nayanthara

nayan-hansi
அந்த விஷயத்தில் நயன்தாராவும் ஹன்சிகாவும் ஒண்ணுதான்! சிம்பு விஷயத்தில்தானே என்று நீங்கள் கேட்டால் அதற்கு பெயர் விஷமம்! நாம் சொல்லப்போவதோ விஷமம் இல்லை. விஷயம்! அதுவும் நல்ல விஷயம். பொதுவாகவே நடிகைகளுக்கு குழந்தை மனசு என்பதை அவர்கள் ஷுட்டிங்கில் இருக்கும் போது நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள். ஷாட் பிரேக்கில் அம்மா மடியில் படுத்துக் கொள்வது. அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (அப்படியொரு…
nayan
நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி? சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால் என்னாகும்? அதற்கு அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அவருக்கு அப்படிப்பட்ட ஹீரோக்களாகவே அமைவார்கள் என்பதை நிரூபித்தது தமிழ்சினிமா. ‘விசயகுமாரண்ணே ப்ப்ப்ப்பிரியாத்தான் இருக்காக… சோடி போடுறியளா?’ என்ற ரேஞ்சிலேயே அழைப்புகள் வந்தன. இதனால்…
alludu seenu
‘அப்பா… நயன்தாரா வேணும்ப்பா..’ என்று மகன் கேட்டால், ‘ஆகட்டும்டா மவனே ’ என்கிற அப்பாக்கள் டோலிவுட்டில் நிறையவே இருக்கிறார்கள். அப்படிதான் பெல்லம் கொண்டா சுரேஷ் என்கிற அப்பா, தன் மகனான பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாசுக்கு உறுதி கொடுத்திருக்கிறார். என்னங்கய்யா இது? வெல்லம் மண்டியில மூட்டை ஏத்துற மாதிரி டீல் பண்ணிக்கிறாங்க என்கிற சந்தேகம் ரசிக மஹா ஜனங்களுக்கு வந்திருக்கும். இல்லேன்னா வரணும்…! வேறொன்னுமில்லை. ‘அல்லுடூ சீனு’ என்ற படத்தில் அறிமுகமாகிறார்…
Simbu -kuralarasan
‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே… ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார் என்று பெரிதும் நம்பப்படுகிறார் குறளரசன். ஏனென்றால் அவரது அப்பா டி.ஆர் போட்ட பாடல்கள் அப்படி. இன்றும் எங்காவது டி.ராஜேந்தரின் பழைய பாடல்களை கேட்டால், வண்டி ஒரு நிமிஷம் நின்று அனுபவித்து விட்டு போகிற அளவுக்கு…
vijay sethupathy
சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி. யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா நயன்தாராவைதான்’ என்று. அதற்கப்புறம் அவரிடம் இது குறித்து கேட்ட மீடியாக்களிடம், ‘சும்மா தோணுச்சு சொன்னேன். அதுக்கு முன் பின் அர்த்தமெல்லாம் கற்பிச்சிராதீங்க’ என்றார். ம்ஹும்… இனி…
Amara Kaaviyam Movie
‘வீட்ல பாட்டு வுழுது… சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ஷன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன் ஆர்யாவை சந்திக்க போன ஜீவா சங்கர், வீட்டில் சத்யாவை பார்த்திருக்கிறார். ‘ஏம்ப்பா… நீயும் உங்க அண்ணன் மாதிரி ஹீரோவாகலாமே?’ என்று புகையை போட்டுவிட்டு போக, அதற்கப்புறம் சினிமா ஆசை…
nayan-arya
‘பிக்கப் டிராப் நடிகர் ’ என்றே பேர் வாங்கிவிட்ட ஆர்யாவுக்கு, இப்போது ஒரு நடிகையை ‘டிராப்’ பண்ணுவதுதான் பெரும் லட்சியமாக இருக்கிறது. யார் வம்பும் நமக்கு வேணாம்ப்பா… என்பதால் இருக்கலாம். அல்லது இவருக்கே அவர் அலுத்துப் போயிருக்கலாம். எப்படியோ? இந்த நியூஸ் ஆனந்த குயிலின் பாட்டு அல்ல! அந்த குயிலுக்கே வைக்கப்பட்ட வேட்டு! தெலுங்கில் ‘பொம்மரிலு’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால், பொம்மரிலு பாஸ்கர் என்றே எல்லாரும் அழைக்கிற…
surya-simbu-hair style
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின் டைரக்டர் பாண்டிராஜ். இவரிடம் சொல்லாமலே அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருந்தாராம். பேரதிர்ச்சியாகிவிட்டார் பாண்டி. ‘இந்த முடி வளர்ந்த பிறகுதானே ஷுட்டிங் வைக்க முடியும்? இப்படி பண்ணிட்டீங்களே?’ என்று…
pandiraj-simbu
சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம் சிரிக்குது. சிரிக்கட்டும்… ஒவ்வொருத்தரு வாயிலேயும் கமர்கட் வைக்கிறேன்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு ‘ஆக்ஷன் கட்’ சொல்ல ஆரம்பித்தார் பாண்டிராஜும். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் பாண்டிராஜின் நிம்மதியில் பான் பராக்கை துப்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு.…
hansika-nayanthara
குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த சூடு ஏறுவதற்குள், சட்டென அதில் நீரை பாய்ச்சி நெருப்பை குளிர வைத்தார் குஷ்பு. ‘இல்லை இல்லை இல்லவே இல்லை. நான் பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை’ என்று…
simbu-hansika
மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்… ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார் டி.டி. அப்படியே அவர் கண்ணில் ப்ரியா ஆனந்த் பட, படபடவென கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அதில் முக்கியமான கேள்வி இது. ‘விஜய் அமலாபால் கல்யாணம் முடிஞ்சாச்சு. கோடம்பாக்கத்துல…
anushka-new
ஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும்? பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே பிராப்பர்ட்டி என்று குறிப்பிடுவது யாரை? யாரும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு பாடல் வெளியீட்டு விழா மேடையைதான் நாம் அப்படி சொன்னோம். அண்மையில் தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை…
nayan-terror
விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து தாக்குவார்கள் அந்த வாண்டுகள். அப்போது கிச்சனில் சிக்கிக் கொள்ளும் நயன்தாரா, அங்கிருக்கும் மைதா மாவெல்லாம் தலையில் கொட்டி, அப்படியே கண்ணாடியில் தன்னை பார்த்து ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடுவார். தன்னை ‘பயங்கரமாக’ கற்பனை செய்து கொண்டுதான் அவ்வாறு கதறுவார். ஆனால்,…
arya-amarakaviyam
ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா எவ்வளவு ஸ்பெஷல் பர்சன் என்று. இந்த ஆடியோ விழாவுக்கு இயக்குனர் பாலா வந்திருந்தார், உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார் மற்றும் ஆர்யாவின் சொந்த பந்தமெல்லாம் வந்திருந்தாக… ஆனால் ஒருவரின் கண்ணுக்கும் இருவரை தவிர எவரையும் தெரியவில்லை. அவர்கள்…?…
queen
கங்கணா ரனவத் நடித்த ‘குயின்’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. அதற்கப்புறம் அந்த படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி. தென்னகத்திலிருந்து கிளம்பிப் போய், பெரிய சூட்கேஸாக கொடுத்து, குயினின் ரைட்ஸை வாங்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன். குயின் ரயிலேறி வந்தாலும் சரி, பிளைட் ஏறி வந்தாலும் சரி, தமிழகத்தில் கால் வைத்த பின்பு ராணிதானே? ‘ராணி’ என்ற பெயரிலேயே இந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறார் தியாகராஜன். தமிழ்,…
nayan
எல்லா சங்கங்களும் கையில் வைத்திருக்கிற ஆயுதம் எதுவென்றால் ரெட்! ஒத்துழைப்பு தரலேன்னா ஒரு வேலையும் தர மாட்டோம் என்கிற இந்த ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு மத யானைகளை கூட, மந்திகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடங்கி, அஞ்சி, சொன்ன கருத்தை சொன்ன வேகத்தில் வாபஸ் வாங்கிக் கொண்டவர்கள்தான் அதிகம். சொல்றதை கேட்கிறேன் என்று சரண்டர் ஆனவர்கள் அதைவிட அதிகம். ஆனால் நயன்தாராவிடம் அதெல்லாம் செல்லுபடியாகலையே என்று அதிர்ந்து போயிருக்கிறது தெலுங்கு…
nayan-tattoo
பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து குதுகலப்படலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் மனதளவில் இந்த காதலை நொறுவையில் போட்டு நசுக்கி நாளாச்சு. இனிமேல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார் பிரபுதேவா. மறுபடியும் அவரை நினைக்கறதா?…
karuthu
ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே என்று கவலைப்பட்டார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். ஆவேசப்பட்டார்கள். குறிப்பாக அமீர், பாலாஜி சக்திவேல், சசி, செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள், ‘அந்த படத்தில் ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லையே?’ என்றெல்லாம் கூறியபோது நம்ம இனத்துக்கே இப்படி நாக்கு குளறுதே என்று…
trisha
‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது? மகளை தனியாகவோ அல்லது தோழிகளுடனோ ஃபாரினுக்கெல்லாம் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக இங்கே டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் கூட த்ரிஷாவின் மம்மிக்கு இப்படியொரு டயலாக் தேவைப்படவில்லை.…
Nayanthara-action
இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலித்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஆக்ஷனுக்கு தாவி விடலாம் என்று நினைத்து வந்தார் நயன்தாரா. பூ ஒன்று புயலானது என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைத்து சக நடிகைகள் நகை நகை என்று நகைத்தாலும், தினந்தோறும் ஆக்ஷன் பயிற்சியாளரை வரவழைத்து ஆ… ஊ… என கத்துவதை அவர் நிறுத்தியபாடில்லை. எல்லாம் கஹானிக்கு முன்… அப்படத்தில் கொஞ்சம் ஆக்ஷனுக்கும் வேலை இருந்தது. அதையே பிள்ளையார் குத்தாக போட்டு தனது…
Page 11 of 12« First...89101112

all news