ponvannan

Ajithkumar
‘மக்கள்ட்ட சுரண்டறது சரியில்ல… நாமளே பணத்தை போட்டு நடிகர் சங்கத்தை கட்டுவோம்’ என்று அஜீத் சொன்ன விஷயம், எஸ்.வி.சேகர் மூலமாக வெளியே கசிந்ததால் நாடெங்கும் ஒரே சலசலப்பு. ‘சரியாதானே சொல்லியிருக்கார்?’ என்று பலரும் விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். ‘தல… நீதான் நிஜத் தல…’ என்று அவரது ரசிகர்களும் பொங்கி பொங்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாரையும் பொங்க விட்ட அஜீத், நடிகர் சங்க நிர்வாகிகளை மட்டும் எப்படி பொங்க விடாமலிருப்பார்? ‘ஆமாய்யா……
palli-paruvathile-review
‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும், வயசும், அது தருகிற அவஸ்தையும், ‘போங்கடா நீங்களும் உங்க பச்சப்புள்ள காதலும்’ என்றுதான் புலம்ப வைக்கிறது. தலைமை ஆசிரியரின் மகன் நந்தன் ராமுக்கு தன்னுடன் படிக்கும் வெண்பா மீது காதல். உடனிருக்கும் நண்பர்களின் உசுப்புதல் காரணமாக, வெண்பாவுக்கும் தன் மீது காதல்…
Rift In Nadigar Sangam !!!
Nadigar-sangam
ஆர்.கே.நகரில் ஒரே ஒரு பால்தான் போட்டார். பதிலுக்கு தினந்தோறும் ஒரு செங்கல் விழுந்து கொண்டிருக்கிறது விஷாலின் தலையில். தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலும் இப்போ பூகம்பம். உப தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் காரணமாக சொல்லியிருப்பது விஷாலின் அரசியல் ஆசையைதான். எப்போது ஆர்.கே.நகருக்கு விஷால் மனுத்தாக்கல் செய்தாரோ, அன்றே தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் நாசரிடம் கொடுத்துவிட்டாராம் அவர். ஆனால் எப்படியாவது…
STR-Manirathnam
நடிகர் சங்கத்திற்காக ஒரு சட்டையையும், தயாரிப்பாளர் சங்கத்திற்காக இன்னொரு சட்டையையும் போட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் விஷால். நல்லவேளையாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரை ஞானவேல் ராஜா, கதிரேசன் போன்ற வேறு பொறுப்பாளர்களிடம் தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் அவர். நடிகர் சங்கத்தில் கூட இந்த விஷயத்தை பொன் வண்ணனும் நாசரும்தான் கவனிக்கிறார்களாம். இங்குதான் சிம்புவின் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் சேர்ந்து கை கொடுத்திருக்கிறது. மைக்கேல் ராயப்பனை…
Vishal success
Actors Attacked By Rowdies.
vishal-manaobala-karunaas
அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு? யாருக்கு யாரால் பிரச்சனை? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? இப்படி எதுவும் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்
Sivaji Momorial Day
“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா…” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு நாள். இதே நாளில் பூவுலகை விட்டு மறைந்த சிவாஜி, எல்லா வகையிலும் தமிழ்சினிமாவின் ஐகான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஒருபுறம் அவரது புகழ் பாடும் கூட்டம், இன்னொருபுறம் “சிவாஜி என்றால் சில…
RajiniKamalAjithVijay
கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றுக்கு வேண்டுமானால் ‘நேர்ல வந்து அழைக்கட்டுமே’ என்று இருந்துவிடலாம். ஆனால் இது அவரவர் தொழில் செய்யும் இடம். அதற்கான கோவில். அதற்கான கூட்டம். அதற்கான பிரசங்கம்! தானாக வருவதுதானே முறையாக இருக்கும்? ஆனால் இந்த முறை நடக்க போகும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு முன்னணி ஹீரோக்கள் வருவார்களா? வந்தாலும் பேசுவார்களா? அதிலும் குறிப்பாக, ரஜினி, கமல், அஜீத் விஜய் வருவார்களா? என்றெல்லாம் கேள்விகள் மலிந்து…
Nadigar Sangam
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது !! “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000 க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம்…
Nadigar Sangam
ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின் என்று இரண்டாக பிரித்து அந்தஸ்தை ஏற்றிக் கொடுத்த இடமல்லவா? அதனால்தான் இந்த பக்தியும் பரவசமும்! கல்யாணம் கூட கட்டிடம் எழுந்த பின்புதான் என்று கூறிவரும் அவருக்கு, அல்லும் பகலும் ஒரே நினைப்புதான் இருக்க…
nadigar Sangam -Cm
நடிகர் நடிகைகள் கிள்ளியும் அள்ளியும் கொடுத்த நன்கொடை பணத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள். ஒரு கோடியோ பத்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை இவர்கள் முதல்வரிடம் கொடுத்த போது, இவ்ளோதான் உங்களால திரட்ட முடிஞ்சுதா என்றொரு கேள்வியை கேட்டாராம் அவர். முகத்தில் அசடு வழிய, “ஆமாம்மா…” என்று இவர்கள் சொன்னதாக தகவல்! ஒருவேளை இது உண்மையாக இருக்குமாயின், கோடி…
jkr
மூச்சுக்கு நானூறு தடவை “சங்கத்துல அரசியல் வராது” என்றெல்லாம் விஷால் முழங்கினாலும், ‘ஸாரி மை பிரதர்’ ஆக்குவார்கள் போலிருக்கிறது அவரை. வேணாம்னு சொன்னாலும் சரின்னு போகிற குணம் அரசியலுக்கு இருந்தேயில்லை. இப்போதும் அப்படிதான். ஆனால் இதில் நீதி இருக்கிறதா, நியாயம் இருக்கிறதா? வம்பு இருக்கிறதா? வழக்கு இருக்கிறதா? என்றெல்லாம் அலச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது மீடியா. நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற விஷால் அணி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க…
vishal team met kalaingner
நடிகர் சங்கத் தேர்தல் நல்லபடியா முடிஞ்சுது. சங்கத்து கல்வெட்டை படிச்சோமா, சட்டு சட்டுன்னு பிரச்சனையை முடிச்சோமா என்று போக விடுகிறதா அரசியல்? நாடாளும் முதல்வரின் ஆசியில்லாமல், வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன் பாக்சை கூட நிம்மதியாக பிரிக்க முடியாது என்பது தெரியாதா விஷால் அணிக்கு? அந்த ஒரு காரணத்திற்காகவே அரும்பாடு பட்டு அம்மாவை சந்தித்துவிட்டார்கள். ஒரு புறம் வெள்ள சேதம். அதிகாரிகளுடன் ஆலோசனை என்று கடும் பணி நெருக்கடியில் இருந்தாலும்,…
Vishal met CM
ஏதோ கச்சத்தீவை மீட்க கிளம்பியது போல கிளம்பிய விஷால் அணி, அதற்காக போராடிய போராட்டங்களையும், முண்டா தட்டல்களையும் நாடு ஒரு ஆக்ஷன் படம் போல பார்த்து மகிழ்ந்து சில வாரங்களாச்சு. பதவிக்கு வந்ததிலிருந்தே “முதல்வர் அம்மாவுக்கு நன்றி சொல்லணும். அவங்களை நேர்ல மீட் பண்ணணும்” என்று துடி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள். அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில், இவர்கள்…
முதல்வரை சந்தித்தபோது பேசியது என்ன?  நாசர், விஷால் விளக்கம் (வீடியோ)
Sathuranga -Vettai- Review
நெத்தியில நாமம் போடவென்றே ஸ்பெஷல் நாமக்கட்டியோடு திரிகிற கூட்டம் ஒன்று, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கலாம். ‘பாக்கெட் ஜாக்கிரதை’ என்பதுதான் இந்த படத்தின் அட்வைஸ்! இது ஏமாறுகிறவன் தப்பா? ஏமாற்றுகிறவனின் சாமர்த்தியமா? என்றெல்லாம் காதுக்கு பின்னாலிருக்கும் ‘கருத்து’ ஏரியாவை குத்தி குத்தி உணர்த்துகிறது ஒவ்வொரு காட்சியும். அட்றா சக்க… மனுஷன் ஏமாற்றதுக்குதான் எத்தனையெத்தனை வாய்ப்புகள். அதிலும் ஹீரோ பேசுகிற ஒவ்வொரு வசனமும் நச் நச். ‘நான் உங்களை ஏமாத்தல. ஏமாற்றதுக்கு ஒரு…

all news