Review

Actor Udhayanidhi Stalin in Gethu Tamil Movie Stills
மத்தளத்துக்கு மட்டும்தான் ரெண்டு பக்கம் இடி! இந்த சினிமா விமர்சகர்களுக்கு திரும்புகிற பக்கமெல்லாம் இடி! நல்லாயிருக்கு என்று எழுதினால், துட்டு எவ்ளோ வாங்குன மாப்ளே என்பார்கள். நல்லாயில்லேன்னா துட்டு வர்லீயா மாப்ளே என்பார்கள். அட மீடியமா எழுதி வைக்கலாம்னா, என்னவோ போப்பா. வாங்குன கொஞ்ச காசுக்கு கொஞ்சமா சொம்படிச்சுருக்கே என்பார்கள். க்ரிட்டிக்ஸ் கண்டிஷன் இப்படி க்ரிட்டிக்கல் சுச்சுவேஷனில் இருக்க, நிஜமாகவே எரிச்சல் பட்டிருக்கிறார் உதயநிதி. சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு…
Uppu-Karuvadu-Review
ஒரு சினிமா இயக்குனர் ‘காய்ந்து கருவாடு’ ஆவதுதான் கதை! கருணாகரன், சாம்ஸ், டவுட் செந்தில், நாராயணன் போன்ற ஒட்டாத மாவைக் கொண்டு ‘கெட்டி உருண்டை’ செய்வது சாத்தியமா என்ன? (அ)சாத்தியப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்! ரசிகர்களின் மனசை பல்லாங்குழியாடும் ராதாமோகனின் மொழி இந்த படத்திலும் நின்று விளையாடியிருப்பதில் வியப்பொன்றும் இல்லையே? முதல் படம் ஆவரேஜ், இரண்டாவது படம் பாதியிலேயே டிராப். மூன்றாவது படத்திற்காக ஏகப்பட்ட காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டு படம் இயக்க ஆயத்தமாகிறார்…
puli-murugan manthiram
சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும் சேதாரத்திற்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதில் அரசியல் வேறு சேர்ந்துகொள்கிறது என்று கேள்விப்படுகிற தகவல் கண்டிப்பாக சினிமாவுக்கு ஆரோக்கியமானதென்று சொல்ல முடியாது. அந்த வரிசையில் இப்போது புலி. புலி –…
kutram kadithal-review
அ-வில் ஆரம்பித்து அக்கன்னாவை(ஃ) முடிப்பதற்குள் மாணவர்களின் நாடி நரம்பெல்லாம் பயத்தை பரவ விடும் ஆசிரியர்கள்…. இது ஸ்கூல்தானா, இல்லை மாட்டுக் கொட்டடியா? என்று பதற வைக்கும் தண்டனைகள்! ‘அடிச்சாதான் படிப்பு வரும்’ என்று ஒரு கருத்தும், ‘அடிக்கறதுக்கு குழந்தைகள் என்ன கிரிமினல் குற்றவாளிகளா?’ என்று இன்னொரு கருத்தும் உலவி வரும் இந்த சூழலில் மிக மிக பொருத்தமாக வந்திருக்கும் படம் குற்றம் கடிதல்! உலக பட விழாக்களில் கலந்து கொண்டு…
Aavi Kumar Movie review
இட்லி ஆவிக்கும் இடியாப்ப ஆவிக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதல்லவா? அப்படி இட்லி இடியாப்ப ஆவிகளாக கோடம்பாக்கத்தில் திரியும் அடியாத்தீ… ஆவிகளில் ஒன்றுதான் இந்த ஆவிகுமார். (நிஜத்தில் ஆவிகுமாரி..!) நல்லவேளை… சாம்பிராணி, உடுக்கை, ஜடாமுடி எதுவுமில்லாத ஆவி படம். அதற்காகவே பிடியுங்கள் டைரக்டரே, ஒரு கப் ‘ஆவி’ன்பால் சூடா…! ஆவிகளுடன் பேசுகிற மீடியம்தான் படத்தின் ஹீரோ உதயா. சிங்கப்பூரில் ஒரு டி.வி நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறார். அங்கு வரும்…
maari-review
‘இந்த படம் தர லோக்கலு… உங்களுக்கெல்லாம் அதன் வாசனையை அனுபவிக்கிற அளவுக்கு மூக்கு ஸ்டிராங்கா இல்ல’ என்று ஒற்றை வரியில் விமர்சகர்களின் மூக்கை உடைக்கிற பக்குவத்திற்கு இந்நேரம் வந்திருப்பார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்! கலர் கலர் சட்டை… விதவிதமான பஞ்ச்…. விக்கலெடுக்க வைக்கும் கிக்குகள்… இதெல்லாம்தான் தர லோக்கலு என்று நம்புகிறவர்களுக்கு, பாலாஜிமோகனின் இந்த மாஸ், மணக்க மணக்க கிண்டிய ‘பொடிமாஸ்’தான். ஆனால் மற்றவர்களுக்கு? கல்யாணத்துக்குதான் கெட்டி மேளம்,…
vadivelu spesch
mass-Review
சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை. வெங்கட்பிரபுவின் ‘டேக் இட் ஈஸி’ கொள்கையோடு, ஹரியின் ‘தூக்கி போட்டு அடி’ பாலிஸியும் கை கோர்த்தால் என்ன வருமோ? அதுதான் இந்த படத்தின் படபடப்பும், பரபரப்பும்! நார்த் மெட்ராஸ் ஏரியாவில் தானுண்டு, தன் திருட்டு உண்டு என்று…
36 vayathinile-review
‘டை’ அடிக்கிற ஆன்ட்டிகளுக்கெல்லாம் ‘ஷை’ அடிக்கிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்! படத்தில் வருகிற பாடல் வரிகளுக்கேற்ப ‘நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா…?’ என்று கவலைப்படுகிறார்கள் தியேட்டருக்குள்ளிருக்கும் பேரிளம் பெண்கள். கடைசியில் கவலைப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் வரைக்கும் தாங்குகிற அளவுக்கு தன்னம்பிக்கை பூஸ்ட் கொடுத்து தைரியமாக அனுப்பி வைக்கிறார் ஜோதிகா. தமிழ்சினிமா ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியான இவருக்கு இதைவிட சிறந்த ரீ என்ட்ரி வேறென்ன இருக்க முடியும்? ‘மொழி’…
o kadhal-review
மாநராட்சியோ, தேர்தல் ஆணையமோ, மணிரத்னத்தின் ‘பர்த் சர்டிபிகேட்’டை மறுபடியும் சரிபார்க்கும் நேரமிது! இளமை வழியும் கதையும், அதில் குறும்பு வழியும் வசனங்களுமாக தனது நிஜ வயசில் பல வருஷம் பின்னோக்கி திரும்பி காதலித்திருக்கிறார் மணி. கால காலமாக பிற்பற்றப்படும் கலாச்சாரம் என்கிற பூட்டின் மீது, அவர் வீசியிருக்கிற சுத்தியல்… நல்லவேளை, பெரிசாக சேதப்படுத்திவிடவில்லை எவற்றையும்! இல்லையென்றால் தெருவுக்கு தெரு மணிரத்னத்தின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டிருக்கும். அரசு பேருந்துகள் ‘ஐயகோ’ ஆகியிருக்கும். பொசுக்கென்று…
darling-review
‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற அளவுக்கு அது போகணுமா என்கிற கேள்விகள் எழாமலில்லை. இந்த டார்லிங்கும் அப்படியொரு காதல் ஆவிதான்! (தியேட்டர்ல எங்கு பார்த்தாலும் ஒரே சின்னக்குழந்தைங்க. பரிசுத்த ஆவிகளே… இப்படியாகிருச்சே உங்க டக்கு?) ஆசைப்பட்டு காதலித்த சிருஷ்டி டாங்கே…
Arya, Hansika Motwani At Meagamann Tamil Movie Photos
அரையிருட்டு… அல்பாயுசில் போக வைக்கும் டூமீல் டூமீல்கள்… ஹஸ்கி வாய்சில் ரகசியம்… பழைய பங்களாக்களில் ஃபைட்…. இவையெல்லாம்தான் அண்டர்வேல்டு கிரைம் படங்களின் ஆண்டாண்டு கால ஃபார்முலா. அதையும் இழக்காமல், ‘அரைச்ச மாவுதாண்டா’ என்கிற அலுப்பையும் தராமல் ஒரு அண்டர்வேல்டு கிரிமினல்ஸ் படத்தை தர முடியுமா? முயற்சி செய்திருக்கிறார் மகிழ் திருமேனி. கொக்கைன் கடத்தும் கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க களம் இறங்குகிற போலீஸ், அவர்களுக்கு பொறி வைக்கிறது. ஆனால் உஷாராகும்…
பிசாசு -விமர்சனம் காலகாலமாக நமக்குள் புனையப்பட்டிருக்கும் பிசாசு என்பதன் பிம்பத்தை பீஸ் பீஸாக்குகிற படம்! பிசாசை திரையில் பார்த்து பயந்திருக்கிறோம்… வியந்திருக்கிறோம்…. வியர்த்திருக்கிறோம்… அலறியிருக்கிறோம்…. முதன் முறையாக கண்ணோரத்தில் கவலை ததும்ப காற்றில் தவழும் அந்த உருவத்திற்காக தழுதழுக்க ஆரம்பிக்கிறோம். ‘ஐயோ பவானி. என் தெய்வமே…’ என்று பெற்ற அப்பன் கதறுகிற நேரத்தில் பொளக்கென எட்டிப் பார்க்கும் அந்த கண்ணீர் துளிகள்தான் இந்த படத்தின் கைதட்டல்கள். இத்தனை காலம் பிசாசுக்கென செதுக்கப்பட்டிருந்த பிம்பத்தை…
அப்பா வேணாம்ப்பா – விமர்சனம் ‘குடி குடியை கெடுக்கும்’ என்கிற சம்பிரதாய அட்வைஸ்களை ‘ராவாக’ சொல்லாமல் சகலவித சுவாரஸ்யங்களோடும் இரண்டு மணி நேரப் படமாகத் தர முடியுமென்றால் அதுதான் ‘அப்பா வேணாம்ப்பா!’ படத்தின் ஹீரோ, இயக்குனர், எல்லாமே வெங்கட்ரமணன் என்ற புதியவர்தான். படம் முழுக்க வெங்‘கட்டிங்‘ரமணன் ஆகி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். பத்து லட்சத்திற்குள் இவ்வளவு நேர்த்தியாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும் என்றால், 100 கோடிக்கும் 150 கோடிக்கும் படம் எடுப்பவர்கள் எல்லாம் இவரிடம் வரிசையில்…
naigal jakkirathai review
பாம்பு டைப் அடிக்கிறதையே பார்த்தாச்சு! நாய் சைட் அடிக்கிறதையும் ரசிச்சுருவோமே என்று உட்கார்ந்தாலொழிய நாயின் அற்புதங்கள் எதுவும் நம்மை உசுப்பேற்றவில்லை என்பதை இந்த படத்தின் முதல் தகவல் அறிக்கையாக சமர்ப்பிக்கிறோம் யுவர் ஆனர்…! போயும் போயும் நாயா என்று நினைக்கிற அளவுக்கு இல்லை நாய் வளர்ப்பு சீசன். அதற்கு சீப்பு என்ன? சோப்பு என்ன? கட்டிங் என்ன? பெட்டிங் என்ன? இப்படியான சிட்டி வாழ்க்கையின் செலவுகளை, கிராமத்து ‘முத்து, ராமு,…
lakshmi ramakrishnan
ஒரே சினிமாவில் இருந்தாலும் ஒருவரையொருவர் பிராண்டிக் கொள்கிற சீசன் போலிருக்கிறது இது. அண்மையில் வெளிவந்த ‘திருடன் போலீஸ்’ படம் திரையரங்குகளில் சிறப்பான கலெக்ஷனோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. போன வார படங்களில் பாராட்டையும் கலெக்ஷனையும் அள்ளிய ஒரே படம் இதுதான். ஆனால் இந்த படத்தை பற்றியும் படத்தில் நடித்தவர்கள் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஏம்மா… தப்பு பண்றீங்களேம்மா… என்று திருடன்…
oru oorla rendu raja-review
முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா! சட்டியில நெருப்பை போட்டுட்டு, அடுப்புல அரிசிய போட்ட மாதிரி தத்துப்பித்து சமையல்! கொத்து கொத்தா இருமல்! தமிழ் சமூகத்தின் இன்றியமையாத பிரச்சனைகளை தங்கள் படங்களில் நுழைக்கும் ‘வளக்கம்’ சமீபகாலமாக அதிகரித்திருப்பது ஒருவகையில் நல்லதுதான். அதற்காக இரும்பு ஆலையில இது நடக்குது, கரும்பு ஆலையில அது நடக்குதுன்னு…
kalkandu-review
பெரிய வீட்டு பிள்ளைகள் அறிமுகமாகும்போதெல்லாம் கிழக்கில் ஸ்டார் முளைக்கும் என்ற நம்பிக்கையோடு வானத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கு பல நேரம் பீஸ் போன பல்புகள்தான் பல்லை காட்டும். முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகள், முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி இயக்குனர்கள் என்று வீட்டுக்கு ஒரு வாரிசு இப்படியொரு கனவோடு கிளம்பும். இந்த முறை நாகேஷின் பேரன் கஜேஷ் வந்திருக்கிறார்! பல்பா? ஸ்டாரா? இன்னும் நாலு படம் போகட்டும்… (அதனால் ரிசல்ட்…
vennila veedu copy
‘என் தங்கம் என் உரிமை’ என்று வீட்டுக்கு வீடு வந்து உசுப்பிவிடும் விளம்பரங்களுக்கு மத்தியில் ‘போங்கடா… நீங்களும் உங்க தங்கமும்’ என்று உரக்க சொல்கிறது வெண்ணிலா வீடு. கோடம்பாக்கம் எங்கிலும் நகைச்சுவை படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ‘இதுதான்டா ட்ரென்ட்’ என்கிறார்கள் ஜனங்களும். இந்த நேரத்தில் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு படம். தியேட்டர் நிரம்புமா? ட்ரென்ட் உடையுமா? ஏகப்பட்ட சந்தேகங்களோடு வெளியே வருகிறோம். இந்த படத்தின் ரெண்டாவது வார போஸ்டருக்கு…
Theriyama-unnai-kadhalichuten-review
‘தெரியாம நடிக்க வந்திட்டேன்’ என்பதை போல ஆரம்பகாலங்களில் அச்சுறுத்தி வந்த விஜய் வசந்த், ‘என்னமோ நடக்குது’ மூலம் மனசுக்கு நெருக்கமாகியிருந்தார். அவரது குடும்பத்திற்கே பழக்கப்பட்ட ‘தவணை முறை’ திட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சினிமாவின் முக்கிய நடிகராகியிருக்கிறார் என்பதை இந்த படத்தின் இரண்டாம் பாதி நிரூபித்திருப்பதால், விஜய் வசந்த்… ‘ கோ அஹெட்! ’ அவருக்கு பில்டப் கொடுக்கும் பல வசனங்களில், தன் நிலைமையை உணர்ந்து ‘டேய்… என்னை பார்த்தாடா?’ என்று…
Page 1 of 212

all news