம்பந்தப்பட்ட வலை தளத்திற்கு இமெயில் அனுப்பினாலும், மேட்டர் படம் நீக்கப்படுவதாக இல்லை. இந்த விஷயம் தனிச்…
Muthuna kathirikka review
“சாமியப் பார்க்க பூவோட போ! சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ!!” இந்த நடைமுறை யதார்த்தத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வேங்கடராகவன். சுந்தர்சிக்கு ஏற்ற கதையோடுதான் அவரை அணுகியிருக்கிறார். நாற்பது வயசை தாண்டியும் பொண்ணு கிடைக்காமல் சுற்றி வரும் அரசியல்வாதியான அவருக்கு, திடீரென தென்படும் பூனம் பாஜ்வா மீது லவ். லவ்வரின் பின்னணியை அறிய பின் தொடர்ந்து போனால், இவர் பள்ளிக்கூட நாளில் டாவடித்தாரே…. அந்த கிரணின் மகள்தான்…
Nayanthara-Vigneshsivan
முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது நடிகர் விக்ரமின் நிலைமை! தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து பரபரப்பாகிவிட்டது ஹீரோக்கள் வட்டாரம். அந்த செய்தி நிஜம்தானா, உண்மையிலேயே நயன்தாரா விக்னேஷ் சிவனை கழற்றிவிட்டுவிட்டாரா என்று அறிய ஆவலாக இருந்தார்கள். அவர்களுக்காக அல்ல. நிஜம் என்ன என்பதை அறிய நமது விசாரணையை…
Enthiran2
ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு ஸ்டில்லாக இருந்தாலும் சரி. அதை லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் கொண்டாடும் ரசிகர்களுக்காகவே இன்னும் பல படங்களில் அவர் நடிப்பதற்கு விரும்பக் கூடும். ஆனால் எந்திரன் 2 ன் பளுவாலும், அவர்களின் லேசான அலட்சியத்தாலும்…
Strike
‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான தண்டசெலவு’ என்ற பிரிவின் கீழ் பாழாய் போகிற பணம் கொஞ்ச நஞ்சமல்ல. பத்து தொழிலாளர்கள் இருந்தால் போதும் என்ற இடத்தில் ஐம்பது தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வந்து அட்ராசிடி பண்ணுகிற வேலையை கடந்த பல வருடங்களாகவே பார்த்து வருகிறது சினிமா தொழிலாளர் அமைப்பு.…
SherliDhas
தமிழில் மிக சொற்பமான படங்கள்தான் இவர் இசையமைத்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய படங்கள் அரை டஜன் இருக்கிறது. தமிழ்சினிமாவின் வளர்பிறை இசையமைப்பாளர் என்ற நம்பிக்கைக்குரிய அடையாளத்துடன் இருக்கும் இசையமைப்பாளர் மரியா மனோகர் தனது முகப்புத்தகத்தில் எழுதியிருக்கும் ஒரு விஷயம்… நிஜமாகவே ஷாக். காதல் அரங்கம் என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ஷெர்லிதாஸ், மரியா மனோகரின் மனசை கொள்ளையடித்தவராம். அதை…
GVPrakash-Lyca
டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி வருவதுடன், “தம்பியோட பேச்சு தாங்கலையே” என்று காதில் வழியும் ரத்தத்தை கையால் வழித்தெறிவதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன்? அதான் சொன்னோமே… நான்தான் நெக்ஸ்ட் சிவகார்த்திகேயன் என்று அவர் உதார் விட்ட விஷயத்தை? அப்படியே தனுஷ், சிம்புவோட…
நா வந்திட்டேன்னு சொல்லு! கபாலி புதிய டீசர்
Trisha - new
சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த பேராபத்திலிருந்து விலகவிருக்கிறார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் பேரலையாக உருவெடுத்து, பெரு மழையாக இடி இடித்துக் கொண்டிருந்ததல்லவா? அந்த சம்பவம் நடந்தேவிட்டது. தான் வாங்கிய பத்து லட்சம் அட்வான்சை மேள தாள முழக்கங்களோடு திருப்பிக் கொடுத்துவிட்டார் அவர். ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ பட இயக்குனர்தான் இவ்விருவரையும் வைத்து படம் பண்ண துடித்தவர். (நிஜமாகவே த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று போவாரோ என்னவோ?) இந்த கதையை…
Gazali
‘சாய்ந்தாடு’ என்று தன் படத்திற்கு எந்நேரத்தில் தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை. அவரை சாய வைத்தும் வேக வைத்தும் அனுப்பியிருக்கிறது சென்சார் அமைப்பு. சொல்லொணா அவமானத்திற்கு ஆளாகிவிட்டதாக கண்ணீர் வடிக்கும் அந்த அவரின் பெயர் கஸாலி! அறிமுக இயக்குனர். முன்னாள் பத்திரிகையாளர். சமூக ஆர்வலர். இன்னும் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா என்று எடுத்துச் சொல்ல பல்வேறு புரபைல்களை உள்ளடக்கியவர். அவரைதான் உள்ளங்கைக்குள் வைத்து ஒரேயடியாக உடைசலாக்கிவிட்டது சென்னை மண்டல சென்சார் அமைப்பு. என்ன…
Dhanush-GVprakash
கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ் இல்லை. பொதுவாகவே வெற்றி மாறன் இயக்குகிற படங்களில் எல்லாம் ஜி.வி.பிரகாஷ் பெயர் அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிடும். பொல்லாதவன் துவங்கி, நேற்று வந்த விசாரணை வரை, வெற்றிமாறனால் விட்டுக் கொடுக்கவே முடியாத பெயர் ஒன்று…
Kisukisu-wifeVSHeroine
“பெண்கள்னா ஃபிரீக் அவுட்டா இருக்கணும். அவங்களை சாமி மாதிரி கும்புடுங்கடா” என்ற பொருள்படும்படி படம் எடுத்த இயக்குனர் அவர். அந்த படம் வசூலில் எப்படியோ, சொந்த வாழ்வில் மகசூல் ராஜாவாக இருக்கிறார் அந்த டைரக்டர். இவரது கஜானா முழுக்க காதல் விளைச்சல்தான் இப்போது. தன் படத்தில் நடித்த அந்த ப்ரீக் அவுட் நடிகைக்கே எல்லாமுமாகி இருக்கிறாராம். இந்த சந்தோஷமும் துக்கமும் அவரோடு போனால் அது அவர் பாடு. அவள் பாடு!…
Theri Makes trouble
தொழில் செய்யுற இடத்தில் தொந்தரவு செய்யவும் ஒரு கூட்டம் கிளம்பும். அப்படிதான் கிளம்பி வந்து கழுத்தை அறுக்கிறார்களோ என்று அலறி தவிக்கிறது செங்கல் பட்டு ஏரியாவிலிருக்கும் 11 தியேட்டர்கள். இவர்களின் அலறல் சவுண்டு, அமெரிக்காவிலிருக்கும் ரஜினிக்கு கேட்கிறதோ, இல்லையோ? அருகாமையிலேயே இருக்கும் தாணுவுக்காவது கேட்க வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள் பாதிக்கப்பட்ட அந்த பதினொரு திரையரங்கங்களின் உரிமையாளர்களும். பிரச்சனை என்னவாம்? பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை பார்த்திருப்போம். படம் குடித்தும் பிலிம்…
Kayal Anandhi
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம் ஏற்படுத்தாத சின்ன சின்ன சங்கடங்கள்தான். இந்த ஒப்பற்ற ஜோடி ஒரு படத்திலும் பிரிவதில்லை என்று நினைத்து வந்த நேரத்தில்தான், ‘யாரை நம்பியும் யாரும் இருக்கக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தாராம் ஆனந்தி. அப்புறம்? விமலுடன் ஒரு…
Soundarya RajiniKanth
இந்த ஒரு விஷயத்திற்காகவே கோடிக்கணக்கில் செலவாகிவிட்டதாம். ஆனாலும் சவுந்தர்யா ரஜினியின் ஒரு சின்ன முக வாட்டத்தை புரிந்து கொண்டு, கப்சிப் ஆகிவிட்டது கபாலி பட வட்டாரம். ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? அதுதான் வேதனை. இந்த முறை கபாலி கொண்டாட்டங்கள் என்று தனியாக படம் பிடித்தால், அதையே ஒரு சினிமாவாக திரையிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு விஷயங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. சாட்டட் பிளைட்களில் அந்த பிளைட் கம்பெனி…
jayamravi
கொழுத்த துட்டு இருக்கிற தயாரிப்பாளர்கள் கூட, கொழுத்த ஹிட்டு கொடுத்த இயக்குனர்களுடன் சேர்வதைதான் விரும்புகிறார்கள். ஆனால் ஜெயம் ரவியை வைத்து ‘மிருதன்’ என்ற மகா மகா பிளேடு படத்தை எடுத்த சக்தி சவுந்தர்ராஜனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் அதே ஜெயம் ரவி. திரைக்கதையில் வித்தையில்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. ஒரே மாதிரி ‘ராவான’ ரவாவை மிருதன் படத்தில் கிண்டிய இவருக்கும் ஜெயம் ரவிக்கும் அப்படியென்ன அண்டர்ஸ்டாண்டிங் என்றெல்லாம் திக்கித்து விக்கித்துப் போயிருக்கிறது…
Vijay-Rajini-KabaaliSongs
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்குள் பட்டம் சூட்டி, கிரீடத்தையும் அணிந்து கொள்ள வைத்துவிட்டார்கள் விஜய்யை. இதை பொறுக்க முடியாத ரஜினி ரசிகர்கள் ‘ஒரு சூரியன்,ஒரு நிலா, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்’ என்று கொந்தளித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறத்தினர் அதையெல்லாம் கண்டு கொள்வது மாதிரி தெரியவில்லை. ‘உங்களில் யார் சூப்பர் ஸ்டார்?’ என்று தெரு தெருவாக போய் சென்சஸ் எடுக்காத குறையாக ‘அவராக்கும்…
Audio Review Kabaali
கபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே… ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்… ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது, பாடல்கள் பிடிக்காமல் ரஜினி ரசிகர்களில் சிலர் ரகுமான் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள் என்பது அந்த நிகழ்வின் நினைவு. “குலுவாலிலே” பாடலை உதித் நாராயண்…
GV-Anandhi
ஒருபுறம் ரஜினி ஷங்கர் கூட்டணியில் 2,ஓ என்ற யானையை கட்டி தீனி போட்டுக் கொண்டிருக்கிறது லைக்கா. இன்னொரு பக்கம் 2.ஓ வின் காஸ்ட்யூம் செலவை கூட தாண்டாத பட்ஜெட்டில் இன்னொரு படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். இந்த மலைக்கும் பள்ளத்திற்குமான சம்பவம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? லைக்கா நிறுவனத்தின் சினிமா தயாரிப்பு பொறுப்புகளில் முதுகெலும்பாக இருக்கிறார் ராஜு மகாலிங்கம். இவரை சந்திக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷுக்கு…
Page 4 of 143« First...23456...102030...Last »

all news