simbu

Simbu resighned Nadigar Sangam
தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த சங்கத்திலிருப்பதே பெருமை என்று காலரை தூக்கிவிட்டு திரியும் பலருக்கும் நேற்று தலை சுற்றி கிர்ரென ஆகியிருக்கும். ஏனென்றால், சிம்பு ‘நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன்’ என்று அறிவித்திருப்பதுதான். அதற்கான கடிதத்தை இன்னும்…
Simbu-Dhanush-GouthamMenon
எந்த கணக்கு போட்டாலும் சிம்புவிடம் செல்லாது என்பதை அடுக்கடுக்காக அனுபவித்தாலும் நப்பாசை யாரை விட்டது? விண்ணை தாண்டி வருவாயா என்ற எகிடுதகிடு ஹிட்டை சிம்புவுக்கு வழங்கிய விதத்தில் இவரும் அவரும் இப்படி அப்படி என்று ஆகிவிட்டார்கள். இந்த நட்பை துட்டாக்குவதுதானே முறை? எந்த ஹீரோவுமே தன்னை நம்பி வராத நேரத்தில், நானிருக்கேன் என்று சிம்பு வந்ததையே தேசிய விருதாக கருதினார் கவுதம்மேனன். உடனடியாக அச்சம் என்பது மடமையடா படத்தை ஆரம்பித்தார்கள்.…
pandiraj-simbu
புள்ளி வைக்கும் போதே, கோலம் கோணையாதான் வரும் என்பதை அறியாதவரல்ல பாண்டிராஜ்! இருந்தாலும் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் திங்கிற மாதிரி என்று நினைத்திருக்கலாம். இது நம்ம ஆளு படத்தை சிம்புவை வைத்து துவங்கினார். “இந்த படத்தை ஒரே நாள்ல தமிழ்நாடு முழுக்க பேச வைக்கணும் சிம்பு…” என்று எடுத்த எடுப்பிலேயே கூறிய பாண்டிராஜ், “உங்களுக்கு ஜோடியா நயன்தாராவை நடிக்கக் கேட்கலாமா?” என்று கேட்க, முகமெல்லாம் முள்ளங்கி பத்தையானார் சிம்பு. “முடியுமா?…
Nayan Attaxks
கடந்த சில தினங்களாகவே சூடாகிக் கிடக்கிறது ஏரியா! “நிஜமாவே அடிச்சுட்டாங்களா…?” என்று சிலரும், “நள்ளிரவுல அபார்ட்மென்ட்ல புகுந்து அடிச்சுருக்கானுங்கப்பா …” என்று சிலரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, “இருக்கும்… ஆனா இல்லாமலும் இருக்கும்” என்கிற சந்தேகத்தோடு விசாரணையை தட்டி விட்டது நிருபர் கூட்டம். பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கிடைத்த செய்தி இதுதான். கோயம்பேட்டில் ஒரு பிரபலமான அபார்ட்மென்ட்டில்தான் தங்கியிருக்கிறார் நயன்தாரா. சில தினங்களுக்கு முன் அவரது வீட்டுக்கதவை தட்டிய மர்ம…
vishal-simbu
ஒரு டெம்ப்பருக்காக கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்கள் செம டெம்ப்பர் ஆகிக் கிடப்பதுதான் இப்போதைய ஹாட்! சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டடித்த படம் ‘டெம்ப்பர்’. ஒரு ரவுடி போலீஸ் ஆகி, அதே ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக செய்வதுதான் இந்த படத்தின் ஒன்லைன். தெலுங்கு காரத்தின் உச்சம் என்று சொல்லப்படும் இந்த படத்தில் ஹீரோவின் அலட்டல் சமயங்களில் பெருத்த எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியொரு கதையில் நடிக்க ஏன் விஷாலும் சிம்புவும் அடித்துக் கொள்கிறார்கள் என்பதுதான்…
MysskinVishal
அகிரகுரோசோவா சமாதியிலேயே படுத்துக் கிடந்து, அங்கேயே உருண்டு புரண்டு அழுது, அந்த ஆத்மாவிடமிருந்து கொஞ்சூண்டு சரக்கையும் பறிமுதல் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் மிஷ்கின். வந்த சூட்டிலேயே அவர் விஷாலிடம் கதை சொல்லி, புதுக் கூட்டணியை அமைத்துவிட்டார். ஷுட்டிங் கோயிங் ஆன்…! ஆனால் இந்த விஷால் கால்ஷீட்டுக்கு அவர் அலைந்த வருஷங்கள் கொஞ்சநஞ்சமல்ல. முகமூடி கதையையே முதலில் விஷாலிடம் சொல்லிதான் ஆரம்பித்தார் அவர். அதற்கப்புறம் ஜீவா உள்ளே புகுந்து “நான்தான் நான்தான்” என்று…
இதுதான் இப்போதைய ட்ரெண்ட்டாம் மக்கழே…
தமிழ் சினிமாவில், ஒரு பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ (cover version) வீடியோ உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில், தான் நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ‘தள்ளிப் போகாதே…’ பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ பாடி வெளியிட்டிருந்தார் சிம்பு. அதைத் தொடர்ந்து, ‘ராஜா ராணி’ படத்தில் இடம்பெற்ற ‘சில்லென ஒரு மழைத்துளி’ பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர் நடிகர் யஷ்மித் குழுவினர். இந்த வீடியோதான் இளைஞர்கள் மத்தியில்…
Simbu
‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது கேட்கப்பட்ட முப்பத்தைந்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னாராம் அவர். அங்குதான் அனிருத் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதிருக்கட்டும்… அதென்ன வானத்தை போல விஜயகாந்த்? சிம்புவுக்கும் அவருக்கும் என்ன…
lovers special
ஆண்டவன் ‘ஆக்ஷன்’ சொன்ன பிறகுதான் அந்த ஆதாமே, ஏவாளை ‘லுக்’ விட்டிருப்பார் என்று தோன்றுகிறது! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது லவ் என்கிற நீதியை, கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறது சினிமா. சினிமாதான் காதலை பிறப்பிக்கிறது. சினிமாதான் காதலுக்கு நடைவண்டி வாங்கிக் கொடுக்கிறது. சினிமாதான் காதலுக்கு மராத்தான் ஓட கற்றுக் கொடுக்கிறது. சினிமாதான் ‘காதலுக்கு மரியாதை’ செய்கிறது. ஒரு காலத்தில் எஸ்.ஏ.சி பெரிய டைரக்டர்.…
pokkiriraja
அவிச்ச முட்டைக்கு ஆரஞ்சு கலர் பூசின மாதிரியிருக்கிறார் ஹன்சிகா! அரண்மனை 2 ன் பேய் ஹிட், ஹன்சிகாவை ஒரு சுற்று பெருக்க வைத்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் பொண்ணு டயட்! அப்படியிருந்தாலும் பேச்சுக்கு ஏது டயட்? நிறைய பேசிய ஹன்சிகாவை, நெருக்கிப் பிடிக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டால்தானே மனசு ஆறும். “இது நம்ம ஆளு படத்தில் நயன்தாரா இருக்காங்க. ஆன்ட்ரியா இருக்காங்க. அது போதாமல் உங்ககிட்டயும் ஒரு கெஸ்ட் ரோலுக்கு…
INA
கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில் லட்சமும் கோடியும் கொட்டுகிறதென்றால் யாராவது சும்மாயிருப்பார்களா? விரல் இருக்கிறவர்கள் எல்லாம் மியூசிக் போடக் கிளம்பிவிடுவார்களே? சிம்பு அண் பேமிலியிலிருந்து கிளப்பிவிடப்படும் தகவல்கள் கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது. பேசாம ஆடு மேய்க்கறதை…
ajithajith
அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு பேருக்கும் வேவ் லெங்க்த் ஒண்ணாயிருக்கணும். அப்பதான் லாங் டிராவல் போக முடியும்” என்பதுதான் அஜீத்தின் பாலிஸி. தன் மனசுக்குள் இறங்கி மகுடி வாசிக்காத எவரையும் கிட்டே…
aniruth
ஒருவேளை பகலில் வந்திருந்தால் அழுகிய முட்டையோ, அல்லது சூடான ஆம்லெட்டோ… அனிருத்துக்கு அபிஷேகம் பண்ணியிருப்பார்கள் மாதர் சங்கத்தினர். யாருக்கும் அறிவிக்காமல் தெரிவிக்காமல், அவ்வளவு ஏன்? போலீசுக்கே அனிருத் விளக்கமளிக்க வருகிற விஷயம் அவர் வந்தபின்புதான் தெரியுமாம். அவ்வளவு சீக்ரெட்டாக கோவை போலீஸ் முன் ஆஜராகிவிட்டு, தன் மேலிருந்த அழுக்கை தற்போதைக்கு கர்சீப் வைத்து துடைத்திருக்கிறார் அனிருத். கனடாவிலிருந்து கிளம்பிய அனிருத், நேரடியாக சென்னைக்கு வராமல் வழியிலேயே பெங்களூரில் இறங்கி கார்…
vijayantony
‘காளி’ என்ற தலைப்பை ரொம்ப காலமாக சுமந்து கொண்டிருக்கிறார் கபாலி ரஞ்சித். ஆனால் “எதுக்குங்க வேண்டாத வேலை? அப்படியெல்லாம் டைட்டில் வச்சா பிரச்சனைதான்” என்று முன்னுதாரணம் காட்டி முடக்கி வைக்கிறார்கள் சிலர். “நான் ஒரு ராசியில்லா ராஜான்னு பாடவே மாட்டேன்னு சொன்னேன். இந்த டி.ராஜேந்தர்தான் என்னை பாட வச்சார். அன்னையிலேர்ந்து என் முன்னேற்றம் தடை பட்டுடுச்சு” என்றார் மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். இதை செய்யாதே… அதை செய்யாதே… என்று அச்சம்…
Aniruth-Simbu
ஒரு ஹிட் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவ்வளவு கெட்ட காலத்திலும், அவர் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகளில் இருந்தார் என்கிறது சில உர்ஜிதப்படுத்தாத தகவல்கள். போலீஸ் தேடாத போது அவர் ஏன் வீட்டுக்குள்ளோ, அல்லது வேறெங்காவதோ முடங்கிக் கிடக்கணும்? அதனால்தான் பட வேலைகளை பார்த்து வந்தார் போலும். நடக்கட்டும்… மேட்டர் அதுவல்ல. சிம்பு நயன்தாரா இணைந்து நடித்து பசங்க பாண்டிராஜ்…
Jamin-simbu
சிம்பு காத்திருந்த அந்த நல்ல செய்தி இன்று வந்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஆனால் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்தான் அது. “வருகிற 11 ந் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன் நேரில் ஆஜராக வேண்டும். போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும்” என்றெல்லாம் கூறியிருக்கிறார் நீதிபதி ராஜேந்திரன். இப்படியொரு முன் ஜாமீன் கிடைக்கும் என்பதற்காகதான் சிம்பு காத்திருந்ததாக கூறப்படுகிறது. தொலைக்காட்சிக்கு நேரில் வர…
Acham enbathu madamaiyada trailer
2016 predictions
ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங்…
radhika sharathkumar
வேடிக்கை பார்த்தவன் வேட்டியிலேயும் வெத்தலப் பாக்கு எச்சின்னு ஆகிவிடும் சில விமர்சனங்கள். அப்படிதான் ஆகிவிட்டது ராதிகா சரத்குமாரின் சிம்பு சப்போர்ட் விவகாரமும்! ஒரு டேஷ் பாடலை பாடிவிட்டு, அப்பளம் போல நொறுங்கிக் கிடக்கிறார் சிம்பு. போலீஸ் தேடுவதாக ஒரு புறம் சொல்லப்பட்டாலும், அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. அவர் வீட்லதான் ஜம்முன்னு இருக்கார் என்கிறது இன்னொரு தகவல். அவர் கைதுதான் இப்போது பிரச்சனையா என்பதையெல்லாம் தாண்டி, இந்த விவகாரம் வேறொரு திசைக்கு இழுத்துச்…
usha feeling
இத்தனை நாள் மவுனத்தை ஒரேயடியாக வெடித்து சிதறடித்துவிட்டார் டி.ராஜேந்தரின் உஷா. சிம்புவை பெற்ற இந்த அம்மாவின் கண்ணீரில் நிறைய வலி இருந்தாலும், அந்த வலியை ஊர் ஏற்றுக் கொள்ளுமா என்பதுதான் இப்போதைய விவாதம்! உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அவரை அறியாமலே சில உண்மைகளையும் உதிர்த்திருக்கிறார் அவர். இருந்தாலும் அம்மா சென்ட்டிமென்ட்… எப்போதும் மதிக்கத்தக்கதுதானே? இதோ அவரது வீடியோ பேச்சு- (நன்றி -குறள் டி.வி.காம்)
Page 10 of 14« First...89101112...Last »