Slide

Simbu-GVPrakash
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்திற்கு பிறகு, ‘நானும் ஹீரோதான்…’ என்று கான்பிடன்ட்டாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷின் இன்றைய நிலைமை? கொக்கு தலையில் வெண்ணை இல்லை… வெறும் சுண்ணாம்பாகிவிட்டது. அந்த கதையை இன்னொரு செய்தியாக வைத்துக் கொள்வோம். இப்போது இவருக்கும் சிம்புவுக்கும் என்ன பிரச்சனை? அதை பார்க்கலாம். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தை த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் அல்லவா? இந்த படம் முடிவாகும் முன்பே,…
Goutham menon-simbu
பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்… பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்… அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ் ஜெயராஜ்- கவுதம் மேனன் பிரிவுக்கு பின் இருந்தது வெறும் சம்பள பாக்கிதான். பலமுறை இதை பொருட்டாக நினைக்காத ஹாரிஸ், ஒரு கட்டத்தில் “போதும் சார் உங்க படம்” என்று கூறிவிட, அதற்கப்புறம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்…
VijaySethupathi-Lakshmi Ramakrishnan
பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களே கூட இப்படி இறங்கிவிடுவதற்கு காரணம், நிச்சயம் சினிமாதான் என்றொரு கருத்தும் உலவி வருவதால், கொடுக்காப் புளியை விழுங்கிய மாதிரி இருக்கிறது கோடம்பாக்கம். “சமுதாயத்துல நடக்கறதைதான் நாங்க எடுக்குறோம்” என்று இவர்களும், “நீங்க எடுக்கறதாலதான் சமுதாயம் கெடுது” என்று அவர்களும் இரு குழுவாக பிரிந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு கொலைக்கு…
AjithVijay
அஜீத் ரசிகர்களை விஜய் ரசிகர்களும், விஜய் ரசிகர்களை அஜீத் ரசிகர்களும் மாறி மாறி வாரிக் கொள்வதை சகிக்க முடியாமல்தான் ட்விட்டர் என்கிற தேர் உருண்டு புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அவனே…இவனே… பேயே… பிசாசே… என்று ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து திட்டிக் கொண்டிருந்த இரண்டு பேருடைய ரசிகர்களுக்கும் இந்த ஒரு போட்டோ பேரதிர்ச்சியை கொடுத்திருக்கும். இந்த படு பாதக செயலை செய்த அந்த மாபாவியின் ட்விட்டர் அட்ரஸ் நமக்கெதற்கு? ஆனால் ஆள்…
Atti-MaKaPaAnand
‘சிவகார்த்திகேயனின் பி டீம்’ என்று சொன்னால், வைகோவே ஒப்புக் கொள்வார். அப்படியிருக்கிறார் மா.கா.பா.ஆனந்த்! எண்ணம், செயல், பேச்சு, பி.பி., சுகர் எல்லாமே சிவகார்த்திகேயனின் அடியொற்றிதான் இருக்கும் போலிருக்கிறது. ஆனால் அவர் நிலைமை ஆகாயத்தில்… இவர் நிலைமை வெங்காயத்தில்! என்ன செய்வது… வரவேண்டிய நேரத்தில்தானே வரும்? அப்படியொரு நேரத்தை கொண்டு வந்து சேர்க்கும் போலிருக்கிறது ‘அட்டி’. “அப்படின்னா?” டைரக்டர் விஜய் பாஸ்கரை யார் பார்த்தாலும் கேட்கிற முதல் கேள்வியே இதுவாகதான் இருக்கும்.…
SriDivya-Sivakarthikeyan
சென்ட்டிமென்ட் யாரை விட்டது? சிவகார்த்திகேயனின் வெற்றிகளில் ஆரம்பகால பங்கு அதிகம் யாருக்கு என்றால், அதில் பலருக்கும் இடம் உண்டு. ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு மட்டும் தனி இடம் உண்டு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது. அதற்கப்புறம் காக்கிசட்டை படத்திலும் இந்த ஜோடி ஒன்று சேர்ந்தது. அந்த படமும் வெற்றி மேல் வெற்றி. விடுவார்களா ஸ்ரீதிவ்யாவை?. ஒரு ஷாட்டிலாவது அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று பிரியப்பட்டாராம் சிவகார்த்திகேயன்.…
Vishal-Lingusamy
சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை என்பது மட்டும் நிச்சயம். ககெக்ஷன் விஷயத்தில் கொம்பனுக்கு கீழேதானாம். இதனால் சற்றே அப்செட் ஆன விஷால், ஏன் சண்டைக்கோழி பார்ட் 2 விஷயத்தில் முரண்டு பிடிக்கணும் என்று நினைத்திருக்கலாம். தன்னால் கைவிடப்பட்டது என்று…
Rajini_Guru peyarchi
கேதுவை போல கெடுப்பானுமில்லை, குருவை போல கொடுப்பானுமில்லை என்பார்கள் ஜோதிடர்கள். அதே குரு தேவையில்லாத இடத்திற்கு வந்தால், அழகு விழி கூட ஆட்டின் முழியாகிவிடும். அப்படியொரு இக்கட்டு திக்கெட்டும் பரவி திண்டாட விட்டுவிடும். வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. வருடா வருடம் ஒரு ராசி விட்டு இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் குருவால் இந்த முறை மகர ராசிக்கு மகோன்னதமான நன்மை நடைபெறுமாம். இந்த இடத்தில்…
actor vijay
ஒரு நாளும் இல்லாத திருநாளாக அமைந்துவிட்டது இந்த முறை வந்த விஜய்யின் பிறந்த நாள்! அந்த பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதிக்கு முதல் நாள் வரைக்கும் கூட அவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கப் போவதில்லை, வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார் என்கிற தகவல் யாருக்கும் தெரிந்திருக்கவில்லையாம். தனது ட்ரிப் பற்றி ஒரு சிலரை தவிர வேறு யாருக்கும் சொல்லவில்லையாம் விஜய். நேரில் வாழ்த்து சொல்லும் நோக்கத்துடன் சென்னையிலிருந்து படப்பிடிப்பு நடந்த…
Pattadhari-Abisaravanan
ஓடு ஒண்ணுதான். உள்ளேயிருக்கிற மஞ்சள் கருவுக்கும் வெள்ளைக் கருவுக்கும்தான் விவகாரம் என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பிக்கிறது கிசுகிசு வட்டாரம். பொதுவாகவே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும், அப்படத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு ஏழரையோ எட்டரையோ இருந்து கொண்டே இருக்கும். நான் ஹீரோ என்ற பந்தாவோடு நடந்து கொள்வார் கதாநாயகன். பணம் போட்டவன் நானாச்சே என்ற பந்தாவோடு நடப்பார் தயாரிப்பாளர். கேப்டன் ஆப் த ஷிப் நான்தானே, நியாயமா நானல்லவா திமிரை…
KiranBedi
மட்டையாகுற அளவுக்கு குடிச்சுட்டு, கட்டையா மிதக்கணுமா? கவலையே வேணாம்… பாண்டிச்சேரிக்கு போ! ‘மலிவு விலை…ஒசத்தி சரக்கு’ என்ற ஒரே தாரக மந்திரத்தோடு இயங்கும் பாண்டியில், பக்தி மணத்திற்கும் பஞ்சமில்லை. காரைக்கால் அம்மையார் கோவில், அரவிந்தர் அன்னை ஆசிரமம், ஆரோவில் என்று நிறைய இருக்கிறது. ஆனால் பட்டைய போட வேண்டும் நினைப்பவர்களில் பாதி பேர் கூட, நெற்றி கொள்ளாதளவுக்கு விபூதி பட்டைய போட வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் பாண்டி என்றாலே…
Kabali Flight
நமது இணைய தளத்தில் சில வாரங்களுக்கு முன்பே குறிப்பிட்ட விஷயம்தான். இப்போது கண்கூடாக அரங்கேறியிருக்கிறது. ஜுன் 14 ந் தேதியே ‘சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது அப்பா சென்ட்டிமென்ட்!’ என்ற தலைப்பில் நாம் எழுதிய செய்தியில் ரஜினி உருவத்துடன் ஸ்பெஷல் கபாலி பிளைட் வரப்போகிறது என்று கூறியிருந்தோம். இன்று காலையிலிருந்தே அந்த விமானத்தின் புகைப்படங்கள் இணைய உலகத்திலும், தமிழ் கூறும் நல்லுலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நாம் ஏற்கனவே…
SeenuRamasamy-Samuthirakani
மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பெயரில் ஒரு நினைவு மண்டபமோ, அட்லீஸ்ட் சென்னையின் ஏதாவது ஒரு தெருவுக்கோ அவர் பெயரை வைக்கவில்லையே? அவரது உண்மையான சிஷ்யர்களில் ஒருவரான நீங்க கூட அது பற்றி கோரிக்கை வைக்கலையே? என்று சமுத்திரக்கனியிடம் விசாரித்தால், வந்த பதில் வேறாக இருக்கிறது. “ஒரு படைப்பாளியை நினைவு கொள்ளணும்னா ஏதாவது ஒரு தெருவுக்கு பேர் வச்சா மட்டும் போதுமா? அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் எழுதி…
appa review new
சுண்டைக்காய் செடியில் பூசணிக்காய் விளையுமா என்று பேராசையோடு திரியும் ஜனங்களின் மனசில், குழந்தைகள் என்பது யார்? மெஷினா, உயிரா? அவர்களை கைக்குட்டை போல கசக்கி, பிடித்துணி போல சுருட்டித்தள்ளும் பெற்றோர்களே… உங்கள் புத்தியை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. இப்படியொரு கதையை எடுக்கத் துணிந்ததற்காகவே முதல் வணக்கம். அதையும் ஓரிடத்தில் கூட அலுத்துப் போகா வண்ணம் சுவாரஸ்யமான திரைக்கதையால் அழகூட்டியிருக்கிறாரே… அதற்கு தனியாக ஒரு போனஸ் வணக்கம்!…
soori-uthayanithi
லெக் பீஸ் உனக்கு, நெஞ்செலும்பு எனக்கு என்ற கோட்பாடு வராத வரைக்கும் வயிறு நிறையப் போவதில்லை என்பதை ஓவர் நைட்டில் உணர்ந்துவிட்டார் உதயநிதி. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பெரிய வெற்றிக்கு காரணமே சந்தானம்தான் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தாலும், கெத்து போன்ற படங்களில் காமெடிக்கு பெரிய வழி செய்து தரவில்லை அவர். விளைவு? படம் படுதோல்வி. அதற்கு முன்பு வந்த கதிர்வேலன் காதல் படத்திலும் காமெடிக்கு பெரிய…
tamil Actress in pub
ரெஜினா, மஞ்சிமா மோகனுக்கெல்லாம் பப்புக்கு போகிற பழக்கம் இருக்கா? என்று கேட்டு, ‘ஆமாம்’ என்ற பதில் வந்தால், சொசைட்டியில் சில பல தற்கொலைகள் விழுந்தாலும் விழும்! அவ்ளோ நம்பிக்கை அந்த குத்துவிளக்குகள் மீது! ஆனால் அவ்விருவரும் சமீபத்தில் ஒரு பப்புக்கு வந்தார்கள். இடம் சென்னைதான்… வேறெங்கே! இவர்களுக்கு ‘ஹாய்’ சொல்லியபடி சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அந்த நடிகைக்கு பாடவும் தெரியும். இது நம்ம ஆளு என்று கொஞ்சுகிற பேஸ்கட்டுதான்…
AmyJacson
ஏண்டா போக்கத்த பொன்னுசாமிகளா… ஒரு பொண்ணோட பேக்ரவுண்ட், கலாச்சாரம் தெரியாமலே அவரைப்பற்றி அப்படி சொல்லலாமா? என்று கடுப்பாகிக் கிடக்கிறார்கள் எமி ஜாக்சனின் இங்கிலாந்து பற்றாளர்கள். என்னவாம்? யாரோ ஒரு இளம் வாலிபருடன் எமி டேட்டிங் போகிறார் என்று எழுதிய மும்பை பத்திரிகையாளர்கள், ஆதாரத்திற்கு ஒரு போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார்கள். பேசிக்கலா அவர் ஒரு வெளிநாட்டுக்காரர். அங்கெல்லாம் டேட்டிங், ஊட்டிங் சர்வ சாதாரணம். இதை ஏதோ உசிலம்பட்டி பொண்ணு ஊர் ஊராக திரிகிற…
Muthulingam Thenikannan
பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் பத்திரிகையாளர் சங்கர், எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “இந்த புத்தகத்தின் ஆசிரியர் தேனி கண்ணன் எனக்கு பத்தாண்டுகளாக பழக்கமுள்ளவர்…
VijayFans Canada
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் மெட்ரோ என்ற படத்திற்கு தமிழ்நாட்டில் என்ன வரவேற்போ தெரியாது. ஆனால் கனடாவிலிருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு, “அண்ணா இதை விடக்கூடாது. எனக்காக இந்த செய்தியை உங்க இணையதளத்தில் வெளியிடுங்க” என்று கண்ணீர் மல்க ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். கூடவே அவர் சில ஸ்கிரீன் ஷாட்டுகளையும் நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்படியொரு வெறிபிடித்த ரசிகரா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இனி அவரது கடிதம்-…
rajiniKabaali
கபாலி ஃபீவருக்கு ஒரே மருந்து அதன் ரிலீஸ் தேதிதான். உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்கள், “எங்க நாட்டில் இந்த தியேட்டர்லதான் கபாலி வரப்போகுது” என்றெல்லாம் அந்த தியேட்டர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வெளியிட்டு மகிழ்கிறார்கள். அந்த காலி தியேட்டருக்கே இவ்வளவு மரியாதை என்றால்? கபாலி ரிலீசுக்குப் பிறகு அந்த தியேட்டர்களின் பெருமையை நினைத்துப் பாருங்கள்… ஹரே ராமா..! இந்த பரபரப்புக்கு சற்றும் சளைக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கபாலி படத்தின் வியாபாரம்.…
Page 2 of 14312345...102030...Last »

all news