rajinikanth

enthiran2-songs
எங்க ஊரு துட்டுக்காரன், அப்படியே எங்க ஊரு பாட்டுக்காரன்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவாரா? இலங்கை வாழ் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு இதுதான். 2ஓ படத்தில் (ரைட்ஸ் பிரச்சனையில் எந்திரன் என்ற வார்த்தைகயை பயன்படுத்தக்கூடாது என்பதால்தான் இந்த 2ஓ) இலங்கையை சேர்ந்த பாடகர்கள் சிலரை பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்! ஆனால் இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களில் நிமிஷத்துக்கு நிமிஷம் லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வரும்…
Kabaali-story
கிட்டதட்ட 65 நாட்களுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் சென்னையில் எடுக்கப் போகிறார்களாம். மலேசியா ஷுட்டிங்கின் போது யூசர் பிரண்ட்லியாக இருந்த ரஜினி, சென்னையில் சற்று இறுக்கமாகவே காணப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அங்கு ரசிகர்கள் குவிந்தாலும் சந்தோஷம். குடும்பத்தோடு வந்து நின்று கும்பிட்டாலும் சந்தோஷம். இங்கு அப்படியா? நெர்வஸ்… நெர்வஸ்…! முக்கியமாக ரஜினியை வைத்துக் கொண்டு அவுட்டோர் காட்சிகளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.…
Endhiran2
இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன் அதிகாரபூர்வமான ஷுட்டிங் துவங்கிவிட்டது. எந்திரன் முதல் பகுதியை விட, இந்த பார்ட் 2 செம ஸ்டிராங்காக வரும் போலிருக்கிறது. காரணம்… எந்திரன் 2 ன் தயாரிப்பு நிறுவனம் அப்படி. லைக்கா என்றால் சொல்லவே வேண்டாம். எளிதில்…
rajini mandapam
பல வருஷத்து கேள்விக்கு இப்போதுதான் பதில் தந்திருக்கிறார் ரஜினி. அவரது ராகவேந்திரா மண்டபம் சென்னையில் காஸ்ட்லியான மண்டபங்களில் ஒன்று. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அமைந்திருக்கும் இடமே எனக்கு சொந்தம் என்றொருவர் வழக்கு தொடுக்க, அதைக் காப்பாற்ற வழி தெரியாத ரஜினி, மேற்படி மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். உடனே ஒரு ட்ரஸ்ட் துவங்கப்பட்டு மண்டபம் அந்த பெயருக்கு மாற்றப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் அந்த ட்ரஸ்ட்டின் உறுப்பினர்கள் யாவரும் ரஜினியும்…
rajini-floods
இன்று பிற்பகலில் இருந்தே பெரும் பரபரப்பு! ரஜினி வெள்ள நிவாரண நிதியாக பத்து கோடி ரூபாயை தமிழக அரசுக்கு அளிக்கவிருப்பதாக பெங்களூரை சேர்ந்த ஆங்கில ஊடங்களும் டி.வி 9 சேனலும் செய்திகளை வெளியிட்டதுதான் அந்த பரபரப்புக்கு காரணம். இந்த கொடூரமான வெள்ளம், மக்கள் அவதி, உயிரிழப்பு இது பற்றியெல்லாம் ரஜினி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆறுதலும் கூறவில்லை. ஆனால் அவர் தன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்று…
rajini-helps
தத்தளிக்கும் சென்னையில் தவியாய் தவிக்கிறார்கள் மக்கள். இந்த மழை பேரழிவுக்கு அடையாளமாக சென்னையை அச்சுறுத்திக் கொண்டிருக்க, வீடு, உடமைகளை இழந்து நடு ரோட்டுக்கு வந்துவிட்டார்கள் மக்கள். இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதியாக நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும், மக்கள் மனங்களிலும் எழ, இனியும் பொறுத்தல் ஆகாது என்று தத்தமது பங்குக்கு நிதியளித்து வருகிறார்கள் திரையுலகத்தை சேர்ந்தவர்கள். சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்ட குடும்பம் சார்பாக…
pressmeet-rajini
மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். “மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னவென்றால் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியாதது தான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனை செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம்…
modi rajini
கண்ண பரமாத்மா… காசி விஸ்வநாதா என்றெல்லாம் ரசிகர்கள் பரிபூரணமாக கொண்டாடினாலும், அரசியல்வாதிகளின் கணக்கு அதற்கெல்லாம் மேலானது. இந்த சூட்சுமம் அறியாதவரா ரஜினி? அதனாலேயே ஒரு அரசு சார்ந்த சந்திப்பை அப்படி அப்படியே தவிர்த்துவிட்டு மலேசியாவை விட்டு கிளம்பவிருப்பதாக தகவல் கசிகிறது. அது தொடர்பான விரிவான சுவாரஸ்யம் இதோ- கடந்த சில வாரங்களாகவே ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. ரஜினி போய் இறங்கியதிலிருந்தே மாய பூமியாகிவிட்டது மலேசியா. திரும்புகிற இடமெல்லாம்…
Rajini-datho
ரஜினி மலேசியாவுக்கு போய் இறங்கிய நாள்தான் அங்குள்ள மக்களுக்கு தீபாவளி. பாராட்டு கொஞ்சம் ஓவராயிருக்கே என்று யாரும் விமர்சிக்க தேவையில்லை. நிஜம் அதுதான். ஏன்? கடந்த இரண்டு மாதங்களாகவே மலேசியாவில் கடுமையான புகை மூட்டமாம். சூரியனை பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாம். கண்ணெரிச்சல், சாலையில் போக்குவரத்து சிக்கல், மன ரீதியாகவே சோர்ந்து போயிருந்தார்களாம் மக்கள். ஆச்சர்யம் என்னவென்றால், ரஜினி மலேசியா போய் இறங்கிய நாளில் இருந்தே சூரியன் சுள்ளென்று அடிக்க…
win vishal
கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே பெற்றிருக்கிறார்கள் அவர்கள். “நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிட்டுதான் என் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன்” என திரவுபதி சபதம் போட்ட விஷாலை கிண்டல் செய்யாத ஆளேயில்லை. “ஏம்பா… கல்யாணம் பண்ணிக்கிற ஆசையில்லையா?” என்கிற அளவுக்கு…
Trisha-Nayanthara-and-Tamannaah
இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி… நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும் கடைசி நேரத்தில் விஷாலை கழற்றிவிட்டுவிட்டார்கள். நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, தமன்னா, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பல இளம் நடிகைகளும் முற்றிலுமாக தேர்தல் நடைபெறும் இடத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவர்கள்…
ajith-boycatt
ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனது ஏன்? இது குறித்துதான் திரையுலகம் பரபரப்பாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. நேரம் செல்ல செல்ல அஜீத் வருவார் வருவார் என்று காத்திருந்த பொதுமக்களுக்கும் மீடியாவுக்குமே நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.…
attacked vishal
நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக கேரவேனுக்குள் ஓய்வெடுக்க வைத்திருக்கிறது விஷால் அணி. நடிகை சங்கீதா ஓட்டுப் போன போது அவரை சரத் அணியை சார்ந்த ஒருவர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதை கேட்கப்போன விஷாலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Rajini-vishal
‘அவரிடம் ஆசி வாங்கிட்டா போதும்… மற்றதெல்லாம் தூசிதான்’ என்கிற நம்பிக்கையோடு ஒவ்வொரு தேர்தலின் போது அவர் வீட்டு கதவை தட்டுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை. “நீ வர்றியா? தாராளமா வா… உனக்கு விபூதி வச்சுருக்கேன். உனக்கு நேர் எதிர் கட்சியிலேர்ந்து இன்னொருத்தர் வர்றாரா? வரட்டும்… அவருக்குதான் பஞ்சாமிர்தம் இருக்கே?” என்று வர்றவர்களுக்கெல்லாம் புன்சிரிப்பையும் பிரசாதங்களையும் வழங்கி அனுப்புகிற பெரும் குணம் இருக்கிறது ரஜினிக்கு. கிட்டதட்ட நடிகர் சங்க விவகாரத்திலும் அதுவே ‘ரிப்பீட்’…
Rajini-vijay
‘என் வழி தனீ…ஈ வழி’ என்றுதான் போய் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சுற்றியிருப்பவர்கள் விட்டால்தானே? ரஜினி யார் பக்கம்? அவருக்கு அஜீத்தை பிடிக்குமா? விஜய்யை பிடிக்குமா? என்றெல்லாம் விவாதங்களை கிளப்பி, அவர்களே அதற்கு ஒரு சொல்யூஷனையும் சொல்லி வந்தார்கள். விஜய் நடிக்கும் படத் துவக்க விழாக்களுக்கு பலமுறை அழைக்கப்பட்டும் ஒருமுறையும் சென்றதில்லை ரஜினி. ஆனால் அஜீத்தின் ‘அசல்’ படம் துவங்கியபோது நேரில் சென்று வாழ்த்தினார். அதோடு கிளம்பினாரா? தான் படிக்கும்…
pa ranjith
மச்சான் கவுன்சிலராகிட்டா, மாரியாத்தா கோவில் உண்டியலு எனக்குதான் என்று திரியும் ஊரல்லவா இது? தெரிந்த இயக்குனர் படம் இயக்குகிறார். அதுவும் ரஜினி படம். வாயை திறந்து கேட்டுப் பார்ப்போம். வந்தா மல… வரலேன்னா பரவால்ல… என்ற முடிவுக்கு வந்தாராம் அவர். ரொம்ப தைரியமாக வாய் விட்டே கேட்டுவிட்டாராம். அப்படியென்ன கேட்டார்.? “இந்த படத்தில் ரஜினி சாரோட காம்பினேஷன்ல வர்ற மாதிரி ஏதாவது வேஷம் இருந்தா கொடுங்களேன்” என்றுதான். இத்தனைக்கும் ரஞ்சித்…
kabali-rajini
வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தலைப்பு இதுவா? அதுவா? என்று தனக்கு தெரிந்த பெயர்களையெல்லாம் போட்டு எடுத்து புரட்டிக் கொண்டிருந்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் இனி அந்த அவஸ்தையில்லை. இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் டைரக்டர் பா.ரஞ்சித்.…
Superstarrajini
சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி! ரஜினியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தால் கூட அதுவே என் உயிர், பொருள், ஆவி என்று ரசிகர்கள் திரிந்த காலம் அது. நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், தம்மடிச்சா ஸ்டைல், தலை கோதுனா ஸ்டைல்…
Actress  Spoorthi Suresh and Sridhar at the Pokkiri Mannan Movie Audio Launch
பல படங்களில் சென்ட்டர் பிகராக நின்று ஆடும் கொழுக் மொழுக் பையன்தான் ஸ்ரீதர். நடன இயக்குனர் என்பதால் ஸ்ரீதர் மாஸ்டர் என்கிறது திரையுலகம். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடன அமைப்பு செய்திருந்தாலும், நடுநடுவே எட்டிப் பார்க்கும் ஹீரோ ஆசை இவரை கபளீகரம் செய்துவிட்டது. பிரபல விநியோகஸ்தர் தணிகைவேல் வெளியிவிடவிருக்கும் ‘போக்கிரி மன்னன்’ படத்தில் ஸ்ரீதர்தான் ஹீரோ. ‘மனசுக்குள்ள எனக்கு ஹீரோவாகணும்னு ஆசை இருந்திச்சு. நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். அந்த…
director shankar
பாகுபலி வெற்றிக்குப் பின் 250 கோடி ரூபாய் படங்கள் தென்னிந்தியாவில் அநாயசமாக தயாரிக்கப்படலாம். அதற்கு முதல் ஸ்டெப்பாக பாகுபலி வழியில் பொருட் செலவும், பிரமாண்ட நட்சத்திரங்களுமாக களமிரங்க போகிறார் ஷங்கர். இந்த படத்தின் தயாரிப்பு நாட்கள் மட்டும் சுமார் இரண்டு வருடங்கள் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். எல்லாம் சரி… அடுப்பை பற்ற வைக்கணுமே? இன்னும் சமையல் கட்டு பக்கமே போக முடியாமல் சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். ஏன்? அவர்…
Page 10 of 13« First...89101112...Last »