Slide

pandiraj
டைரக்டர் பாண்டிராஜ் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வார்த்தைகளில் நெளிவு சுளிவுகளுக்கும் இடம் தரமாட்டார். அப்படிப்பட்டவரை பற்றி ஒரு கிசுகிசு வந்தால் சும்மாயிருப்பாரா? அதற்கு தக்க விளக்கம் கொடுத்து ஊர் வாயை அடைத்திருக்கிறார். மூடர் கூடம் என்ற படத்தை இவரே வாங்கி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் போகிறார். இந்த கைங்கர்யம் எதற்காக? இப்படியொரு கேள்வி இங்கே எழ, அதற்கான காரணத்தையும் கேள்வி கேட்டவர்களே கிளப்பிவிட்டார்கள். அதாவது இந்த படத்தில் ஓவியாதான்…
pooja
பூஜா எங்கேயிருக்கிறார்? சமீபகாலமாக பிரஸ்காரர்களை அலையாய் அலைய வைத்த கேள்வி இது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த பூஜா அப்படியே இலங்கைக்கு போய்விட்டதாக ஒரு தகவல் பரவியது. பூஜாவின் செல்போனுக்கு யார் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்காமலே இருந்தார். அதனால் இந்த தகவலை இன்னும் உர்ஜிதப்படுத்தினார்கள் இங்கே. ஆனால் விடியும் முன் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பூஜா, இந்த யூகங்களையெல்லாம் தவிடுபொடியாக்கினார். அதே நேரத்தில் இங்கிருந்து…
angadi-theru-hero-mahesh-b-day-celebration-stills015
அங்காடி தெரு மகேஷுக்கு முறையான அட்வைசர்கள் யாரும் இல்லாததால் அப்படத்தின் வெற்றிக்கு பிறகும் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார். தற்போது அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மகேஷின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். பணம் வருகிறது என்பதற்காக யார் கூப்பிட்டாலும் போய் நடிக்க ஆசைப்படக் கூடாது என்பதுதான் இருவரும் எடுத்திருக்கும் அதிரடி முடிவாம்.  விரைவில் வெளிவரப்போகும் அடித்தளம் தனது புகழை மீட்டெடுக்கும் என்கிற மகேஷ், கஞ்சா கருப்பு தயாரிக்கும் வேல்…
cheran daughter
தலைவா படம் வெளியாவது குறித்த செய்திகளாலும், அது குறித்த குழப்பங்களாலும் சேரனின் மகள் தாமினி பற்றிய பிரச்சனையின் வீரியம் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. இது ஒரு விதத்தில் நல்லதும் கூட என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சேரன் வட்டாரத்தில். தாமினி படிக்கும் பள்ளியின் தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் தாமினி. இங்கு அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் செலுத்தும் அன்பு, அக்கறை, இவை பற்றி போதிக்கப்படுகிறதாம் தாமினிக்கு.…
amalapaul01
மைனாவை தவிர தமிழில் அமலாபால் நடித்த எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. இருந்தாலும் அமலா ஜுரத்தால் தெர்மா மீட்டரே வெடிக்கிற அளவுக்கு ஃபீலிங் காட்டியது தமிழ்ப்படவுலகம். மெல்ல மெல்ல முன்னேறி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிற அளவுக்கு உயர்ந்த அமலாபாலுக்கு அண்மையில் தலைவாவின் முடக்கம் தாங்கமுடியாத வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அவர் தற்போது உள்ளூரில் இல்லை. இருந்தாலும் தினந்தோறும் நெருக்கமானவர்களுக்கு போன் அடித்து நிலவரத்தை விசாரித்து வருகிறாராம். இவ்வளவு துன்பத்திலும் அவருக்கு ஒரு…
VIJAY
‘நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது’ என்பார்கள் கிராமத்தில். அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த ‘பலி நேரம்’ இப்போதுதான் வந்திருக்கிறது. நடிகர் விஜய்யின் ‘தலைவா’ திரைப்படம் துவங்கப்பட்ட போது கூட எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. ஆனால் ரிலீசுக்கு நெருங்குகிற நாளில்தான் குழப்பமும், கூத்தும்! ஒரு தலைவன் யாராலும் உருவாக்கப்படுதில்லை, அவன் தானாக…
jayalalitha01
சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள். நமது முதல்வர் மாண்புமிகு…
pattathu-yaanai-review
யானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், ‘இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ?’ என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் அவர்! ‘அட பேனா மூக்கணுங்களா, நான் வர்றதையா வேணான்றீங்க?’ என்று செகன்ட் ஆஃப்பில் சந்தானம் வெகுண்டெழுந்து ஆஃப் ஆகிவிடுகிற அவஸ்தையும் நடக்கிறது. அதற்கப்புறம் படம் எப்படி? ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா? அதேதான்!…
sonna-puriyaathu-review
ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும் இளசுகள் எப்படி டீல் பண்ணுகிறார்கள் என்பதை அவர்களை ‘பின் தொடர்ந்து’ படமாக்கினால் எப்படியிருக்கும்? அப்படியொரு உணர்வைதான் தருகிறது இந்த ‘சொன்னா புரியாது’. நாளொரு ஃபிகரும் பொழுதொரு பிக்கப்புமாக இருக்கிறார் சிவா. கல்யாணமே வேண்டாம் என்பதுதான் இவரது கொள்கை. ஆனால் விடாப்பிடி அம்மா,…
maryan-review
கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக்காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள் இன்னொரு ‘முடியல…’ கடலோரத்தில் பிழைப்பு நடத்தும் மீனவர்களில் மரியான் மட்டும் டிபரன்ட்! எல்லாரும் வலையோடு கடலுக்கு போனால் இவர் மட்டும் ‘சுளுக்கி’யோடு செல்கிறார். கடலுக்கு அடியில் சப்பணமிட்டு அமர்ந்து ஒரு கொக்கு போல தவமிருந்து கடல் சுறாவை அந்த சுளுக்கியால் கொத்திக்…
singam-2-review
காக்கி சட்டையில் கரியை தடவியே பழக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சாமியையும், சிங்கத்தையும் காட்டி, போலீஸ் ‘மெடல்’ குத்திக் கொண்டு போவதில் வல்லவர் ஹரி. இதற்கு முன்பு வந்த போலீஸ் படங்களில் சில, டிபார்ட்மென்ட்டுக்கு மெடல் குத்துகிறேன் பேர்வழி என்று ரசிகர்களின் குடல்களை குத்திவிட்டு போன அவஸ்தையையெல்லாம் அதிவேகத்தில் மறக்கடிக்கிறது ஹரி சூர்யாவின் கம்பீர கூட்டணி. முதல் பார்ட் பார்க்காதவர்களை கூட இந்த செகன்ட் பார்ட்டில் தன்னை பொறுத்திக் கொள்கிற அளவுக்கு…
tvsk-review
எடை மிஷின்ல ஏறி நின்றால், ‘தயவு செஞ்சு கூட்டமா நிக்காதீங்க’ என்று சீட்டு வருகிற அளவுக்கு, அவனவனுக்கு கவலைகளும், கஷ்டங்களும்! தியேட்டருக்குள் நுழையும்போது கவலையையும் சேர்த்துக் கொண்டு வெயிட்டாக நுழையும் யாரும், சுந்தர்சி படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘மைனஸ் வெயிட்டில்’ இருப்பது நிச்சயம்! இந்த படத்தில் தீயா வேலை செஞ்சு மக்களை மறுபடியும் சிரிக்க வைத்திருக்கிறார் சு.சி. அதுவும் சித்தார்த் மாதிரி தொம்மைகளை வைத்துக்கொண்டு! கதையே ஐ.டி கம்பெனியை…
Page 143 of 143« First...102030...139140141142143

all news