simbu

tr-vijay-simbu
“வாலு படம் வெற்றியா, தோல்வியா என்பதெல்லாம் இப்போது முக்கியமில்ல. வாலுவை ரிலீஸ் பண்ணினேனே… அதுதான் பெரிய வெற்றி” என்று டி.ஆர் சொன்னபோது அதில் இருக்கும் உண்மை பளிச்சென்று புலப்பட்டது. நேற்றைய சிம்பு பிரஸ்மீட்டில் விழுந்த முத்துக்கள் அத்தனையும் முக்கியமானவைதான். அதில் மிக மிக முக்கியமானது இந்த சப்பை கட்டு. உலகம் முழுக்க இருக்கிற விஜய் ரசிகர்கள், சிம்புவுக்கு உதவி செஞ்சதே எங்க தலைவர்தான். ஆனால் படத்துல மருந்துக்கும் அவரை காட்டலியே?…
vaalu ajith
பீனிக்ஸ் பறவை போலாகிவிட்டார் சிம்பு. சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் அவரது வாலுவுக்கு நாடெங்கிலும் நல்ல ரெஸ்பான்ஸ். அண்டை மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு என்கிறார்கள் ரசிகர்கள். வாலுவை மையமாக வைத்து தோல் கிழிகிற அளவுக்கு மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும். சுபஸ்வரமும் அபஸ்வரமுமாக கலந்து கட்டி ஒலிக்கும் அவற்றை படித்தால், தலை கிறுகிறுக்கிறது. இது ஒருபுறமிருக்க, ஏதோ திருவாரூர் தேரை பொக்லைன்…
simbu vaalu
மேரி பிஸ்கட்டை கொடுத்துவிட்டு மேரியையே வளைக்கிற ஊரல்லவா இது? இந்த பொல்லாத ஊரில் மனமுவந்து, “நான் இருக்கேன். டோன்ட் வொர்ரி” என்று சொன்னதைதான் விடாப்பிடியாக பிடித்து கொண்டு அன்பொழுகினார் சிம்பு. தனது ரெகுலர் விநியோகஸ்தர்களை விட்டு சிம்புவின் பைனான்சியரிடம் பேசச் சொன்ன விஜய், “ஒருவேளை வாலு ஓடலேன்னா அந்த நஷ்டத்தை நான் பார்த்துக்குறேன்னு சொல்லுங்க” என்றாராம். சிம்புவுக்கு விஜய் செய்த பேருதவி இதுதான். நடுவில் பேசிய விஜய் தரப்பு இந்த…
TR-vaalu
“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டி ராஜேந்தர், “ வாலு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது…. தமிழகத்தில் மட்டும் 300 க்கும்…
vijay-tr
நான் அஜீத் ரசிகன் என்ற பெருமையோடு திரிந்த சிம்பு, இப்போது விஜய்யிடம் அடி வேர் வரைக்கும் சரணாகதியாகிவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. வாலு விஷயத்தில் சிம்புவின் மனசுக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்த விஜய், இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் தனது புலி படத்தின் விநியோக உரிமை விஷயத்திலும் டிஆருக்கு சாதகம் செய்திருக்கிறார். இந்த கூட்டணி இவ்வளவு வலுவாக நீண்டு கொண்டே போகிறதே, அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று…
Simbu-ADMK
ட்விட்டரில் உதயநிதியும், சிம்புவும் கட்டி உருளாத குறைதான். இவ்விருவருக்குமே சப்போர்ட்டுக்கு வரும் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு தாறுமாறாக முண்டா தட்டுவதால், ஏரியாவே கலீஜ்! அதிலும் சிம்பு ரசிகர்கள் “நீ சந்தானத்தை வச்சு கதைய ஒட்ற. ஆனா அந்த சந்தானத்துக்கே வாய்ப்பு கொடுத்தவரு எங்க தலைவரு” என்றெல்லாம் சொல்லி சிம்பு சைட்டில் வெயிட் ஏற்றுகிறார்கள். “அடேய்… கொஞ்சமாவது மூளையோட யோசிங்கடா. அவரு படத்தை நான் ஏன் தடுக்கப் போறேன்” என்கிறார் உதயநிதி.…
SAAHASAM Movie Motion Poster
ajith fans
அவரு நல்லவருன்னு சொன்னா, அப்ப நான் கெட்டவனா? என்று கேட்கிற காலம் இது. நீயும் நல்லவன்தான் என்றொரு பதில் வரும் வரைக்கும் மனப்போராட்டமும், மானப் போராட்டமுமாக அல்லாடி தள்ளாடி செத்தே போய்விடுகிற குணம் தமிழனுக்கு உண்டு. அப்படிதான் கடந்த இரண்டு நாட்களாக அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது அஜீத் ரசிகர்கள் வட்டாரம். நாங்க அப்பவே சொல்லல? நம்பி கெட்டுச்சாம் தவளை… நசுங்கி உருண்டுச்சாம் குவளைன்னு முடியுற விஷயம்தான் இதுன்னு? http://www.newtamilcinema.com/a-new-whats-app-from-simbu/ சிம்புவின் வாலு…
nayan-vignesh sivan
நயன்தாராவுக்கு இது எத்தனையாவது காதலோ, தெரியாது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் யாரையாவது காதலிக்கும் போதெல்லாம், அதை ஏதோ தேசத்திற்காகவே செய்யப்பட்ட மெகா சைஸ் பூங்கொத்தாக எண்ணி பிரஸ்தாபிக்க ஆரம்பித்துவிடுகிறது மக்கள் மனசு. நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் லேட்டஸ்ட் பூச்சரம் தொடுக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ஒருவேளை நெசமா இருக்குமோ, இல்ல… வழக்கம் போல…
srish
மெட்ரோ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் சிரிஷ். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா இந்த படத்தின் கதையை கேட்டு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சினிமா பின்னணி இல்லாத சிரிஷின் குடும்பமே, அவர் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என எதிர்பார்த்திருக்க சிரிஷோ ‘எனக்கு நடிப்பு தான் வேண்டும்’ என இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். வெறும் எண்ணத்தோடு மட்டும் அல்லாமல் கலைராணியிடம் நடிப்பு பயிற்சியும், ஜெயந்தி மாஸ்டரிடம் நடன பயிற்சியும்,…
nayanthara-INA
ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படம்தான். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் ஐம்பது லட்சம் சம்பளம் தர வேண்டுமாம். இரண்டு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி.…
vaalu-release
இப்படியொரு கேள்வி எழுந்திருப்பதில் எவ்வித உள் நோக்கமும் இருக்க முடியாது யாருக்கும். ஏனென்றால் வாலுவை சுற்றி அத்தனை பிரச்சனைகள். பிள்ளை வளர்ப்புக்கேற்றார் போலதான் பிற்காலமும் அமையும் என்பதை வாலு மிக மிக அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறது. எப்படி? ஒரு சின்ன பிளாஷ்பேக். வல்லவன் படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார் தேனப்பன். தினந்தோறும் ஷுட்டிங் வைப்பதும் அதில் எப்போதாவது சிம்பு கலந்து கொள்வதும் வாடிக்கையாக இருந்தது. படப்பிடிப்பு வைத்து எல்லாருக்கும் காலை உணவு, மதிய…
ajith-simbu whats app
கடந்த இரண்டு நாட்களாகவே மாவட்ட தலைநகரங்களில் இயங்கி வரும் (சைலன்ட்டாக) அஜீத் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வருகிறது. அதையும் அவர்கள் கண்ணும் கருத்துமாக ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வேகம் நீடித்தால், வாலு படம் திரைக்கு வரும்போது அநேகமாக அஜீத் ரசிகர்கள் அத்தனை பேர் பார்வைக்கும் அது சென்று சேர்த்திருக்கும். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் என்ன? தல ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. நடிகர் சிம்பு…
nayan
ஓபாமாகவே இருந்தால் கூட, ‘உட்காரு மச்சி கொஞ்ச நேரம்…’ என்றழைத்து ஒரு கிண்டல் வீடியோவை காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது வாட்ஸ் ஆப் அரக்கர்கள். தமிழக தலைவர்களில் ஆரம்பித்து, சாதா நடிகர்கள் வரைக்கும் கூட இவர்களின் கிண்டல் கேலியிலிருந்து தப்பிக்க முடியாத நிலைமை. அதிலும் இவர்களின் கேலிக்கு ஆளாகி போலீஸ் கம்ளைன்ட் வரைக்கும் போனவர் விஜயகாந்த். அப்படியும் சமாளிக்க முடியலையே! நெக்ஸ்ட்? சமீபத்தில் இவர்களின் ஓவர் அட்ராசிடிக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா.…
ajith-vijay
‘நாங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். ரசிகர்கள் அநாவசியமா சண்டை போட்டுக்க வேணாம்’ என்று கத்தி நறுக்கினார் போல சொல்லியிருந்தால் கூட, தலைவரே சொல்லிட்டாரு. கேட்போம்னு அமைதியாகி விடுவார்கள். ஆனால் அஜீத்தோ, விஜய்யோ அப்படியொரு அழுத்தம் திருத்தமான கட்டளையை தன் ரசிகர்களுக்கு போடாமலிருப்பதால், யார் பர்த் டே வந்தாலும் பேண்ட்டுக்குள் எலி புகுந்த மாதிரி ஆகிவிடுகிறார்கள் ரசிகர்கள். நா கூசுகிற அளவுக்கு நாலாந்தர வார்த்தைகளை கையாள்வதும், பெண்கள் கூசுகிற அளவுக்கு திட்டி…
pandiraj-tr
நேற்று விசேஷமான நாள்! யாருக்கு என்றால் மட்டும் பதில் சொல்வது கஷ்டம். ஏன்? பிரச்சனை அப்படி சாமீய்…. ‘சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறீங்களா?’ என்று நயன்தாராகிட்டயே கேட்போம் என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை திலகம் பசங்க பாண்டிராஜ். அதே நம்பிக்கையோடு அவர் நயன்தாராவுக்கு போன் போட, எல்லாம் சுபம். ‘அதுக்கென்ன… நடிச்சா போச்சு’ என்றார் அவரும். இந்த பதிலாலும், பிரிந்த ஜோடி சேர்ந்ததாலும் ஊர் உலகமே வியப்பில் ஆழ்ந்துவிட, ‘இது நம்ம…
inemay-santhanam
தன் சகாக்களின் புன்னகையோடும், ரசிகர்களின் விசில்களோடும் மேடையேறிய சந்தானத்துக்கு இந்த விழா ஸ்பெஷல்தான்! ‘இனிமே இப்படிதான்’ படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம்தான். ஆனால் இதற்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பு. ஆனால் சந்தானம் சொந்த பணத்தை போட்டு எடுத்திருக்கும் முதல் படம் இதுதான். முருகன், ஆனந்த் என்று இரண்டு இயக்குனர்கள், முருகானந்த் என்ற பெயரில் ஒன்றாக இணைந்து…
lm
சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்… நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன? வேறொன்றுமில்லை. செல்வராகவன் படத்தில் நடிக்கப் போகிறார் அல்லவா சிம்பு? அப்படியே இன்னொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அது உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம். முதலில் இதில் தனுஷ்தான் நடிப்பதாக இருந்தது. அப்புறம் என்ன காரணத்தாலோ பின்வாங்கிவிட்டார் தனுஷ்.…
selva-trisha
தேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம். செல்வராகவன், சிம்பு இணையும் படம் திட்டமிட்டபடி துவங்கப்படுமா? துவங்கினாலும் நிறுத்தப்படாமல் நடக்குமா? நடந்தாலும், செல்வாவின் பழைய ஸ்டைலில் இருக்குமா? இப்படி அடுத்தடுத்த கேள்விகளோடு தடதடக்கும் இதயங்களுக்கு இந்த செய்தி இனிப்பாக இருக்கலாம்… யெஸ்… வருண்மணியன் பைனான்ஸ் பண்ண, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியே அந்த படத்தை தயாரிக்கிறாராம். படத்தில் சிம்புவுக்கு மூன்று ஜோடிகள். அதில்…
Simbu-sad
எப்பாடு பட்டாவது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதி ‘லிங்கா’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரும் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும். ஆனால் விதியும் விஞ்ஞானமும் குறுக்கே நிற்பதாக குமுறுகிறது கோடம்பாக்கம். ஒரு புறம் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்கவே அதிக நேரம் பிடிக்கிறதாம். அணைக்கட்டின் மேல் நின்று ரஜினி போடுகிற ஃபைட் காட்சிகள் எல்லாமே அங்கு படமாக்கப்பட்டவை அல்ல. அங்கு…
Page 12 of 13« First...910111213

all news