Slide

Surya letter to fans
இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களை அள்ளிக் கொண்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஏற்கனவே தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூகப்பணிகளை, கல்விப்பணிகளை ஆற்றிவரும் அவர், இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களை தத்தெடுத்திருக்கிறார். இன்னொரு புறம் தனது குடும்பத்தின் சார்பாக 25 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாகவும் அளித்திருக்கிறார். இந்த நிலையில் வரும் 24 ந் தேதி அவர் நடித்து பசங்க பாண்டிராஜ்…
mannan-vijay
முதல் நாள் இட்லியை மறுநாள் உப்புமாவாக்குவதில் நம்ம சினிமாக்காரர்களுக்கு அப்படியென்னதான் திருப்தியோ? இதற்கு முன்பு வந்த தமிழ் படங்களையே திரும்ப திரும்ப காப்பியடிக்கிறார்கள். சில மானஸ்தனுங்க மட்டும், ரீமேக் என்று நாகரீகமாக உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் உப்புமா மன்னன் படம்தானாம். ரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி என்று பிரமாதமான ஆர்ட்டிஸ்டுகளால் திரையரங்கம் அதிர அதிர ஓடிய அப்படத்தை மீண்டும் பார்ப்பதில் கண்டிப்பாக எரிச்சல் வரப்போவதில்லை. ஒரிஜனல் மன்னன்…
Vijaysethupathi-dhanush
“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல இருக்கிறது பெருமைதான். சந்தோஷம்தான்” என்றார் தனுஷ். இருவருக்கும் நடுவில் லேசாக புகைச்சல் என்ற செய்தியை இன்னும் கொஞ்சம் புகை போட்டு உறுதியாக்கியது அந்த பதில். நல்லவிஷயம். அதற்கப்புறம் அவர் முகத்தில் வந்த அந்த சந்தேகம் சரியா,…
akshay Kumar
‘மாற்றி மாற்றி நெருக்கடி கொடுத்து பொட்டிய தொறக்க வச்சுருவானுங்க போலிருக்கே…’ என்று முன்னணி ஹீரோக்கள் சிலர் மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அண்டை மாநில ஹீரோக்களின் அன்பும் கருணையும், இங்குள்ளவர்களுக்கு அப்படியொரு வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. (அடேய்… நாங்க எங்கடா வெட்கப் பட்டோம்? என்று மறுத்தாலும் அதில் வியப்பு ஒன்றுமில்லை. தெரிந்த சமாச்சாரம்தானே?) பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னை…
rajini mandapam
பல வருஷத்து கேள்விக்கு இப்போதுதான் பதில் தந்திருக்கிறார் ரஜினி. அவரது ராகவேந்திரா மண்டபம் சென்னையில் காஸ்ட்லியான மண்டபங்களில் ஒன்று. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அமைந்திருக்கும் இடமே எனக்கு சொந்தம் என்றொருவர் வழக்கு தொடுக்க, அதைக் காப்பாற்ற வழி தெரியாத ரஜினி, மேற்படி மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். உடனே ஒரு ட்ரஸ்ட் துவங்கப்பட்டு மண்டபம் அந்த பெயருக்கு மாற்றப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் அந்த ட்ரஸ்ட்டின் உறுப்பினர்கள் யாவரும் ரஜினியும்…
aniruth
சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம் சம்மன் வந்தாலும், வேறு வேறு மாவட்டங்களில் அவர் மீதும் அனிருத் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளதால், போலீசும் தன் சாதுர்யமான விரட்டலை துவங்கிவிட்டது. இருவரில் யார் சிக்கினாலும் களிதான்! இதற்கிடையில் கனடாவிலிருந்து கிளம்பும் அனிருத் வியாழன் காலை சென்னை வந்து சேர்கிறார். இந்த…
nayanthara-simbu
அந்த ‘சர்ச்சைப்பாடலின்’ ஹீரோயின் நயன்தாராவா? ஹன்சிகாவா? என்பதுதான் இன்னும் புரியாத புதிர்! நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் இன்னொரு தகவல் மூலம் அது நயன்தாரா என்பதை அரசல் புரசலாக புரிந்து கொள்ள முடிகிறது. வேறொன்றுமில்லை… சிம்பு நடித்து எப்பவோ(?) வெளிவரப்போகும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லை. அதில் நடிக்கவே முடியாது. உங்களால ஆனதை பாருங்க என்று கிளம்பிவிட்டார் நயன்தாரா. நடிகர் சங்கத்தில் புகார், தயாரிப்பாளர்…
Vijaysethupathi-dharmadurai
சினிமாவுலேயும் அரசியலிலேயும் எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவற்றை தீர்மானிக்கும். கூட்டணி அரசியல், பாட்டனி அரசியலெல்லாம் பிறகு, ‘பேட்டா’ அரசியல் ஆவதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிட்டதட்ட சினிமாவும் அப்படிதான் போய் கொண்டிருக்கிறது. நேற்று வரை பிரண்டு. இன்று…? “நீங்க யாரு சார்”தான். யதார்த்தவாதி என்று சினிமாக்காரர்களால் நம்பப்படும் விஜய் சேதுபதியே தன் நண்பரை கழற்றி விட்ட கதைதான் இது. அது எப்படி என்பதை பாதிக்கப்பட்டவரின்…
Kn Kaalai
கடந்த சில தினங்களுக்கு முன் விஷால், மற்றும் நாசர் உள்ளிட்டோர் தலைமையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அங்குதான் சில ஆச்சர்யங்கள் அரங்கேறின. நடிகர் சங்கத்தில் விறுவிறுப்பான தேர்தல் வருவதற்கு முதல் காரணமாக இருந்தது ராதாரவியும் அவரது காரம் தடவிய டங்க்கும் என்றால், விஷாலை மேலும் தரக்குறைவாக திட்டியவர் சங்கத்தின் பொறுப்பில் இருந்த மூத்த கலைஞரான கே.என்.காளை. நாவினாற் சுட்ட வடுவை வெற்றியை கொண்டு…
TR_Aniruth
இது அடுத்த காமெடி! ‘ஆத்தோட அடிச்சுட்டு போனாலும் அத்த மகளோட போகணும்’னு முடிவெடுத்த பின்னால, போனாப் போவுதுன்னு வுடறதா? அனிருத்தையும் சேர்த்து பிடிச்சு வலிச்சுட்டாரு டி.ஆர். நேற்று அடுத்தடுத்து வந்த இருவரது அறிக்கையை படித்தவர்கள், அவங்க முதுகை அவங்களே பார்க்குற அளவுக்கு தலைசுற்றி போனார்கள். ஏன்? அறிக்கையிலிருந்த குழப்பம் அப்படி. கனடாவிலிருக்கும் அனிருத் அங்கிருந்தபடியே ஒரு விளக்கத்தை அனுப்பியிருந்தார். அதில் பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் அந்த பாடலுக்கு நான் இசையமைக்கல. பாடல் வரிகளையும்…
beep-str
அந்த பீப் ஸாங், சிம்புவின் எதிர்காலத்திற்கு ஒரேயடியாக சங்கு ஊதிவிடும் போலிருக்கிறது. நாலாபுறத்திலிருந்தும் டேஷ் டேஷ் வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை பண்ணி வருகிறார்கள். கொடுக்கு நாக்குல இருக்கு என்பதை இந்த நேரத்திலும் கூட புரிந்து கொள்ள முடியாத சிம்பு, “ஆமாம்… அது என்னோட பர்சனல். அதுல தலையிட ஒருத்தனுக்கும் உரிமையில்லை” என்று திமிர் பேட்டி ஒன்றை அளித்து, தீக்குச்சியை விழுங்கியிருக்கிறார். விஷால் அணி செய்வது நிவாரணப்பணி. இவர் செய்வதோ நிர்வாணப்பணி.…
Suhasini manirathnam
‘மக்களோடு ஒட்டி ஒழுகல்’ என்ற தத்துவத்தின் நேர் எதிரி என்கிற பிம்பம் கொண்ட டைரக்டர் மணிரத்னத்தையே இந்த வெள்ளம், ‘வடிய’ வைத்துவிட்டது. இந்த வெள்ளத்தில் மக்களை பற்றி யோசிக்கும் ஏராளமான திரை பிரபலங்கள் போலவே ஓடோடி வந்துவிட்டார் அவரும், அவரது மனைவி சுஹாசினியும். நாம் என்ற இயக்கத்தின் கீழ் செயலாற்றி வரும் அவ்விருவரும், சுற்றம் சூழ இந்த வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை…
Danush-senjuruven
மாரி படத்தில் தனுஷ் அடிக்கடி சொல்லும் அந்த பஞ்ச் டயலாக், “செஞ்சுருவேன்”! கொடுமை என்னவென்றால், இந்த ‘செஞ்சுருவேன்’ டயலாக்கை சின்னக் குழந்தைகள் கூட அடிக்கடி உச்சரிப்பதுதான். நேற்று வசமாக சிக்கிய தனுஷிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேட்க, அவர்களுடன் படு கேஷுவலாக அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டார் தனுஷ்! “சார்… ‘மாரி’ மாதிரியான படத்தை நான் இப்ப பண்ண மாட்டேன். நடுவில் விதவிதமான கேரக்டர்களில் நடிச்சுட்டு மறுபடியும் மாரி பார்ட் 2…
kovan-simbu
நேற்றிலிருந்தே இந்தக் குரல் மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு இன்னொரு நீதி என்பது நமது நாட்டில் சகஜமாக புழங்கி வரும் நிலையில், இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! சிம்புவும் கோவனும் ஒன்றல்ல. ஒருவர் இளைஞர்களை சீரழிக்கும் ‘போதை’ வேண்டாம் என்கிறார். இன்னொருவர் இளைஞர்களை சீரழிக்கும் பாதை வேண்டும் என்கிறார். ஆனால் நல்லதை சொன்ன கோவனுக்கு தேசிய பாதுகாப்பு பிரிவில் தண்டனை. சிம்புவுக்கு?…
Rajini-Kamal-Ajith-Vijay
கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் ஹீரோவுக்கு’ என்று கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு பாலிஸி வைத்திருக்கும் ரசிகர்களுக்கெல்லாம், இந்த வெள்ளம் தந்த மெசேஜ் அசாதாரணமானது! உன் தலைக்குள் என்ன இருந்ததோ, அதை எடுத்துதான்…
simbu-aniruth
எவன் செஞ்ச வேலைடா இது? என்று யாரும் கமென்ட் போட முடியாது. ஏனென்றால் அது அவிங்ய்களே செஞ்ச வேலைதான்! போர்பந்தரில் இருக்கும் எல்லா குளங்களிலும் சிம்புவை போட்டு முக்கியெடுத்தாலும், அவர் பரிசுத்த ஆவியாக வரவே முடியாது போலிருக்கிறது. டிசைன் அப்படி! அவரும் தன் மீதிருக்கும் பேட் இமேஜை தட்டி கழுவி சுத்தமாகதான் வைக்க நினைக்கிறார். அப்போதெல்லாம் ஒரு தானே புயலோ, ஒரு செம்பரபாக்கம் ஏரியோ புட்டுக் கொண்டு வந்து அவரை…
new-sivakarthikeyan
யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படத்தை தயாரிக்கும் அதே நண்பர் ராஜாவுடன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டார் சிவகார்த்திகேயன். யெஸ்… சிவா நடிக்க, ராஜா தயாரிக்க அப்படத்தை இயக்கப் போவது மோகன் ராஜா. ‘தனியொருவன்’ புகழ் ராஜா என்றால்…
eetireview
குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்? இந்த ஒரு வரிக் கதைக்குள் தன் முகவரியை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி அரசு! வரும்போதே அருவாளோட வந்தாலும், குங்குமம் வச்சு ‘குலவை’ பாட்றோம்ணே… பின்னிட்டீங்க! என்னமோ ஒரு இங்கிலீஷ் பெயரெல்லாம் வைத்து ஒரு வியாதியை பற்றி ஆரம்பத்தில் பேசிக் கொண்டேயிருக்கிறது…
nayan-relief fund
யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள் நடிகைகள். என்னய்யா இது? ரஜினி பத்து லட்சம், நம்ம ஹன்சிகா 15 லட்சமா? என்று ரசிகர்களே வியக்கிறார்கள். ஹன்சிகா கொடுத்த செய்தியின் ஈரம் காய்வதற்குள் ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார். எல்லாம் வெள்ள நிவாரண நிதி. மேற்படி செக்குகள் நடிகர் சங்க நிர்வாகிகள் வசம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், அடிப்படையிலேயே இரக்க குணமும்,…
surya-bala
செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும் சூர்யாவை ஒரு வெந்து முடியாத வெந்தயத் தோசை போலவே பாவித்து வந்தது திரையுலகம். அந்த பால் வடியுற முகத்துக்கு ஆக்ஷன் செட்டாவாதே என்று முடிவெடுத்த இயக்குனர்கள், அதற்கேற்ற ரோல்களையே கொடுத்து வந்தார்கள். நல்லவேளை… ராமராஜன்…
Page 30 of 143« First...1020...2829303132...405060...Last »

all news