simbu

TR_Aniruth
இது அடுத்த காமெடி! ‘ஆத்தோட அடிச்சுட்டு போனாலும் அத்த மகளோட போகணும்’னு முடிவெடுத்த பின்னால, போனாப் போவுதுன்னு வுடறதா? அனிருத்தையும் சேர்த்து பிடிச்சு வலிச்சுட்டாரு டி.ஆர். நேற்று அடுத்தடுத்து வந்த இருவரது அறிக்கையை படித்தவர்கள், அவங்க முதுகை அவங்களே பார்க்குற அளவுக்கு தலைசுற்றி போனார்கள். ஏன்? அறிக்கையிலிருந்த குழப்பம் அப்படி. கனடாவிலிருக்கும் அனிருத் அங்கிருந்தபடியே ஒரு விளக்கத்தை அனுப்பியிருந்தார். அதில் பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் அந்த பாடலுக்கு நான் இசையமைக்கல. பாடல் வரிகளையும்…
beep-str
அந்த பீப் ஸாங், சிம்புவின் எதிர்காலத்திற்கு ஒரேயடியாக சங்கு ஊதிவிடும் போலிருக்கிறது. நாலாபுறத்திலிருந்தும் டேஷ் டேஷ் வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை பண்ணி வருகிறார்கள். கொடுக்கு நாக்குல இருக்கு என்பதை இந்த நேரத்திலும் கூட புரிந்து கொள்ள முடியாத சிம்பு, “ஆமாம்… அது என்னோட பர்சனல். அதுல தலையிட ஒருத்தனுக்கும் உரிமையில்லை” என்று திமிர் பேட்டி ஒன்றை அளித்து, தீக்குச்சியை விழுங்கியிருக்கிறார். விஷால் அணி செய்வது நிவாரணப்பணி. இவர் செய்வதோ நிர்வாணப்பணி.…
kovan-simbu
நேற்றிலிருந்தே இந்தக் குரல் மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு இன்னொரு நீதி என்பது நமது நாட்டில் சகஜமாக புழங்கி வரும் நிலையில், இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! சிம்புவும் கோவனும் ஒன்றல்ல. ஒருவர் இளைஞர்களை சீரழிக்கும் ‘போதை’ வேண்டாம் என்கிறார். இன்னொருவர் இளைஞர்களை சீரழிக்கும் பாதை வேண்டும் என்கிறார். ஆனால் நல்லதை சொன்ன கோவனுக்கு தேசிய பாதுகாப்பு பிரிவில் தண்டனை. சிம்புவுக்கு?…
simbu-aniruth
எவன் செஞ்ச வேலைடா இது? என்று யாரும் கமென்ட் போட முடியாது. ஏனென்றால் அது அவிங்ய்களே செஞ்ச வேலைதான்! போர்பந்தரில் இருக்கும் எல்லா குளங்களிலும் சிம்புவை போட்டு முக்கியெடுத்தாலும், அவர் பரிசுத்த ஆவியாக வரவே முடியாது போலிருக்கிறது. டிசைன் அப்படி! அவரும் தன் மீதிருக்கும் பேட் இமேஜை தட்டி கழுவி சுத்தமாகதான் வைக்க நினைக்கிறார். அப்போதெல்லாம் ஒரு தானே புயலோ, ஒரு செம்பரபாக்கம் ஏரியோ புட்டுக் கொண்டு வந்து அவரை…
simbu-goutham
ஊரையெல்லாம் ஒரண்டையிழுத்தாலும், கவுதம் மேனனை பொருத்தவரை சிம்பு, ரொம்ப ரொம்ப தங்க கம்பு! இத்தனைக்கும் சிம்புவுடன் இணைந்து அவர் செயல்பட்டது ரெண்டே படத்தில்தான். அதற்குள் சிம்பு மீது அன்பு கொண்டு திரிகிறார் அவர். ஒருவேளை பிரஸ்சிடம் மட்டும்தான் இப்படி சொல்கிறாரா? அல்லது நிஜத்திலேயே அப்படியா என்பதை அவ்வளவு எளிதில் யூகிக்க முடியவில்லை. பட்… சிம்புவை பற்றி கவுதம் கொடுக்கும் சர்டிபிகேட்டை காட்டி, சிம்புவுக்கு ஒரு குடும்ப லட்சனமான பெண்ணே கூட…
simbu audio
பிரபல செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருப்பவர் முபாஷீர். இவர் நடத்தி வரும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் சிம்புவை பற்றி ஏதோ விமர்சிக்கப் போக, மேற்படி தொகுப்பாளரை ‘ரவுண்டு கட்டி’ அடித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இத்தனைக்கும் விஷாலுக்கும் சிம்புவுக்கும் இடையே உள்ள பிரச்சனை பற்றிதான் விமர்சித்தாராம் அவர். அந்த நிகழ்ச்சி நடந்தபோது அதை ரசிகர்கள் பார்த்தார்களா, அல்லது சிம்புவே பார்த்தாரா தெரியாது. அடுத்த நிமிஷமே அடுப்பில் உலை வைத்து,…
NRD-Heros copy
பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது. (அப்படியிருந்தும் அந்த படத்திற்கு ஒரு பெரிய வெற்றி விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. அது ஏன்? என்பதை தனியாக இன்னொரு செய்தியில் சொல்வோம்) தனி ஒருவனுக்கு சற்றும் குறையாத வெற்றியை தந்திருக்கிறார் ‘நானும்…
Actor STR at 7up Dance for me Final Stills
சிமென்ட் தரையில் வெந்த நெல்லை விதைப்பதும் ஒன்று! செல்வராகவனும் சிம்புவும் சொன்ன நேரத்தில் ஷுட்டிங்குக்கு வருவதும் ஒன்று! வருஷக்கணக்கில் படத்தை எடுப்பதும், அப்படி எடுக்கிற படத்தை தான் மட்டுமே ரசித்தால் போதும் என்று நினைப்பதும் செல்வாவின் பிடிவாதங்களில் ஒன்று. கனவோடும் பணத்தோடும் வந்த பல தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டிய செல்வராகவனின் லேட்டஸ்ட் முயற்சிதான் கான்! (கானகம் என்பதன் சுருக்கம்தான் இந்த கான்) சிம்புதான் இந்த படத்தின் ஹீரோ என்றதுமே,…
Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya
‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை புரிந்து கொண்டு ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இந்த போட்டி சொந்தப்பகையா?, பொதுநலப் புகையா? என்பதை பற்றியெல்லாம் வேட்டி சட்டையை மடித்துக் கொண்டு விவாதிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது. திடீரென…
vishal-election
எப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும், சரத்குமார் அணியினரையும் வரும் 10 ந் தேதி சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. ஆனால் ட்விட்டர் பக்கத்தில், சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியிருக்கிறார் விஷால். இதற்கிடையில் தங்கள் அணியை இந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைத்த…
angry simbu
எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான நாடகத்தின் பதை பதைப்பான எபிசோட்! இன்று பிற்பகல் நடிகர் சங்கம் தவிர்த்த திரையுலகத்தின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குனர் சங்கம் மூன்றும் அவசரமாக ஒரு விஷயத்தை அறிவித்தது. நடிகர் சங்கத்தில் பிளவு…
kamal-thoongavanam
எங்கு போனாலும் சிம்புவின் புகழ் பாடாமல் ஓய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது இயக்குனர் பாண்டிராஜ். என்ன பண்ணுவது? அவர் வலி அவருக்கு! இன்று சென்னையில் நடந்த ‘தூங்காவனம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு மினி நடிகர் சங்க விழா போலிருந்தது. கமல் பட விழாவில் இதற்கு முன்பு சும்மா வேடிக்கை பார்க்கும் ஆசாமிகளாக கூட கலந்து கொள்ளாத பல நடிகர்கள் அங்கு ஆஜராகியிருந்தார்கள். எல்லாம் கமல் பாண்டவர் அணிக்கு…
nayan
“நீ வரும்போது நான் வர மாட்டேன். ஆனால் நான் கூப்பிடும்போது நீ வரணும்” என்கிற மென்ட்டாலிடி, எந்த வகையில் பார்த்தாலும் அட்ராசிட்டியில்லாமல் வேறென்னவாம்? அப்படியொரு சிட்டியில் சிக்கிக்கொண்டுதான் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இது எந்த படத்தை பற்றிய தகவல் என்பதை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தால், சின்னக்கவுண்டர் படத்தில் வரும் செந்திலை விடவும் மோசமான நிலைக்கு சித்தரிக்கப்படுவோம் என்பதால், கோ அஹெட்… நயன்தாராவை என்கொயரி செய்தது நடிகர் சங்கம். அப்போது சரத்குமாரிடம்…
Actor Simbu and Actress Nayanthara in Idhu Namma Aalu Movie Stills
பழசுகளுக்கு வெள்ளையடிக்கும் காலம் இது போலிருக்கிறது டி.ஆர் பேமிலிக்கு! சிம்புவால் கெட்டுப்போன… விட்டுப்போன… படங்களையெல்லாம் தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார். வாலு படத்தை எப்படியோ சொந்த பணத்தை இறைத்து ரிலீஸ் செய்துவிட்டார். அது வெற்றியா? தோல்வியா? என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் அந்த படம் 100 கோடியை வசூலித்தால் கூட சிம்புவின் இழப்பீடுக்கு டேலி ஆகுமா தெரியாது. அதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா? அதற்கப்புறம் கண்டு கொள்ளாமலே…
vijay-crore
சமீபகாலங்களில் விஜய்யிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு தாமாகவே முன் வந்து உதவிய அவரது பெருந்தன்மை, டி.ராஜேந்தரால் மட்டுமல்ல, வெளியே நின்று வேடிக்கை பார்த்த மனிதர்களின் வாயாலும் பரணி பாடப்பட்டதை நாடே அறியும். அதோடு நிறுத்திக் கொண்டாரா அவர்? கவுண்டமணியின் ‘49 ஓ’ படம் வெகு நாட்களாக பெட்டிக்குள்ளேயே கிடக்கிறது. அதையும் தூசு தட்டி வெளியே வர தன்னால் ஆன சிறு…
str-hansika
கிளை விட்டு கிளை தாவும் குரங்கை விட மோசமானது லவ்! சேச்சே… உன் சகவாசமே வேணாம் என்று நேற்று முறைத்து, நீயின்றி நானில்லை, உன் நிழலின்றி சோறில்லை என்று இன்று அணைத்துக் கொள்ளும் விந்தையான மனம் கொண்டவர்கள் காதலர்களாகதான் இருக்க முடியும். இந்த காதல் சிம்பு ஹன்சிகாவை மட்டும் “அப்படியே இருந்துட்டு போங்க” என்று விட்டுவிடுமா என்ன? இருவரை பற்றியும் முன்னுரை தேவையில்லை. இருவர் காதல் பற்றியும் கூட முன்னுரை…
tr-vijay-simbu
“வாலு படம் வெற்றியா, தோல்வியா என்பதெல்லாம் இப்போது முக்கியமில்ல. வாலுவை ரிலீஸ் பண்ணினேனே… அதுதான் பெரிய வெற்றி” என்று டி.ஆர் சொன்னபோது அதில் இருக்கும் உண்மை பளிச்சென்று புலப்பட்டது. நேற்றைய சிம்பு பிரஸ்மீட்டில் விழுந்த முத்துக்கள் அத்தனையும் முக்கியமானவைதான். அதில் மிக மிக முக்கியமானது இந்த சப்பை கட்டு. உலகம் முழுக்க இருக்கிற விஜய் ரசிகர்கள், சிம்புவுக்கு உதவி செஞ்சதே எங்க தலைவர்தான். ஆனால் படத்துல மருந்துக்கும் அவரை காட்டலியே?…
vaalu ajith
பீனிக்ஸ் பறவை போலாகிவிட்டார் சிம்பு. சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் அவரது வாலுவுக்கு நாடெங்கிலும் நல்ல ரெஸ்பான்ஸ். அண்டை மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு என்கிறார்கள் ரசிகர்கள். வாலுவை மையமாக வைத்து தோல் கிழிகிற அளவுக்கு மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும். சுபஸ்வரமும் அபஸ்வரமுமாக கலந்து கட்டி ஒலிக்கும் அவற்றை படித்தால், தலை கிறுகிறுக்கிறது. இது ஒருபுறமிருக்க, ஏதோ திருவாரூர் தேரை பொக்லைன்…
simbu vaalu
மேரி பிஸ்கட்டை கொடுத்துவிட்டு மேரியையே வளைக்கிற ஊரல்லவா இது? இந்த பொல்லாத ஊரில் மனமுவந்து, “நான் இருக்கேன். டோன்ட் வொர்ரி” என்று சொன்னதைதான் விடாப்பிடியாக பிடித்து கொண்டு அன்பொழுகினார் சிம்பு. தனது ரெகுலர் விநியோகஸ்தர்களை விட்டு சிம்புவின் பைனான்சியரிடம் பேசச் சொன்ன விஜய், “ஒருவேளை வாலு ஓடலேன்னா அந்த நஷ்டத்தை நான் பார்த்துக்குறேன்னு சொல்லுங்க” என்றாராம். சிம்புவுக்கு விஜய் செய்த பேருதவி இதுதான். நடுவில் பேசிய விஜய் தரப்பு இந்த…
TR-vaalu
“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டி ராஜேந்தர், “ வாலு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது…. தமிழகத்தில் மட்டும் 300 க்கும்…
Page 11 of 13« First...910111213

all news