sivakarthikeyan

soundarya rajini
ஒருவகையில் தமிழ்சினிமா நன்றி சொல்ல வேண்டிய கட்டத்திலிருக்கிறது சவுந்தர்யா ரஜினி அஸ்வினுக்கு. தமிழ்சினிமா துறையில் நிலவும் தீராத பிரச்சனைகளை கூட வெகு எளிதாக தீர்க்கக் கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான பதவிக்கு வந்திருக்கிறார் அவர். பல நுறு கோடியை சினிமாவில் இறக்குகிற அளவுக்கு ஸ்டிராங்கான நிறுவனம்தான் ஈராஸ். கோச்சடையான் படத்தை தயாரித்திருப்பதும் அந்த நிறுவனம்தான். அந்த படத்தின் வெளியீட்டுகு பிறகு அதே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை பெற்றார்…
thamanna-sivakarthikeyan
அட்டு ஹீரோவாக இருந்தாலும், லட்டு ஹீரோயின்களுடன் ஜோடி போட்டால் மார்க்கெட்டில் அந்தஸ்து மடார் திடீர்தான்! ஆனால் தமிழ்சினிமாவின் முக்கியமான ஹீரோக்களிலேயே முதல் ஐந்திலக்க ஹீரோவில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கே ஸாரி சொல்லிவிட்டாராம் தமன்னா! இதென்னடா புது நியூசு? என்று விழுந்தடித்துக் கொண்டு விசாரித்தால், நெசம்தான் என்கிறது கோடம்பாக்கம். லிங்குசாமி தயாரிக்கும் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் அல்லவா? அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்களை தேடி…
vijay sethupathy
சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி. யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா நயன்தாராவைதான்’ என்று. அதற்கப்புறம் அவரிடம் இது குறித்து கேட்ட மீடியாக்களிடம், ‘சும்மா தோணுச்சு சொன்னேன். அதுக்கு முன் பின் அர்த்தமெல்லாம் கற்பிச்சிராதீங்க’ என்றார். ம்ஹும்… இனி…
diman-priyaanand
பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி புகையில் மயங்கி…, அல்லது இருமி… அன்றோடு தன் பெருமையை முடித்துக் கொள்வார்கள் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்கள். அப்படியொரு விழாவாகதான் இருக்கப் போகிறது என்று எல்லாரையும் எதிர்பார்க்க வைத்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோக்களே பொறமைப்படுகிற அளவுக்கு…
aniruth-vijay-angry
‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இந்நேரம் நடந்திருக்க வேண்டும். மூன்று பாடல்கள் மட்டும் தயாராகி விட்டது. மிச்சமிருக்கிற பாடல்களை போட்டு தருவதற்குள் பேய்க்கு பிரசவம் பார்த்த நிலைக்கு ஆளாகிவிட்டாராம் அனிருத். முதலில் தரப்பட்ட அந்த மூன்று பாடல்களுமே சிவகார்த்திகேயனின் ‘டாணா’ படத்திற்காக போடப்பட்டது என்பதையும், ரிலாக்ஸ் மூடில் அதை விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் அனிருத் போட்டுக் காட்ட, ‘அதையே கொடுங்க. டாணாவுக்கு வேற கொடுங்க’ என்று அந்த மூன்றையும் இவர்கள்…
dhanush-siva
‘பற்றியெறியுது ஊரு, பச்சத் தண்ணி இருக்குதா பாரு… ’ என்று பற்றி எரிகிற தீயை அணைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு முறையும் இவருக்கும் தனுஷுக்கும் பிரச்சனை என்று என்று செய்திகள் வரும்போதெல்லாம், அப்படியெல்லாம் எதுவும் இல்ல. எப்பவும் அவர் எனக்கு மரியாதைக்குரியவர்தான் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார். சில நேரங்களில் ட்விட்டரில் வந்து கூட பதில் சொல்கிறார். அப்படியிருந்தும், ரெண்டு பேருக்கும் நடுவில் டயரை கொளுத்திப் போட்டு…
vennila veedu
‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’ ‘படம் எடுக்கறது பெரிசு இல்ல. அதை ரிலீஸ் பண்றீங்க பாரு, அங்க ஒடியும் முதுகெலும்பு!’ ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அச்சுறுத்தும் அட்வைஸ் என்றால் அது இதுதான். ஏறத்தாழ 300 படங்கள் சீண்ட ஆளில்லாமல் கிடக்கிறது இங்கே. ‘ஏரியா என்ன வெல சொல்றீங்க?’ என்கிற டயலாக்கை கேட்டால், லாட்டரி விழுந்த மாதிரி இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படிப்பட்ட சோமாலியா சூழ்நிலையில்,…
vijay-aniruth
நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று அனிருத்தை மேலும் ‘இளைக்க’ வைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். அடிப்படையில் ரஹ்மான் போலவே ராக் கோழியான அனிருத்தும், இரவெல்லாம் உறங்காமல் மாய்ந்து மாய்ந்து ட்யூன்களை போட்டுக் கொண்டிருக்கிறார். இது வேணும் அது வேணும்… என்று…
dhanush siva
ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த விலைக்கு தயாரிக்கப்பட்டு நிறைந்த விலைக்கு விற்கப்பட்ட படமும் கூட. மார்க்கெட்டில் தனுஷ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சந்தேகம் கிளப்பிய அத்தனை முகங்களுக்கும் கரும்புள்ளி பூசிய தனுஷ், தன் பிறந்த நாளை எவ்வளவு விமரிசையாக கொண்டாடியிருப்பார்! யெஸ்… அப்படிதான் கொண்டாடினார். திரையுலக…
Siva+Karthikeyan+new
நாளொரு ஆடியோ, பொழுதொரு ரிலீஸ் என்று கோடம்பாக்கத்தில் விழாக்களுக்கு பஞ்சமேயிருக்காது. ஆனால் எப்போதாவதுதான் இதுபோன்ற விழாக்களுக்கு ஒரு அர்த்தம் தருகிற மாதிரி, கேட்பதற்கு இனிமையான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிடுவார்கள். இன்று சத்யம் வளாகத்தில் நடந்த ‘மொசக்குட்டி’ படத்தின் பாடல்கள் அந்த ரகம்! இசை ரமேஷ் விநாயகம். ‘89 ல் சினிமாவில் அறிமுகமானேன். அதற்கப்புறம் நள தமயந்தி, அழகிய தீயேன்னு சில படங்களுக்கு இசையமைச்சேன். அண்மையில் வந்த ராமானுஜம் படம்…
arrahman-siva-kushboo
குஷ்பு திமுக விலிருந்து விலகியதே அஜீத்தால்தான் என்றொரு ஹேஷ்யம் நிலவிக் கொண்டிருக்கிறது இங்கே. அதாவது அஜீத்தின் கால்ஷீட்டை குஷ்பு கேட்டதாகவும், அவர் திமுக வில் இருப்பதால் அஜீத் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இதற்காகவே குஷ்பு திமுக விலிருந்து விலகியதாகவும் பேசினார்கள். இப்படி மகுடி ஊதியே பாம்புகளை செவிடாக்கினால், பார்ப்பவர்கள் மனதில் என்ன நினைப்பு வரும்? அஜீத்தின் மனசிலும் அந்த நினைப்புதான் வந்ததாம். கால்ஷீட் கொடுத்தாலும் பிரச்சனை. கொடுக்காமல் போனாலும் பிரச்சனை. அதனால்…
sivakarthikeyan-and-priya
குழந்தைகளும் விரும்பினால்தான் ஒரு ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும். அதை வெகு காலமாகவே நிரூபித்து வருகிறார்கள் ரஜினியும் விஜய்யும். இவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் குழந்தை குட்டிகளின் நச்சரிப்பு தாங்காமலே குடும்பமும் தியேட்டருக்கு கிளம்புகிறது. இப்படி சிங்கிள் டிக்கெட் குரூப் டிக்கெட்டாக மாறி, கலெக்ஷனும் கொட்டோ கொட்டென கொட்டுகிறது. இந்த ஒரு விஷயத்திற்காகவே தங்கள் படங்களில் குழந்தைகளை கவர்கிற அம்சம் இருக்கிறதோ, இல்லையோ? ஆபாசம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வார்கள்…
sivakarthikeyan-dhanush
படத்தை எடுப்பதை என்பதை ‘படுத்தி எடுப்பது’ என்று மாற்றிச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது இன்றைய வியாபார வில்லங்க சூழ்ச்சுமங்கள். இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னப்படுவது சிறு படங்கள் மட்டுமல்ல, தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் கூடதான். இத்தனைக்கும் அவரே தயாரித்து நடித்திருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரெய்லர், வெளியிடப்பட்டு சில மணி நேரங்களிலிலேயே லட்சக்கணக்கான யூ ட்யூப் பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்டிருக்கிறது. விமசர்னமும் ஆஹா… ஓஹோதான். அப்படியிருந்தும்…
dhanush-sivakarthikeyan
வேந்தர் மூவிஸ் ஏராளமான படங்களை வாங்கி வெளியிடுகிறது. அந்த நம்பிக்கையில் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மொய்த்து வருகிறார்கள். இப்படி யாராவது படம் வெளியிட முன் வந்தால்தான் கரையேறாமல் குவிந்து கிடக்கும் படங்களை கரையேற்ற முடியும். ஆனால்…? அவர்களுக்கும் வியாபார பலாபலன்கள் இல்லையென்றால் கொட்டிய பணம் என்னாவது? சவுரி தேய்ஞ்சு குடுமியான கதையாகிவிடும் அல்லவா? அதனால் சங்கரநேத்ராலயா மாதிரி முன்னணி கண் நிறுவனங்களிலிருந்து ‘கண் நுணுக்க கஷாயம்’…
sivakarthikeyan-lingusamy
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வந்து திருத்தப்படாத தீர்ப்பை கூட திருத்தி எழுதிவிட்டது. படம் மொக்கையாக இருந்தாலும், பிடித்த ஹீரோ நடித்திருந்தால் ஷியூர் ஹிட் என்பதுதான் அந்த திருத்தம். அதற்கு முன்பு வரை இருந்த சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் அதற்கப்புறம் என்னவானது என்பதை மார்க்கெட்டில் விசாரித்தால், மயக்கமே வந்துவிடும். அந்தளவுக்கு இன்றைய தேதிக்கு டாப்போ டாப் அவர். ஏழு கோடி வரைக்கும் சம்பளம் தர தயாராக இருக்கிறார்களாம் இங்கே. இந்த நேரத்தில்…
Aishwarya-Dhanush
‘தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முன்பு போல கொடுப்பதில்லையாம்…’ இன்டஸ்ட்ரி முழுக்க பரவியிருக்கும் நட்பு வைரஸ் இதுதான். அதை நிரூபிப்பதை போல விஜய் சேதுபதியை தனது தயாரிப்பில் நடிக்க வைக்கவும் இருக்கிறார். இந்த படத்தில் சிம்புவும் நடிப்பார் என்கிறது கூடுதல் தகவல்கள். யாரு படத்துல யாரு வேணும்னா நடிச்சுட்டு போகட்டுமே, அதுக்கென்ன? என்று அலட்சியம் காப்பவர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண செய்தி. ஆனால்…? தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவ…
soori-santhanam-war
அதிகப்படியான சந்தோஷமே அண்ணாச்சிங்க ஊரைவிட்டு கிளம்பும்போதுதான் ஏற்படும் சிலருக்கு. அவர் தேய்ச்ச திண்ணைய கைப்பற்றலாமே என்கிற ஸ்மால் மைண்ட்தான் இதற்கெல்லாம் ரீசன்! அப்படிதான் சந்தானம் முழு நேர ஹீரோவாகப் போகிறார் என்பது தெரிந்ததும் சூரிக்கு ஏற்பட்டது. ஆனால் சந்தானம் போன கையோடு திரும்பி வந்ததில் பேரதிர்ச்சிக்கு ஆளானது சந்தானத்தை முழு நேர ஹீரோவாக பார்க்க நினைத்த அவரது உற்றார் உறவினர், சுற்றார் சுகவீனர்களுக்கு கூட இல்லை…. சூரிக்குதான்! விமல், விதார்த்,…
Page 10 of 10« First...678910

all news